தமிழ்த் தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்பவா குறித்து சிலாகித்துக்கொண்டிருந்த பொழுது இணையர் அவர் எழுதிய கதைகளை படிதிருக்கிறீர்களா என்றார்.

எளிய மனிதர்களை குறித்தே எழுதுவார். என்று சொன்னார். எனக்கு ஆனந்த விகடன் புண்ணியத்தில் அவர் கதைகள் கிடைத்திருக்கலாம்.
ஒருமுறை திருவண்ணாமலையில் கிரிவலம் வந்துகொண்டிருந்த இளையராஜா, நீங்கள்தான் பவாவா, என்று சொல்லிவிட்டு நடக்க துவங்கியதைப் பகிர்ந்திருந்தார். அதுதான் பவா குறித்த என் முதல் அறிமுகம். அந்த நாட்களில் தமிழ்நாடு இளையராஜாவிற்கு அடிமையாக இருந்த காலம் வேறு. (தலைவன் அப்போதெல்லாம் மேடையில் பேசுவதை இப்படி சமூக ஊடகங்களில் ஊறப்போட்டு அடிக்கமாட்டார்கள் என்பது வேறு கதை)
சில ஆண்டுகளாகவே சுருதி டிவி, பவா கதை சொல்றார், (வாங்க போலாம் என்றும் அழைத்தார்கள், பேசாமல் போய்த்தொலைந்திருக்கலாம் இனி இந்த குரோனா சனியன் ஒழிந்தால்தான் பார்க்கலாம்!, வாய்ப்புகள் இருக்கும் பொழுது பயன்படுத்திக் கொள்ளவது என்பது எவ்வளவு அவசியம், ஹும், அய்யோ போச்சே என்று புலம்பிக் கொண்டிருக்கிறேன்) என்ற தகவல்கள் என் நட்புவட்டத்தில் உண்டு.
எப்படியோ என் நட்புக் கோரிக்கையும் ஏற்றுக் கொண்டுவிட்டார் பவா.
அவரது செயல்பாடுகளை அவப்போது மார்க் மச்சான் புண்ணியத்தில் பார்த்து வருவது உண்டு. இந்தக் கொரோனா காலத்தில், நான் அதிகம் வெறுக்கும் ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை முதல் முதலாக பாவாவின் கொடையால் கேட்டேன்.
இப்படி ஒரு அற்புத எழுத்து ஒரு மனநோயாளிக்கு சாத்தியமாகியிருக்கிறது என்பதுதான் என் வியப்பு.
பள்ளிக் குழந்தைகளைக் புலனம் வழியே கேட்கச் சொல்லி பணிக்கலாம் என்றிருக்கிறேன்.
இப்படியே இடக்கை, பால் சக்கரியா, அக்கினிக் காற்று, என தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
நேற்று நான் கேட்டது அபஸ்வரம்.
சட்டையெல்லாம் வேர்த்து ஊற்ற பிரபஞ்சனை புறக்கணிக்கும் ஜெயமோகனுக்கான பதிலாக சொன்ன அந்தக் கதையும் மனசில் ஆழமாக இறங்கிவிட்டது.
கு.அழகிரிசாமியின் "வெறும் நாய்" கதையை இணையரிடம் சொன்ன பொழுது ஒரு நிமிடம் தொடர்ந்து சிரித்த பிறகே முடிக்க முடிந்தது. பவா எப்படி சிரிக்காமல் (அளவோடு சிரித்துவிட்டு) சொல்கிறார் என்று தெரியவில்லை.
தமிழ் இலக்கிய உலகின் மின் பாய்ச்சலை தரிசித்துக் கொண்டிருக்கிறேன்.
ஏன் பவாவை போற்றுகிறேன், சக எழுத்தாளர்களைப் படிக்கக் கூடாது என்பது இலக்கிய ஆளுமைகள் பலரின் எழுதப்படாத விதி. அவர்களின் பாணியில் அவர்களை அறியாமல் சக எழுத்தாளர்களின் எழுத்து ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதுதான் அவர்கள் வாதம்.
இந்த வாதம், பக்கவாதம் எல்லாவற்றையும் தூக்கி கடாசிவிட்டு மனுஷன் எல்லோரையும் பேசுவதே பேராண்மை.
அதுவும் எந்தக் கதையும் தன் வாழ்பணுவத்தோடு பிணைத்துச் சொல்லும் பாணி, உதா. அபஸ்வரத்தின் அப்பாவை தன் அப்பாவோடு பொருத்திப் பார்க்கும் உளவியல் பிணைப்பு பவா வெற்றிபெறும் இடம்.
அவருக்கு நாம் லவ் யூ சொல்லவைக்கும் இடம்.
கதைகளை கேட்டு வளர்ந்த சமூகம் நம்பள்து என்பார்கள். எவ்வளவு உண்மை என்று பவா நிருபித்துக் கொண்டிருக்கிறார்.
என்ன பவாவின் கதைகள் மானுடம் பேசும் மகத்தான கதைகள்.
நம்மை மனிதர்களாக ஒன்றிணைக்கும் கதைகள்.
நம்மை, நம் சமூகத்தை மேம்படுத்தும் கதைகள்.
ஒரு வேண்டுகோள்
அவசியம் ஸ்ருதி டி.வி
வம்சி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்.
இது ஒரு ஆகப் பெரும் தமிழ்த்தொண்டு.

Comments

 1. சிறப்பான அறிமுகம்
  வரவேற்கிறேன்

  ReplyDelete
 2. அறிந்து கொண்டேன் கஸ்தூரி. பல விஷயங்களை. நானும் பார்க்கத் தொடங்குகிறேன்.

  துளசிதரன்

  கஸ்தூரி நான் தொடர்ந்து பார்க்கிறேன். பவாவின் காணொலிகளை.

  கீதா

  ReplyDelete
 3. இவ்வளவு சொன்ன பிறகு தட்ட முடியுமா? கட்டாயம் செய்து விடுகிறேன் நண்பரே!

  ReplyDelete
 4. ஜெமோ வை வெறுக்கும் நபர்கள் அதிகம் போலும்

  நானும் சுரதி டிவி மூலமே கதை சொல்லியை அறிந்தேன்

  ReplyDelete

Post a Comment

வருக வருக