போர்ட் வெர்சஸ் பெராரி 2019


ரேஸ் படங்கள் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்டால் அதிரிபுதிரியாய் ஹிட் அடிக்கும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் படம். 

ஹாலிவுட்டின் ஹெவி வெயிட் நட்சத்திரங்களான மாட் டீமன், கிறிஸ்டின் பேல் வேறு படத்தில். 

ஹாலிவுட் நட்சத்திரங்கள் குறித்து மீண்டும் ஒருமுறை பொறாமையாக புழுங்க வைத்தப்படம், ஒரு சட்டத்துக்குள் சிக்கி நான் ஆக்சன் படம்தான் பண்ணுவேன், நான் நிமிசத்திற்கு நூறுபேரை உதைக்கிறமாதிரி படமாக இருந்தால் செய்யலாம் என்று சொல்வதில்லை. 

போர்ன் ஐடென்டிட்டி போன்ற ஹை வால்டேஜ் ஆக்சன் படங்களில் நடித்துவிட்டு, ஹாலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தி என்கிற பட்டத்துடன்  இருக்கும் மாட் டீமன் எப்படி இப்படி ஒரு அண்டர் ப்ளே கதாபாத்திரத்தில்!

அதே போல பாட் மென் பட வரிசையில் புதிய உயரங்களை, வசூல்களை, ரசிக பட்டாளத்தை உருவாக்கிய கிறிஸ்டின் பேல் தன் உடலை, முகத்தை இப்படி மாற்றிக் கொண்டு நடிப்பதெல்லாம் நம்பவே முடியாத ஆச்சரியம். 

ஏண்டா கிறிஸ்டின் பேல் இப்படி முகத்தை எலும்புகள் துருத்துமாறு மாற்றிக் கொண்டார் என்றால் அவர் நடிக்கும் பாத்திரம் ஒரு உண்மையான நபரை சார்ந்தது, அவரது முகம் கவர்ச்சியற்றது. திடீரெனப் பார்த்தால் கூட யாரும் தள்ளிப் போய்விடும் உடலமைப்பு. இதுதான் பேல் நடித்த கென் மைல்ஸ் பாத்திரத்தின் உடலமைப்பு. 

மேலும் தன் திறனின் மீது அசாத்திய நம்பிக்கை,  கடன் சுமை, அதை பிரதிபலிக்கும் நடை, என உடல் மொழியை முற்றாக மாற்றி அசத்திவிட்டார் பேல்.

படத்தில் பல இடங்களை மனசில் அப்பிக் கொள்ளும், ரேஸ் ட்ராக்கில் பறக்கும் கார்களை பின்தொடரும் காமிரா, இசை, பேலின் முக பாவம் என பல விசயங்கள். 

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு இரவில் காரை எடுத்துக் கொண்டு தனது ட்ராக் குறித்து தன் மகனுக்கு பேல் விவரிக்கும் இடம். ட்ராக்கின் ஒரு சிறு கீரலைத் தனக்கான ஒரு மார்க்கராக வைத்திருக்கும் நுட்பத்தை தன் மகனுக்கு பகிரும் பொழுது படம் ஆடியன்சுக்கு வெகு நெருக்கமான படமாக மாறுகிறது. 

அதே போல பல ஆயிரம் கோடிகளைக் கொட்டியிருக்கிறேன் உங்கள் மீது என்று சொல்லி இவர்களின் ரேஸ் கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு வரும் ஹென்றி போர்டை எப்படி கையாள்கிறான் ஷெல்பி என்பதும் வாவ். 

ஒரு மெக்கானிக் காரின் பாகங்களைக் காட்டி விளக்கி கொண்டிருக்க, அவரை கையமர்த்தி ரேஸ் காரை பாகம் பாகமாக பார்க்கக் கூடாது, உள்ளே உட்காருங்க என்று சொல்லி காரை ராக்கெட்டாக மாற்றிவிட்டு, இப்போ எப்படி இருக்கு என்று சொன்னவுடன், ஹென்றி போர்ட் 2 தேம்பி, விம்மி அழுது இந்தக் காரை, இந்த பவரை எங்க தாத்தா உயிரோடு இருந்து பார்த்து அனுபவிக்கலையே என்று சொல்லுமிடம் வாவ் மொமென்ட். 

ரேஸ் பிரியர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். 

கார்பரேட் நுண் அரசியலும் புரியும். 

தொடர்வோம் 

அன்பன் 
மது 

Comments

  1. சுருக்கமான, அருமையான பதிவு.

    ReplyDelete
  2. நல்லதொரு அறிமுகம் கஸ்தூரி ரெங்கன். தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  3. படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்
    அவசியம் பார்க்கிறேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  4. நல்லதோர் அறிமுகம்

    ReplyDelete

Post a Comment

வருக வருக