கோவிட் - பொருளாதாரம் கடந்த காலமும் - எதிர் காலமும் covid the future from the past


நல்லாட்சி தந்ததற்காக தண்டிக்கப்பட்ட அரசியல்வாதி உண்டென்றால் அதிலும் கலைஞர் வருகிறார்.

1996-2001 ஆட்சியில் அவர் செய்த சாதனைகள் அதிகம்.

ஆனால் பொதுமக்கள் வேறு மாதிரி பேசினார்கள்.

அந்த அம்மா ஆட்சியில் இருந்துச்சு எல்லார் பையிலும் முழு ஐநூறு ரூவாத்தாள் இருந்துச்சு

ஆனா பாருங்க இன்னைக்கு சீட்டு கூட நடத்த முடியவில்லை, போலிஸ் கெடுபிடி இருக்கு என்று ஆட்சியை மாற்றி அம்மாவை உட்கார வைத்தார்கள்.

உண்மையில் அவை உலக பொருளாதார மந்த நிலை நிலவிய  நாட்கள்.

இந்தியர்களின் தனித்த சேமிப்பு பழக்கங்களினால் நாடு துவம்சமாகாமல் தப்பியது.

ஆனால் பல்வேறு நாடுகளில், குறிப்பாக கிழக்காசிய நாடுகளில் நடந்ததே வேறு.


மெர்சிடிஸ் பென்ஸ் காரில் சென்றவர்கள் ஒரே இரவில் ரோட்டில் நூடுல்ஸ் விற்று பிழைக்கவேண்டியதாயிற்று.


கிட்டத்தட்ட இரு தசாப்தங்களுக்கு பிறகு நம் முன் பின் அனுபவித்திராத கோவிட் பொருளாதார மந்தம் வந்துவிட்டது.


அன்றய இந்தியர்கள் சிறுசேமிப்பு பழக்கம் உள்ளவர்கள், ஆனால் நாம் கிரடிட் கார்டு அடிமைகள், எத்துனை வங்கிக் கடன் உண்டோ அத்துணையும் வாங்கி குவிப்பவர்களாக மாறியிருக்கிறோம்.


இந்த நிலையில் அமெரிக்காவின் பெரு நிறுவனங்கள் தொடர்ந்து திவால் அறிக்கைகளை வெளியிட்டுவருகின்றன.


அமெரிக்க வரலாற்றின் மறக்கமுடியாத பொருளாதார மந்தநிலை "கிரேட் டிப்ரெசன்" எனப்படுகிறது. 1929 முதல் 1933 வரை அமரிக்கர்கள் அடைந்த துயருக்கு அளவே இல்லை.


இன்று அமெரிக்காவில் இருக்கும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர்கள் மீண்டும் ஒரு மந்தநிலை வரவிருக்கிறது என்று கலக்கமூட்டும் அறிக்கையை வெளியிடுகிறார்கள்.


இந்தியா டாக்டர் மன்மோகன் சிங் இருந்த போதே தள்ளாடியது. இந்த சங்கி மங்கிகள் என்ன செய்துவிட முடியும்?


என்ன இன்னொரு பொருளாதார அறிஞர் நம் நாட்டை பற்றி சொல்வது கொஞ்சம் ஆறுதல்


"நீங்கள் என்னவேண்டுமானாலும் கணிக்கலாம் ஆனால் அவற்றை இந்தியா பொய்யாக்கும்" அது மீண்டெழும். இந்தியாவை குறித்து நீங்கள் எதிர்மறையாக முடிவெடுத்துவிட முடியாது"


இந்த நம்பிக்கை வரிகள்தான் இப்போதைய என் கலங்கரை விளக்கம்.


இனி வரும் காலங்களில் செல்வத்தை குவிப்பதைவிட அதை பகிர்ந்துகொள்வது நல்லது என்கிற புரிதலை கொடுக்கும் அனுபவங்கள் வரவிருக்கின்றன என்று அனுமானிக்கிறேன்.


தொடர்வோம் 

அனபன் 

மது 

Comments

  1. நம்பிக்கை வரிகள் - நன்று. நம்பிக்கையோடு இருப்போம்! நல்லதே நடக்குமென!

    ReplyDelete
  2. சரியே... ஆனால் சிறிது காலமாகும்...

    நடக்கும் என்பார் நடக்காது... நடக்காதென்பார் நடந்து விடும்...

    ReplyDelete

Post a Comment

வருக வருக