கே எல் ஆர் தி போட்டோ குரு KLR THE PHOTO GURU

உலகில் கூகிளுக்கு பிறகான மிகப்பெரிய தேடு பொறி யூ டயூப் என்பது பழைய செய்தி. 

அடியேன் நீண்ட நாட்களாக எக்செல் மற்றும் புதிய ஹாலிவுட் ட்ரைலர்களை பார்க்க மட்டுமே யூ டியூபை பயன்படுத்தி வந்தேன். 

இந்த லாக்டவுன் துவக்கத்தில் வேளாண் காணொளிகள், தொழில் முனைவு காணொளிகள் என பார்க்கத் துவங்கினேன்.


அடுத்து எனது நீண்டநாள் விருப்பமான போட்டோகிராபி குறித்து பார்க்கத் துவங்கினேன். ஆங்கிலத்தில் பல அருமையான சானல்கள் இருக்கின்றன.



ஆனால் தமிழில் ? 

போட்டோகிராபி குறித்து அறிய விரும்பும் இளம் தலைமுறைக்கு யூ டியூப் காணொளிகள் ஒரு பெரும் உந்துதல்.

எதேச்சையாக பார்த்த காணோளிகளில்  எல்.ஆர் தி போட்டோ குரு எனும் சானல் செமையாக இருந்தது.

நான் கே.எல்.ராஜா பொன்சிங், என்று இவர் கணீர் குரலில்,  அசாத்தியமான சரளத்தோடு,  தமிழில் புகைப்படக் கலையின்  நுட்பங்களை சொல்லும் பாங்கு அசாத்தியம்.

தொழில்முறை ரகசியங்களை இவ்வளவு வெளிப்படையாக வாரி வழங்கும் இவர் ஆம்பிசன்4 எனும் புகைப்பட பயிற்சியையும் நடத்திவருகிறார். பல்லாயிரம்பேருக்கு பயிற்சியளித்திருக்கிறார்.

ஒரு பின்னரவில் இவரது காணோளிகளின் தொழில் நுட்ப அடர்வைக் கண்டு, இவரது கம்பீரத் தமிழ் கண்டு ஒரு வாட்சப் தகவலை அனுப்பி வைத்தேன். 

பிறகு ஒரு சின்ன உரையாடல் அலைபேசிவழியே. 

அசத்தல் மனிதர்.

யூ டியூப் இன்றய சூழலில் விளைவித்திருக்கும் அறிவுப் புரட்சி அசாதரமானது. 

இவரது சானலை புகைப்படக் கலையின் நுட்பங்களை தெரிந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் தவிர்க்கவே கூடாது.

ஒரு பெல்லை அடித்துவையுங்கள்,

அன்பன்
மது 

Comments

  1. நல்லதொரு அறிமுகம் மது! தொடர்ந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. எனக்கும் புகைப்படக் கலையில் ஆர்வம் உண்டு. நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலையில் தேடுவதுண்டு. நீங்கள் சொல்லியிருப்பது போல ஆங்கிலத்தில் தகவல்கள் நிறைய இருக்கின்றன. தமிழில் ஒரு வலைத்தளம் கூட இருக்கிறது. அங்கு சென்ரு பார்ப்பதுண்டு. இங்கு நீங்கள் பகிர்ந்திருப்பது காணொளி எனவே மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது. பார்க்கிறேன் கஸ்தூரி. மிக்க நன்றி

    கீதா

    ReplyDelete
  3. நானும் ஒரு புகைப்பட கலைஞன் என்கிற முறையில், இந்த நல்லதொரு தகவலுக்கு நன்றி. AnandanRB

    ReplyDelete

Post a Comment

வருக வருக