ஒரு புகைப்படம் - பல கவிஞர்கள் - கவிதைகள்


 From https://www.facebook.com/annaisabellaphotography

இன்று காலை ஆனா இசபெல்லா போட்டோகிராபி பக்கத்திலிருந்து ஒரு படத்தை எனது முகநூலில் பகிர்ந்திருந்தேன். நண்பர்களிடம் அப்படத்திற்கேற்ற கவிதைகளை கேட்டேன். 

என்ன மகிழ்வு இப்போதுவரை கவிதைகள் வரிசை கட்டி மலைக்கவைக்கின்றன. 

1.

உன்னால் ஏற்பட்ட காயங்களை

ஒரு கவிதையில்

சொல்லலாம் என நினைத்தேன்.

காதலே புரியாத உனக்கு

கவிதை எங்கே புரியப்போகிறது.

- கவிவர்மன்


2.

இதயப்பாறையை ஊடறுத்த

காதல்

அருவியாய்

உன் காலடியில்

நீயோ பார்வையில்

உள்வாங்கி

பூமிக்குள்

புதைக்கிறாய்

சு.பாபுஇராசேந்திரன்

பகல் 12.30

09 04 2024

3.

உன்னைப் பார்த்த அருவி

உருகி நின்றதே

- Samy Krish

4.

நான் அபாயமில்லை

என்கிறது சிவப்பு

எனக்கு சமாதானமில்லையென

சலசலக்கிறது வெள்ளை.

- யாழிசை மணிவண்ணன்


5.

ஏன் கொட்டாது அருவி?

- Suresh Srinivasan


6.

பெண்ணென்றால் பேயும் இரங்கும்

அருவி மட்டும் விதிவிலக்கா?

இரங்கி இறங்கி தவழ்கிறது.

 - யாழிசை மணிவண்ணன்

7.

அருவி ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

- Thangam Moorthy

8.

நீர் பாயும் நிலமெல்லாம்

பூத்துதான் நிற்கும்

ஏதேனும் ஒரு மலர்.

- யாழிசை மணிவண்ணன்

9. 

மதிப்பெண் ஒன்று

பொருத்துக

கூந்தல் = அருவி

-யாழிசை மணிவண்ணன்

10.

தேவதைகளின் நிலம்

புகைமண்டலம்

குணம் ஈரம்.

-யாழிசை மணிவண்ணன்

11.

பேரழகியின்

பாதம் தொட்டு வணங்கும்

பேரருவி.

- Devatha Tamil Geetha

12.

ஆர்ப்பரிக்கும் அருவியே!

ஆரத்தழுவிக்கொள்....

அவளோடு

அமைதியாகு!

Kavibala Sethu

13.

உன் பேரிரைச்சலின்

அழகில்

மௌனம் கொள்கிறது

அருவி

-Srimalaiyappan Balachandran

14.

நூறடி அருவியும்

காலடி பணியும்

ஆறடி அருவி... அவள்!

-தகடூர் ப.அறிவொளி பொழிலமிழ்தன்

15.

அருவிக்கும் வெட்கம்வரும் 

என்பதை 

இன்றுதான் உணர்ந்தேன்

- Divanidikkasi

16.

தழுவத் துடிக்கும் நீர்ச் சாரல்,

தாங்கி நிற்கும் ஈரநிலம்,

அன்பை வெல்லப்போவது யார்?

அம்பை எண்ணம் மட்டுமே

உண்மையறியும்

-Sumathi

17.

ஆர்ப்பரிக்கும் அருவியும் அழகே

உன்னை கண்டு

-Thiru Gnani

18.

வெண் கூந்தலுக்குச்

செம்பூ சூடிக்

கொண்டாள்

இயற்கை அழகி

-Revathi Ram

19.

பெண் பார்க்கும்

விழிகளிலே மயங்கி

நிற்கிறது அருவி.....

- Saravanan Aarthy

20.

பேரருவி

-Karthik Deivanayagam


21.

தேக்கரண்டியளவு

குளிர்

கையளவு

இரைச்சல்

ஒரு சிட்டிகை

ஆவல் என

என் நேசத்திடம்

வாங்கிய

கைமாற்றில் தான்

ஆர்ப்பரிக்கிறது

இந்த அருவி!!

புலப்படுகிற

அழகு மட்டுமே

புலனாகிறது

உனக்கு!!

- மைதிலி கஸ்தூரிரங்கன்

22.

உன்னை காணாத ஆறு

கண்டதும் அருவியானது

-யாழ் எஸ் ராகவன்

23.

உன்

மேனியை

தழுவ

அர்ப்பரிக்கிறது

என் மனம் !!

-Panneer Selvam

24.

பார்வையின்

சாரலை விட

கனவுகளின்

இரைச்சலை விட

மொத்தத்தில்

நம் நேசத்தை விட

அத்தனை ஒன்று

பெரியதில்லை தானே

இந்த அருவி!

-மைதிலி கஸ்தூரிரங்கன்


25.


வெள்ளருவி இரசிக்கும்

செவ்வருவி

-Madhavan Subramanian


26.

****ஓரிடத்தில் ஈரருவி இருக்க கண்டேன் ஆடை களைந்ததொன்று

ஆடை நிறைந்தது ஒன்று

முன்னருவியில் நீர் விழ கண்டேன்

பின்னருவியில் நீர் (நானும் தான்)எல்லாம் விழ கண்டேன்......

***அருவி நீரில்

தழுவி மூழ்க

எனக்கும் ஆசை தான்

அங்கே நீ

இல்லாதிருந்திருந்தால்.........

இப்போது பார் ஆசைப் பெயர்ச்சி நடந்தேறி விட்டது......****

-Prakash Prakashraj


27.

உன்னை பார்த்து நதியும் வழிகிறதே

-Vasanth Kumar


28.

வழிந்தோடும் அருவியாய்

வருடும் உந்தன் கூந்தல் வாசத்தில் கரைந்ததே என் மனம்

-Ramanbarathwaaj Sridaran


29.

உன் அழகின்‌ முன் 

அந்த அருவியும் தோற்றுப்போனது...

-செல்வ.தமிழரசன்

30.

அவள் ஒரு அன்பான அருவி.

கோடையிலும் வற்றாத குற்றாலம்.

பாச மழையில் என்னை நனைத்து 

முந்தானையில் தலை துவட்டி விடும் என்றும்

புது அருவி.

-Selvaraju

31.

உள்ளத்தில் தகிக்கும் 

காதல் கனலை 

அணைக்க முடியுமா அருவியாலும்.

-Mani Karikalan


32.

தூரத்தில் இருந்த வெண் மேகம் 

உன்னை பார்க்க,

மழை நீராய் மாறி அருவியாக 

உனது கருவிழி கடைக்கண் பார்க்க,

மோட்சம் எ‌ன்ற கடலில் கலந்த தருணம்.

-Baskar Gopal

33.

மறந்து விடத்தான் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கின்றேன்,

அடுத்த நொடி

கொட்டும் அருவியாய் அலைபாய்கிறதே என்மனதிற்குள்

மந்திரப்புன்னகை மலர்ந்த

உன் நினைவுகள்....!

----அறந்தை மு.முபாரக்---(Mubarak Parveen Gift)

34.

A drop of water

from the

fringe of eyes

is turning

into cascade now!

Are you Glycerine?

Yes, you are!!

-Geethanjali Manchan

35.

உயரத்தில் அருவி

உதயத்தில் அழகி

ஜில்லென குளிப்பதுவோ எங்கள்

கண்கள் மட்டுமே......

-Anjalii Moorthy

36.

அவள் கடைக்கண் பார்த்தால்

"நீரற்று கிடக்கும் என் நெஞ்சம் எனும் நிலத்தில் மாரியாக பொழிந்து அருவியாக ஆர்ப்பரிக்கும் "

காதல் ❤️❤️❤️

-Iyalarasan Arasan

37.

என் வெம்மை யை உன்னாலும் குளிர்விக்க இயலவில்லை.!

என் மௌனத்தை உன் இரைச்சலும் உடைக்க வில்லை.!

-Ps Venkatesan


38

(1)

எக்காரணம் கொண்டும்

கைகளை உயர்த்துவதோ

அல்லது அணைப்பது போலவோ

ஒரு போதும் அருவியை

கொண்டாடி விடாதே

வீட்டில் உன் செல்ல நாய்குட்டிக்கு

இடமிருக்காது.

39

(2)

குறிப்பாக சிகப்பு உடையோடு

வெள்ளை அருவியினருகே நிற்காதே

இத்தனை அழகாய்

இவ்வளவு இதமாய்

யாரோ தமக்கு முத்தமிடத்தான்

வருகிறார்கள் என

அந்த மலையும்

மொத்த இயற்கையும்

ஒரு வேளை

மண்டியிட்டுவிட்டால்

உன் அருவி இனி எங்கேதான் போகும்..

40.

(3)

நீர் தோட்டத்தில்

சிகப்பு நிற பட்டாம்பூச்சி

41.

(4)

அந்த நீர் வீழ்வதில்

ஒரு நியாயம் இருக்கிறது

அவரவர் காதல்

அவரவர் பாடு...

42.

(5)

நான் எங்கே துவங்கினால் என்ன

எவ்வளவு ஓடினாலென்ன

உன் பாதமோ

உன் பாதையோ

உன் விரல்களையோ

வந்தடையும்

நேரங்களில் தான்

காதலாகி

கசிந்துருகி

நான் நீர்தான் என

உணர்கிறேன்...

- Suresh Suriya


43.

கவிதை எழுத வேண்டும் 

என நினைக்கின்றேன்...

ஆனால் 

ஏனோ அந்த சிவப்பழகி எ

ன் கண்களை மறைக்கின்றாள்...

-K Om Raj S


44.

உன்னைப் பார்த்தவுடன்

அருவி கூட

கடந்து செல்ல

தடுமாறி நிற்கின்றதே

-Senthil Kumar

45.

மூலிகை வேர் - 

வாசனை மரங்கள்-

 குட்டிக் குட்டிச் செடிகள்-

 காட்டுப் பூக்கள் - 

என இயற்கையின் ஆன்மாவை பிழிந்து 

வெண் ரசமாய் சடசடவென கொட்டுகிறாய் ..

 சட்டென ஊடுருவும் நேசங்களை 

- கனவில் தோன்றும் கற்பனைகளை - 

பற்றிக்கொள்ள துடிக்கும் காதலை - 

என்னுள் மொத்தமாக பிழிந்து ..

. நீயோ முகம் காட்டாமல் நின்று விடுகிறாய். 

கொட்டும் அருவியில் உடல் நனைந்திட ..

... நிற்கும் உனதன்பில் உயிர் கரைந்திட ஏங்கும் 

என்னை எள்ளி நகையாடிடும் எங்கிருந்தோ வரும் குயிலின் குரல். 

( கவிஞராக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்).

-Kumar Kumarseabird


46.

கருத்த

மேகக் கூந்தலுடன்

தான் , நான்

காத்திருந்தேன் ,

ஆண்டுகள் பலவாய் ...!

என் தாடி

வெளுத்து

தொங்குதடி ,

உன் நினைவால்..!

-Srinivasan Vignesh


47.

தயவுசெய்து திரும்பாதே 

அப்படியே நில்

 மின்னல் தாக்கிபார்வையற்றவனாவேன்

-Surjith Veeraiah



Sugantha Sundaram

Super coments la irukkum kavithaikalai oru book podalam


48.

Ramanbarathwaaj Sridaran

சில்லெனப்பரவும் நீர்த்துளிகளுக்கு ..

சிவப்புக் கம்பள வரவேற்பு..


49.

Kubenthiran Kuberan

உன் பாதங்களைத் தொடுவதற்காக 

வானத்திலிருந்து கொட்டுகிறது 

அந்த நீர் துளிகள். 

ஆனால் என்னவோ

 உன் பார்வை பட்டவுடன் 

ஆவியாகி செல்கிறது. 

நானோ உன் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறேன் 

தயவு செய்து திரும்பி விடாதே 

நானும் ஆவியாகி விடுவேன்.


50.

என்னவளே

என்

அருகில்

வந்த

போது

உன்

அழகை

கண்டு

மிரண்டு

போய்

கொட்டுகிறேன்

பெரு

அருவியாக!!!!

Panneer Selvam


51.

உன் அழகில்

பரவசப்பட்டு

ஆர்ப்பரிக்கிறது

அருவி...

தவப்புதல்வன்.(தவப்புதல்வன் சசிகுமார்)


52.

நெடுங்காலம்

நெடுந்தூரம்

நெடுவுயரம்

வீழ்ந்து அழியாமல்

குதித்ததுக் குதூகலிக்க

பெருகும் பேரன்புப் பிரவாகம்

மறைக்கிறாய்

ஆடைக்குள்

அழகையெல்லாம்

தெரிகிறாய்

வாசம் பரப்பும்

மலர்க்காடினும்

மூப்பறியாப் பேரழகாய்

தள்ளி நின்று கொல்லாமல்

என்னுள் மூழ்கி

எனக்கு மோட்சம் தா

கால் கொண்டு நடக்கவும்

கை கொண்டு விசிறவும்

கார் கூந்தல் பரப்பவும்

கற்றப் பெண் நதியே...

-Sembai Muruganandham


53.

படமே

கவிதையாய்...

இன்னொரு கவிதை எதற்கோ...

அய்ய்யே

இங்கே பாரேய்ன்...

அழகியின் அழகில் மயங்கி

வழியுது...

'ஜொள்' அருவி !

-கவிஞர் விடிவெள்ளி


 54.

அருவி நீர் முழுவதும் பருகிவிட

ஆசையில் பறக்குது சின்னக்குருவி.

Nilaa Bharathi

(.இதைவிட வா சிறந்த கவிதை எனக்கு வரப்போவுது)


55.

நீ நீர்மேல் மட்டுமா

நடக்கிறாய்

என் நினைவிலும்...

- Rajasekaran Raman


56.

உன்

 அசைவில் 

அசையும்

 அருவி!

- Kumar Sinnu


57.

அவளின்

நீ

ண்

கூ

ந்

ல்

- Panneer Selvam


59.

அருவி

உன்னை

பெண்ணைப்

பார்த்ததும்

உருகி பனியாகிப்

போனதேன்

-செல்வேந்திரன்


60.

சிவப்பு ரோஜாவைக் கண்டு

சிலிர்த்து விழும் அருவி!

Ravi V


61.

உன் காலடியில் வீழ்ந்து

கிடக்கிறேன் பேரருவியாய்!

அணையாக நின்றாலும்

உன் மதகுகளைக் கொஞ்சம் திற!

காதல் பாசனம் நடக்கட்டும்!

செந்தில் குமரன் சின்னதம்பி


இதே படத்தில் ஒரு நண்பர்  இதை நூலாக வெளியிடலாம் என்றார்...


மின் நூலாக செய்வோம்.  


அன்பன் மது 



Comments

  1. நயகராவில் சிகப்பு
    நுழைந்தால்
    சிக்கலாகிடுமே!

    ReplyDelete

  2. கவிதைகள் அருமை. இந்த படத்தை நானும் பார்த்தேன் ஆனால் என்ன நமக்குதான் கவிதை வராதே ஹும்ம்ம்

    ReplyDelete
  3. அமெரிக்காவின் பாரதி பாஸ்கரான எங்கள் கிரேஸ் விடுமுறையில் இருக்கும்போது இப்படி ஒரு போட்டி வைக்கலாமா? மின்னுலாக போடுவதர்கு முன் கொஞ்சம் பொருத்திருங்கள் எங்கள் கிரேஸின் கவிதையும் வரட்ட்டும்

    ReplyDelete

Post a Comment

வருக வருக