பாஸ்ட் சார்லி 2023

ஜேம்ஸ் பாண்டாக முத்திரை பதித்த பியர்ஸ் பிராஸ்னன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம். நான் ப்ராஸ்னன் ரசிகன் என்பதால் பார்த்தேன். 

ஹாலிவுட் அடித்து துவைத்துக்கொண்டிருக்கும் திரைவகைமை, கூலிப்படை, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் அதில் கதாநாயகன் ஒரு கூலியாக செயல்படுவதும் அவன் சந்திக்கும் மிரட்டல்கள் அவற்றை அவன் சமாளிக்கும் விதம். 

இதே வகையில் ஆயிரம் படங்களாவது தேறும், பிராஸ்னன் இருக்காரே என்று பார்த்தேன். அவசியம் பார்க்க வேண்டிய கட்டாயமெல்லாம் இல்லை. 

எதிர்பார்த்த திருப்பங்களோடு நகர்கிறது படம், படத்தில் துவக்கத்தில் வரும் இளம் கொலையாளி, காரை ஓட்ட தெரியாமல் ஒட்டி பரலோகம் செல்வதெல்லாம்  சிரிப்பை வரவழைக்கவில்லை. 

பரிந்துரைக்க ப்ராஸ்னன் படம் என்பதைத்தவிர வேறு ஒன்றுமில்லை படத்தில். 


போர்த ப்ரோடோகால்(1987) படத்தில் ஒற்றனாக வரும் ப்ராஸ்னன் தான் காரில் தான் கால்களுக்கிடையே ஒருவனை வைத்துக்கொண்டு, அவன் கழுத்தை அறுத்தவாறே காரின் மேற்கூரையை கைளால் சுழற்றி மூடும் இடத்தில் மனிதன் தெறிக்க விட்டிருப்பார். 

இப்படித்தில் அப்படி எதுவும் வாய்ப்புகள் இல்லை ப்ராஸ்னனுக்கு. 


ஹாலிவுட் சறுக்கல்களில் ஒன்று. 


தொடர்வோம் 

அன்பன் 
மது 

 

Comments