பிளாட்லைனர்ஸ் (1990)



 ஜோயல் ஷூமேக்கர் இயக்கத்தில் பெருமளவு பேசப்பட்ட படங்களில் ஒன்று பிளாட்லைனர்ஸ், என்சாம்பில் காஸ்ட் எனும் அளவிற்கு பெரிய நட்சத்திரங்கள் அசத்திய படம். 

மரணத்தின் அருகே சென்ற அனுபவத்தை என்.டி.ஈ  என்று சொல்வார்கள். நியர் டெத் இக்ஸ்பீரியன்ஸ்,  இதைக்குறித்து தொடர்ந்து பதிவு செய்துவருகிறாள் டாக்டர் மானுஸ், (ஜூலியா ராபர்ட்ஸ்), அவளுடைய சகாக்கள் நான்கு பேர், இவர்களை சுற்றி சுழலும் கதை. 

இந்த ஐந்து மருத்துவ மாணவர்களும் ரொம்ப விபரீதமான ஒரு பரிசோதனையில் இறங்குகிறார்கள். குறிப்பாக டாக்டர் நெல்சன் மற்ற நால்வரையும் தன்னுடன் இந்த பரிசோதனையில் ஈடுபட சொல்கிறான். 

நெல்சனைப் பொறுத்தவரை அவனுடைய ஆய்வு மனிதகுலத்திற்கு அறிவியல் தரப்போகும் மிகப்பெரும் கொடை, ஆய்வு ரொம்ப சிம்பிள் மருத்துவ உதவியோடு செத்துப் போய் மீண்டும்  உயிரோடு வரவேண்டும். 

அப்படி இறக்கின்ற பொழுது உயிர் என்ன ஆகிறது, எங்கே போகிறது, என்ன என்ன அனுபவங்கள் ஏற்படுகின்றன என்பதை பதிவு செய்துகொள்வதுதான் ஆய்வு. 

தன் கைப்பட இதுகுறித்து ஒரு கடிதத்தை எழுதி நண்பர்களிடம் கொடுத்துவிட்டு ஆய்வைத் துவங்குகிறான் நெல்சன். 

இந்த புள்ளியிலிருந்து ஒரு அறிவியல் மற்றும் மருத்துவ வகைமையிலிருந்து திகில் பட வரிசைக்கு தாவுகிறது படம். 

கதையை எழுதிய பீட்டர் பிளார்டி குறித்து ஒரு பெரிய வியப்பை ஏற்படுத்துகிறது படம். 

கெவின் பேக்கன் தான் ஒரு நாத்தீகன் என்று சொல்வதும், அவனுடைய பிரச்சனையை நேரே எதிர்கொள்வதும் செமையான அனுபவம். 

துவக்கத்தில் இந்த ஆய்வுக்கு உட்படமாட்டேன் என்று சொன்ன மற்ற நால்வரும் போட்டிபோட்டுக்கொண்டு ஆய்வில் ஈடுபடுவதும், அதன் பின்விளைவுகளில் சிக்கி சிதைவதும் செமை. 

கிளைமாக்ஸ் வேற லெவல், அனுபவம். 

திரைப்பட ரசிகர்கள் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய படம். 

  • Kiefer Sutherland, Julia Roberts, Kevin Bacon, William Baldwin, Oliver Platt, Kimberly Scott"
  • "Cinematography by Jan de Bont"
  • "Edited by Robert Brown"
  • "Music by James Newton Howard"
  • "Production Company: Stonebridge Entertainment"
  • "Distributed by Columbia Pictures"

Comments