ரெபல் மூன் 2023


 

ஜாக் ஸ்னைடர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் நெட்பிளிக்ஸ் தொடர். 

நாயகி மைய கதைக்களம்,  செயற்கை நுண்ணறிவு கொண்ட மனிதர்கள் என்பதை கடந்து ஆன்மாவை கொண்ட இயந்திர மனிதர்கள் இந்த தொடரில் புதுமையாக  

அதைவிட மூர்ச்சையடையச் செய்யும் இன்னொரு விஷயம், ஜிம்னி என்கிற இந்த ரோபாட்டாக நடித்திருப்பது அசுரன் ஆந்தனி ஹாப்கின்ஸ்! குரல் நடிப்பு என்கிற பொழுதும் ரொம்ப அழுத்தமான கதாபாத்திரம். 

தங்களின் ஒரே  நம்பிக்கையான இளவரசி கொல்லப்பட்ட பொழுது வாட்களை துறக்கும் ஜிம்னி பிரிவு ரோபாட்கள், அமைதியான வாழ்வை தேர்தெடுக்கின்றன.ஆனால் மமதை கொண்ட மனித வீரர்கள் ஜிம்னிகளை துன்புறுத்தி ரசிக்கிறார்கள். இப்படி நகரும் கதையில், தனது அடிப்படை நம்பிக்கைகளை, கனவுகளை இழந்துவிட்டதாக சொல்கிறான் ஜிம்னி. 

தொலைதூர கிரகத்திலிருக்கும் ஒருத்தி அதை மறுத்து, அந்த உணர்வுகள் உனக்குள்ளே இன்னும் இருக்கின்றன, என்று சொல்லி ஒரு மலர்கிரீடத்தை வைத்து அவன் இயந்திர கன்னத்தை வருடுகிறாள், அதுவரை ஒளிராத அத்துணை புள்ளிகளும் ஒளிர்கின்றன ஜிம்னிக்கு ! 

சர்வ நிச்சயமாக ஒரு நல்ல காட்சி அனுபவம் இந்த தொடர். 

வன்முறையை விரும்பி அல்ல, வேண்டா வெறுப்பாகவே கையிலெடுக்கும் கதாநாயகி, அசத்தலான அவளது குழு என இந்த தொடர் பார்வையாளனை கட்டிப்போட்டுவிடுகிறது. சில புள்ளிகளில் இந்த தொடர் தமிழ் திரையிலிருந்து இன்ஸ்பைர் ஆகியிருப்பது போல தெரிகிறது. ஜிம்னி ஒளிரும் புள்ளிகளில், மனதில் இசைக்கும் இரும்பிலே இருதயம் முளைத்ததே பாடல், இளவரசியை கொன்றது யார் என்கிற கேள்வியில் "பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றான்?" என்கிற கேள்வி மனதில். இந்திய திரை தனது பாதிப்பை ஹாலிவுட்டுக்கு செலுத்தும் நாட்கள் இவை. 

அவசியம் பாருங்கள்.

அன்பன் 

மது 

Comments