லியாம் நீசன் படங்கள் என்றாலே மர்மமான அதிரடி ஆக்சன் சம்பவங்களுக்கு பஞ்சம் இருக்காது.
இந்த படத்தில் பனி உழவர் (பாதையில் படிந்திருக்கும் பணியை அகற்றி பாதையை உருவாக்கும் வேலை) வேலையில் பிஸியாக இருக்கிறார். இவர் வசிக்கிற பகுதி பணிச்செருக்கு விளையாட்டுக்களுக்கு பெயர் போன பகுதி. எனவே விருந்தினர் வருகை அதிகம் இருக்கிற பகுதி அவர்களுக்கு தேவையான போதை மருந்துகளும் அங்கே தாராளமாக புழங்கும். இதை கண்டுகொள்ளாத காவல்துறையும் உண்டு.
காவல்துறையின் லாஜிக் ரொம்ப எளிமையானது சந்தோசமா இருக்க வர்ற இடத்துல இதை எல்லாம் தடை பண்ணிக்கிட்டு இருக்க கூடாது அவ்வளவுதான்.
திடுமென்று ஒரு நாள் லியாம் நீசனின் மகன் மர்மமான முறையில் இறந்து போய்விடுகிறார்.
மருத்துவமனையில் வெகு அலட்சியமாக அளவுக்கு அதிகமான போதை மருந்து பயன்படுத்தியதால் மரணம் என்று சொல்லிவிடுகிறார்கள்.
ஒரு நாள் கூட அவன் போதை மறந்து பயன்படுத்தியதே இல்லை என்பதுதான் உண்மை.
இதிலிருந்து படத்தின் அதிரடிகள் துவங்க ஆரம்பிக்கும் என்பது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை.
ரத்தக் கலரியான போதை மருந்து கும்பல்களுக்கு இடையேயான மோதலை காட்டி இருக்கிறார்கள்.
ஒரு தபா பார்க்கலாம்.
தொடர்வோம்
அன்பன்
மது
இப்படியெல்லாம் படங்கள் இருப்பது உங்களுக்கு எப்படித்தான் தெரிய வருமோ! மிகச் சுருக்கமான, நல்ல அறிமுகம்!
ReplyDelete