யு எப் ஓ ஸ்வீடன்

யூ எஃப் ஓ ஸ்வீடன் 2021 வந்த படம். 

வானில் தென்படும் அடையாளம் காண முடியாத பறக்கும் தட்டுகளை குறித்த படங்கள் நிறையவே வந்து விட்டன. 

இந்தப் படம் அவற்றிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்படுகிறது. 

நிஜ வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக படமாக்கி இருக்கிறார்கள். 

டென்னிஸ் சிறுவயதில் அவளது தந்தையுடன் இந்த ஆய்வில் ஈடுபடுகிறார். 

எப்படியோ அவர் தந்தை காணாமல் போகிறார்.

தந்தை இல்லாமல் தத்தெடுக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் அவள் வளரும் சூழலில் அவள் மனதில் தீராத ஏக்கமாக இருக்கும் தந்தை குறித்த புதிரை அவிழ்க்க சாகசப்பயணம் ஒன்றை மேற்கொள்கிறாள்.

தன்னுடைய தீராத அறிவியல் தாகத்தால் மறைந்து போன தந்தை குறித்த தேடல்கள் அவளுக்கு வாழ்க்கையை புரிய வைக்கிறது. 

நிதானமான படங்களை ரசித்து பார்ப்பவர்கள் தவிர்க்காமல் பார்க்கலாம். 

தொடர்வோம் 
அன்பன் 
மது

Comments