புத்தகத் திருவிழா நன்றியறிவிப்பு கூட்டம்

கடும் சவால்களுக்கு இடையே வெற்றிகரமாக நடந்து முடிந்த புத்தகத் திருவிழாவின் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா வழக்கம் போல அறிவியல் இயக்க அரங்கில் நிகழ்ந்தது.

விழாவை வெற்றிகரமாக முன்னெடுத்து நகர்த்தியோர், திருவிழாவை மக்கள் இயக்கமாக நிகழ்த்திய அறிவியல் இயக்கத் தொண்டர்கள், அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், வீதி, கணிணித்தமிழ்ச்சங்கம், ஐடியா ப்ளஸ், த.மு.எ.க.ச தொண்டர்கள் என பல அமைப்புகளும் ஆளுமைகளும் ஒன்று கூடி தங்கள் நன்றிகளைப் பரிமாறிக்கொண்டார்கள். 

இந்த ஆண்டு நிகழ்வுக்கு பெரும் இடையூறாக இருந்த விஷயங்களையும் பேச்சினூடே பகிர்ந்துகொண்டனர். 

பாறைகள் இல்லாவிட்டால் ஓடைக்கேது சங்கீதம்?

இடையூறுகள் ஆரோக்கியமானவையே...

மொத்தத்தில் பல இடையூறுகளை மிரட்டல்களைத் தாண்டி இவ்வாண்டில் ஒருகோடிக்கும் அதிகமான நூற்கள் விற்பனையாகியிருகின்றன!

இதற்கும் கமென்ட் வந்தது ...

ஒரு கோடிப்பு...

ஆமா நீ பார்த்த என்கிற வழக்கமான கமெண்ட்.

ஆனால் இந்த கமெண்ட்டை புள்ளிவிவரங்களோடு தகர்த்தார் அண்ணன் நிலவன். 

இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் கூட்டு தலைமையே. 

குறிப்பாக ராஜ்குமார் அவர்கள் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி தலைவர்களை, வார்டு உறுப்பினர்களை நேரடியாக அணுகும் விசயத்தை கையில் எடுத்தது செமையான விளைவுகளைத் தந்தது. 

இரண்டு மணிநேரத்துக்கும் அதிகமாக பயணித்து புதுக்கோட்டை வந்து திருவிழாவில் குழந்தைகள் பங்கெடுத்தனர் என்றால் அதற்கு பின்னணியில் இருந்தது இந்த அசத்தல் முடிவுதான். 

மூன்று ஆண்டுகளில் இல்லாத மக்களின் பேராதரவு கிடைத்ததற்கும் இதுவே காரணம். 

என் உறவினர்களின் பலரை இம்முறை நூற்களோடு பார்க்க முடிந்தது. 

குறிப்பாக யோசியோடு இணைந்து ஐடியா பிளஸ் எடுத்த கல்லூரி உரைகள் முன்னெடுப்பும் அருமை. 

என் பங்கிற்கு ஜே.ஜே கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களுக்கும், செந்தூரன் பாலி மாணவர்களுக்கும் வாசிப்பின் கனிகள் குறித்து அறிமுக உரை ஆற்றினேன். 

முகநூல் நண்பர்களை ஒன்றிணைத்த முயற்சியும் ஒரு நல்ல துவக்கமே. 

அடுத்த ஆண்டு பார்ப்போம். 

தற்போதைக்கு புத்தகத் திருவிழா நன்முறையில் வெற்றிகரமாக நிறைவுற்றது மகிழ்வே. 

அன்பன்
 மது


Comments