ஈமிஸ் சில டிப்ஸ்



 ஈமிஸ் கல்வி மேலாண்மைக் காண தமிழக அரசின் தளம் ஒன்று செயல்பட்டுவருவது ஆசிரியர்களுக்கு தெரிந்ததே. இந்த தளத்தை கணிப்பொறி ஆசிரியர்கள் விரைந்து பயன்படுத்துவார்கள். அது அவர்கள் பேட்டை.

இருந்தாலும் சில டிப்ஸ் இருந்தால் அனைவரும் விரைவாக தரவுகளை உள்ளிட எதுவாக இருக்கும் என்பதால் இந்தப்பதிவு.

பிரௌசரில் தளத்தின் உரலியை சரியாக தட்டச்சு செய்து தளத்தை அடைவது முதல்கட்டம்.

பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் தந்து முறையாக தளத்தின் உங்கள் பள்ளியின் பக்கத்தை திறப்பது இரண்டாவது படி.

முதலில் வரும் பக்கம் உங்கள் பள்ளியின் ஹோம் பக்கம். வலதுபுற மேல் மூலையில் உங்கள் பள்ளியின் பெயர் தெரிவதை உறுதி செய்யுங்கள்.

நீங்கள் ஏற்கனேவே மாணவர் விவரங்களை உள்ளீடு செய்திருந்தால் அவர்களின் விவரம் ஒரு பட்டியலில் காட்டப்படும். இல்லாவிட்டால் நீங்கள் விவரங்களை உள்ளிட உள்ளிட அவை பட்டியலில் காண்பிக்கப்படும்.

முதலில் உள்ள பட்டியல் பள்ளியின் மொத்த வகுப்புகளையும் அதில் நாம் உள்ளீடு செய்த மாணவர் எண்ணிக்கையையும், மொத்தமாகவும், வகுப்புவரியாகவும் காட்டும்.

இரண்டாவது பட்டியலில் முக்கிமானது யூனிக் ஐடி மட்டும் வியு பட்டன்.

வியு பட்டணை அழுத்தினால் குறிப்பிட்ட மாணவரின் விவரம் திரையில் வரும். நீங்கள் சரிபார்த்து தவறை சரி செய்யவும் முடியும்.

புதியதாக ஒரு மாணவர் விவரத்தை உள்ளிட ஆட் சைல்ட் பட்டனை அழுத்தினால் ஒரு நீண்ட படிவம் வரும்.

 அப்படியே டேட்டா கலக்சன் பார்மட் தான் அது என்பதை பார்த்த உடனே கண்டுபிடித்திருபீர்கள்.

நம்ம ஆட்கள் வெறியாவது காலண்டர் முறை பிறந்தநாள் உள்ளிடைதான். மிக முக்கியமான உள்ளிடு எனபதால் வேறு வழியில்லை. நல்லா  தடவி உள்ளிடவும்.

மத்தபடி நீங்கள் பாய் என்று உள்ளிட பி என்கிற எழுத்தை அழுத்தினாலே போதுமானது.

விளக்கமா பார்ப்போம்.

மாணவர் பெயர் கூட ஏற்கனவே  நீங்கள் உள்ளிடு செய்த இன்னொரு மாணவனை ஒத்திருந்தால் அடிக்க தேவையில்லை!

ஆனந்த் என இரண்டு பேர் இருந்தால் முதல் ஆனந்தை அவரின் முழுமையான விவரங்களுடன் உள்ளிடு செய்த பின் அடுத்த ஆனந்திற்கு பெயர் என்கிற கட்டத்தில் கர்சர் வந்த பின் எ என்று ஒரு எழுத்தை அடித்தாலே போதும் அதற்க்கு முன் எ என்கிற எழுத்தில் அடித்த அனைத்து பெயர்களும் ஒரு பட்டியலை தொங்குவதை பார்த்திருப்பீர்கள்.

கீழ் அம்புக் குறி பட்டன் மூலம்  சரியான பெயரை தேர்ந்தெடுத்து என்டர் பட்டனை தட்டினாலே போதும். அடுத்து டாப் பட்டன் அடித்தால் அடுத்த கட்டத்திற்கு போகலாம்.

இந்த உதாரணத்தில் எ என்று அடித்தவுடன் ஆனந்த், அமர், அனிதா என எ வில் ஏற்கனவே நீங்கள் உள்ளிடு செய்த  அனைத்து பெயர்களும் தொங்கும். கீழ் அம்புகுறி மூலம் சரியான பெயரை(ஆனந்தை) தேர்ந்தெடுத்தால் போதும். அடுத்து டாப் பட்டன், அடுத்த கட்டம்.

மேலும் பாய் என்றல் b என்றும் கேர்ள் என்றால் ஜி என்ற ஒற்றை எழுத்தை அழுத்தினாலே போதும். மீண்டும் டாப் பட்டன்.

இதே போல் இந்தியனுக்கு ஐ என்றும் ஹிந்துவுக்கு ஹச்  என்று மட்டுமே அடித்தால் போதுமானது,  (கிறிஸ்டியனுக்கு சி, முஸ்லீமிற்கு எம் அதர்ஸ்  ஒ )

இதே மாதிரி ஜாதிப் பெயருக்கு ஒரு எழுத்து போதும், குறிப்பிட்ட ஜாதி வரும் வரை அந்த ஜாதியின் முதல் எழுத்தை மீண்டும் மீண்டும் அழுத்தினால் போதுமானது.

 சப் காஸ்ட் பட்டையில் இதேபோல் ஒரு எழுத்தை உள்ளீடு செய்த உடன் தோரணமாய் தொங்கும் ஏற்க்கனவே உள்ளீடு செய்த தரவுகளில் சரியானதை தேர்ந்த்தெடுத்து என்டர் அடிக்கவும். பிற கட்டங்களையும்  இதே போல் நிரப்பினால் விரைவாக முடிக்கலாம் வேலையை.

சில டிப்ஸ்


1. யூனிக் ஐடியுடன் ப்ரௌசெர் உரலியில் பட்டையில் தெரியும் மாணவர் ரெகார்ட் எண்ணையும் எழுதிக்கொண்டால் பின்னால் உதவும்.

2. மிகுந்த கவனத்துடன் தரவுகளை உள்ளிடவும். 

இறுதியாக சில வார்த்தைகள் 

கல்வித்துறை வரலாற்றில் இது ஒரு மைல் கல் நிகழ்வு, சின்ன சின்ன சங்கடங்களை தவிர்த்து மகிழ்வுடனும் பெருமிதத்துடனும் செயல்படலாம்.

 




Comments