நவநீதம் பிள்ளை -ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி..

பெருமளவில் மக்கள் கதறி அழுததை நான் இதற்கு முன்னர் எங்கும் காணவில்லை – நவநீதம் பிள்ளை


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை இலங்கை-க்கு மேற்கொண்ட ஏழு நாள் பயணத்தின் போது ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி..



சிறீலங்கா படையினர் தம்மை கண்காணித்து வருவதாக தமிழ் மக்கள்; தெரிவித்துள்ளனர். படையினர் அங்கு உள்ளதை இட்டு அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். எனவே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு கவனம் செலுத்த வேண்டும். பெருமளவில் மக்கள் கதறி அழுததை நான் இதற்கு முன்னர் எங்கும் காணவில்லை. இவ்வளவு பெருமளவில் மக்களிடம் வேதனை இருப்பதை நான் எங்கும் காணவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.


கேள்வி: சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என நீங்கள் தெரிவித்து வந்திருந்தீர்கள். ஆனால் உங்களின் இந்த பயணத்தின் பின்னர் அதில் ஏதும் மாற்றம் உண்டா?

பதில்: 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்காவில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் அறிக்கைகளை முன்வைத்திருந்தேன். அப்போது, சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்திருந்தேன். ஏனெனில் அப்போது சிறீலங்காவில் விசாரணை குழுக்கள் எதுவும் இல்லை.

ஆனால் சிறீலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்த பின்னர் தேசிய மட்டத்திலான விசாரணைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும், அதற்கு உதவ வேண்டும் எனவும் நான் விரும்பினேன். எனவே தான் சுயாதீன விசாரணைகள் வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதேசமயம், அனைத்துலக விசாரணை என்ற எனது முன்னைய கோரிக்கையில் இருந்து பின்வாங்கினேன்.

கேள்வி: ஆக, சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழு செயற்திறன் மிக்கது என நீங்கள் கூறுகின்றீர்களா?

பதில்: எனது சிறீலங்காவில் இடம்பெற்ற எல்ல சம்பவங்களினதும் விசாரணைகளை அது உள்ளடக்கவில்லை. எனது மட்டுமல்லாது, ஐ.நா மனித உரிமை சபையினதும் எதிர்பார்ப்பு இது. எனவே தான் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஐ.நா மனித உரிமை சபையின் முதலாவது தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது.

நல்லிணக்க ஆணைக்குழு எனது எதிர்பார்ப்புக்கள் பலவற்றை கொண்டிராதபோதும், எமது அலுவலகம் அதற்கு உதவ முன்வந்திருந்தது.

கேள்வி: சிறீலங்கா தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என நீங்கள் முன்னர் தெரிவித்திருந்தீர்கள், தற்போதும் அந்த தேவை உள்ளதா?

பதில்: நாம் களத்தில் உள்ளபோது அது உதவியாக இருக்கும் என்பது யதார்த்தமானது. 140 அதிகாரிகளைக் கொண்ட அலுவலகம் ஒன்றை நாம் கொலம்பியாவில் அமைத்திருந்தோம். புல வருடங்களாக அது செயற்பட்டது.

அரசாங்கத்தின் அனுமதியுடன் மட்டுமே எம்மால் அலுவலகத்தை அமைக்க முடியும். முன்னர் இங்கு நாம் ஒரு அலுவலகத்தை கொண்டிருந்தோம். ஆனால் கடந்த ஆறு வருடங்களாக ஒரு அதிகாரியே இங்கு பணியாற்றி வருகின்றார். அவர் ஐ.நா அலுவலகத்தில் பணியாற்றும் மனித உரிமை ஆலோசகர். நாம் அலுவலகம் அமைப்பது ஒரு உடன்பாடு, இவ்வாறான அலுவலகங்கள் உலகின் பல பகுதிகளில் உள்ளன.

கேள்வி: இது தொடர்பில் சிறீலங்கா அரசுடன் பேசி இருந்தீர்களா?

பதில்: நான் பேசவில்லை. ஆனால் ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகளில் இதுவும் ஒன்று என்பதை அரசு நன்கு அறியும். எனவே அவர்கள் உதவியை கோரமுடியும். நாம் அதற்கு தயாராக உள்ளோம்.

அதேசயம், சிறீலங்காவில் உள்ள ஐ.நா குழுவில் மனித உரிமை ஆலோசகர் பணியாற்ற சிறீலங்கா அரசு அனுமதித்தது தொடர்பில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

கேள்வி: வடபகுதிற்கான பயணத்தில் அதன் நிலை மற்றும் அங்குள்ள மக்கள் தொடர்பில் நீங்கள் பெற்றுக்கொண்ட அனுபவம் என்ன?

பதில்: தற்போதைய மாற்றம் மக்களுக்கு நல்லது, உதாரணமாக வைத்தியசாலைகள் மற்றும் ஆலயங்களுக்கான வீதி அனுமதிகள் மற்றும் வசதிகள். ஆதனை அவர்கள் என்னிடம் கூறினார்கள். வீதி அபிவிருத்தி தொடர்பில் அவர்கள்
எனினும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்பட்டுள்ளபோதும், அவர்களின் தொழில் பாதிப்படைந்துள்ளது. பொதுமக்களையும், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ளவர்களையும் நான் சந்தித்திருந்தேன்.

சிறீலங்கா படையினர் தம்மை கண்காணித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். படையினர் அங்கு உள்ளதை இட்டு அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். எனவே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு கவனம் செலுத்த வேண்டும். பெருமளவில் மக்கள் கதறி அழுததை நான் இதற்கு முன்னர் எங்கும் காணவில்லை. இவ்வளவு பெருமளவில் மக்களிடம் வேதனை இருப்பதை நான் எங்கும் காணவில்லை.

navanitham pillaiகேள்வி: உங்களுடன் பேசிய மக்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் அதனை உங்களின் அலுவலகம் எவ்வாறு கையாளும், அவர்களுக்கு பாதுகாப்பு தருமா?

பதில்: எமது அலுவலகம் மக்களை பாதுகாப்பது மிகவும் கடினமானது. ஆனால் தொடர்ச்சியாக ஆய்வு செய்து அதனை அரசாங்கத்திற்கு தெரிவிக்க முடியும். ஆனால் அனைத்துலக மட்டத்தில் அதனை தெரிவிக்கும் அதிகாரம் உள்ளது.

கேள்வி: சிறீலங்காவில் ஒரு இனஅழிப்பு நிகழ்வதாக புலம்பெயர் தமிழ் மக்கள் தெரிவித்துவருகின்றனர். உங்களின் பயணத்தின்போது அதனை உணர்ந்தீர்களா?

பதில்: யாரும் அந்த வார்த்தையை என்னிடம் தெரிவிக்கவில்லை. அதிகாரிகளோ அல்லது பொது அமைப்புக்களோ அதனை தெரிவிக்கவில்லை. இனஅழிப்பு என்பது சட்டபூர்வமான வார்த்தை. ஒரு இனத்தையோ அல்லது நாட்டையோ முழுமையாகவே அல்லது பகுதியாகவே அழிப்பதற்கான ஆதாரம் இருக்க வேண்டும். இதுவே றுவாண்டாவில் நிகழ்ந்தது.

அது ஒரு மிகவும் தெளிவான இனஅழிப்பு. ஆனால் அதனை ஆய்வு செய்யும் பணி எனது அல்ல. ஒரு பூரண விசாரணையின் பின்னரே நீதிபதிகள் இது தொடர்பில் தீர்மானிக்க முடியும்.

கேள்வி: மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளின் முடிவு தொடர்பில் சிறீலங்கா அரசு ஒரு கால எல்லையை தீர்மானிக்கும் என நீங்கள் நம்புகின்றீர்களா?

பதில்: மக்களுக்கு ஒரு கால எல்லையை தீர்மானிப்பது முக்கியமானது, அவர்கள் நாள்தோறும் துன்பத்தை அனுபவிக்கின்றனர். மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மிக விரைவான கால எல்லை ஒன்று தீர்மானிக்கப்பட வேண்டும். அதனை சிறீலங்கா அரசு முதன்மைப்படுத்த வேண்டும் என நாம் விரும்புகிறேன்.

அதனை தவிர்க்க முடியாது ஏனெனில் இது தொடர்பான அறிக்கை ஒன்றை எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை சபையில் நான் சமர்ப்பிக்கவுள்ளேன்.

கேள்வி: சிறீலங்காவில் முன்னர் பல விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன, எனவே சிலர் கூறுவதைப்போல இது ஒரு காலத்தை கடத்தும் செயல் என நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: விசாரணக்குழுக்கள் தொடர்பில் சிறீலங்கா மேசமான பதிவுகளையே கொண்டுள்ளது. முன்னாள் பிரதம நீதிபதி பகவதியுடன் நான் தனிப்பட்ட முறையில் உரையாடியிருந்தேன். அவர்கள் சிறீலங்காவில் அமைக்கப்பட்ட அனைத்துலக சுயாதீன நிபுணர் குழுவில் அங்கம் வகித்தவர்.

சிறீலங்காவின் நிலைப்பாடு தொடர்பில் அவர் அதிதிருப்தி கொண்டிருந்தார். தலையீடுகள் காரணமாக விசாரணைகள் திடீரென நிறுத்தப்பட்டிருந்தன.

Comments