எழுதுவோம் (ஸ்கிரிப்டிங் )

எல்லாம் தலையெழுத்து. எழுதினபடிதான் நடக்கும். என்பது  நல்ல ஆறுதல் வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால் இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது?

எல்லோரும் எளிதாக சொல்லிவிடுவார்கள் முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார். அப்போ தலையெழுத்து பொய்யா? இல்லை என்கிறது ஒரு ஆய்வு!


நூர்ஜஹான் ஒரு ஆறாம் வகுப்பு மாணவி. அவளது பள்ளியில் திடீரென ஒரு அறிவிப்பு. ஓவியம் வரைய ஆர்வம் உள்ளோர் உடன் பெயர்தரவும். தூரிகைகளும் வண்ணங்களும் மட்டும் வாங்கிவந்தால் போதும் என்கிறார் வகுப்பு ஆசிரியர்.

ஆர்வ மிகுதியில் தனது தந்தையிடம் அப்பா நான் ஓவிய வகுப்பில் சேரவா என்கிறாள். அப்பா உடன் சொல்கிறார் கண்ணு அதெல்லாம் உனக்கு சரிவரதும்மா.

சரிப்பா என்று சொல்லிவிட்டு வீட்டுப்பாடத்தில் மூழ்கிவிடுகிறாள் நூர். அப்பாவின் உண்மையான காரணம் அந்த மாதத்திய நெருக்கடியான பட்ஜெட். ஆனால் நூர் தனது  ஆழ்மனதில் தன்னையறியாமலே ஒரு செய்தியை ஆழமாக எழுதிவிடுகிறாள்.

"எனக்கு ஓவியம் வராது "

அதற்கப்புறம் ஒரு அற்புதம் நிகழ்ந்தாலொழிய அவளால் வரையவே முடியாது என்பது தான் உளவியல் உண்மை.

என்ன நடக்கிறது?


சூழலில் காதில் விழும் வார்த்தைகள் நம்மை அறியாமலே ஆழ்மனதிற்கு பயணமாகி ஒரு படிவமாகி விடுகின்றன.  ஆம் நம் தலைஎழுத்தை நாம் தான் எழுதிகொள்கிறோம், நம்மையறியாமலேயே.

பெரும்பாலோரின் வாழ்வினை தடம்மாற்றுவது சூழலில் மிக சாதரணமாக கேட்கும் ஒரு வார்த்தை! எவ்வளவு ஆச்சர்யம் இது?

தற்காப்பு 


ஒரு பில்டர் தேவை. நச்சு வார்த்தைகளை வடிகட்டி நேர்மறை வார்த்தைகளை மட்டுமே மனதிற்கு அனுப்பும் ஒரு விழிப்புணர்வும் சல்லடையும் அவசியம் தோழர்களே.

எப்படி ?


"ஒனக்கு இதெல்லாம் வராது " என்று யாரவது சொன்னால் அதை ஒரு புன்னகையோடும் தன்னம்பிக்யோடும்  கடந்து செல்லுங்கள்.

இப்படி ஒரு வினாவை மனதிற்குள் எழுப்புங்கள்
(மனதிற்குள்)
 இதை சொல்ல நீங்கள் யார்?
நான் முயல்வேன் மீண்டும் மீண்டும் நிச்சயம் என்னால்  முடியும்.

இதைத்தான் பில்டர் மெக்கானிசம் என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். இந்த விழிப்புணர்வும் சல்லடையும் இருந்தால் வாங்க பாஸ் இந்த வாழ்க்கையின் புதிய சிகரங்கள் உங்களுக்கு காத்திருக்கின்றன.

எதிர்மறைச் சூழலில் விழிப்புடன் இருந்து காத்துக்கொள்ளுங்கள். நெகடிவ் நம்பியார்களிடமும்  நம்பிக்கையோடு பழகுங்கள்.

பி.கு. மாணவர்களுக்கு அளிக்கும் தன்னம்பிக்கை பயிற்சியின் ஒரு பகுதி.

அன்புடன்
மது


இந்தப் பதிவின் கவிதை 


*****


புதுவெள்ளம் பாய்ந்த போது
ஓட்டமெடுத்தது
தேங்கிய நீர்


          - ஆங்கரை பைரவி
*******


 



Comments

  1. மிகவும் அருமையான தன்னம்பிக்கை பயிற்சி... இது போல் தொடருங்கள்... பாராட்டுக்கள்...

    கவிதை அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும், வாழ்த்துக்கும் வழிகாட்டலுக்கும்

      Delete
  2. சகோவிற்கு வணக்கம்
    மிக அற்புதமான தன்னம்பிக்கை விதையைத் தூவியிருக்கிறீர்கள். மிக எளிய நடை கருத்தாழம் மிகுதி. ஒவ்வொன்றையும் ரசித்தேன். குறிப்பாக மனதிலும் பதிந்தேன். ஆங்கரை பைரவி ஐயாவின் கவிதைப் பகிர்வு தங்களின் ரசனை. மிக அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாண்டியன் ..

      Delete

Post a Comment

வருக வருக