மனுஷ்ய புத்திரன் குறித்து ஒரு பெண் கவிஞர்

இலக்கிய நிகழ்வுகள் எப்போதும் அமைதியாக முடியும் என்று சொல்ல முடியாது.

சில நிகழ்வுகள் நமக்குள் சில குமிழ்களை உடைக்கும்.சித்தன்னவாசல் இலக்கிய சந்திப்பு முன்னெடுத்த மனுஷ்ய புத்திரன் அவர்களின் கவிதைகளை விமர்சிக்கும் நிகழ்வும் அதில் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது.

ஞாயிறு என்பதால் விதைக்கலாம் நிகழ்வு முடித்து தாண்டிஸ்வரம்வரை சென்றுவிட்டு சற்றே தாமதமாகத்தான் நிகழ்விற்கு போனேன்.

காலத்தால் புடம் போடப்பட்ட இலக்கிய விமர்சகர் ராசி பன்னீர்செல்வன் அவர்களின் உரையின் இறுதிவரிகளை மட்டுமே கேட்டேன்.

அடுத்து கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் உரை.

தொடர்ந்து புதுகைக் கவிஞர்கள் ஒவ்வொருவராக கவிஞரின் கவிதைத்தொகுப்புகளை விமர்சித்தார்கள்.

விமர்சனமாக இல்லாமல் ரசனைக்கொண்டாட்டமாகத்தான்  இருந்தன உரைகள்.

சுரேஷ் மான்யா பொதுவாக தனி ஆளுமைகளை கொண்டாடுவதை கடுமையாக விமர்சிப்பவர். அவரது இலக்கிய இயக்கமாகத்தான் சித்தன்னவாசல் இலக்கிய சந்திப்பை நான் பார்க்கிறேன்.

தனி ஆளுமைகளைக் கொண்டாடுவதை விமர்சனம் செய்யும் மான்யா மனுஷ்ய  புத்திரனின் விசயத்தில்  சமரசம் செய்துகொண்டாற்போல் தெரியவில்லை. சரண் புகுந்தது போலத்தான் இருந்தது.

என்னுடைய தனிப்பட்ட கருத்தினைக் கேட்பீர்கள் என்றால் நான் படைப்பாளிகளைக் கொண்டாடுவதை சரி என்றுதான் சொல்வேன்.

ஆனால் தேர்வுகளில் அரசியல் இருக்கக்கூடாது!

படைப்பை கொண்டாடுவது போல படைப்பாளியையும் கொண்டாடினால்தானே படைப்புகள் தொடர்வது சாத்தியப்படும்?

அடிக்கிற கோடை வெயில் எல்லாவற்றையும் மீறி மனுஷ் ஜில் என்றே இருந்திருப்பார். அவ்வளவு ரசனை கொண்டாட்டமாக இருந்தது நிகழ்வு.

(இதற்கு ஒரு நியாயம் இருக்கிறது, அது அடுத்த பகுதியில் வரும் )


இப்படி எல்லோருமே போற்றிப் பாடடி கண்ணே மனுஷ் காலடி மண்ணே என்று போய்க்கொண்டிருந்த பொழுது எழுந்தார் அந்த பெண் கவி.

மணி வேறு போய்க்கொண்டிருந்தது.

என்  வயிற்றில் பசி  ஒரு கோரத்தாண்டவத்தை ஆடத் துவங்க, அம்மணி மைக்கைப் பிடித்த முதல் கணத்திலேயே இதெல்லாம் ரொம்ப ஓவர் என்கிற பாணியில் பேச ஆரம்பிக்க அடியேன் மெல்ல அரங்கை விட்டு வெளியேறி நண்பர்களை கண்டு பேச ஆரம்பித்தேன்.


சொல்லப் போனால் அந்த அம்மா பேசிய முதல் ஐந்து வாக்கியங்கள் அப்படியே சுரேஷ் மான்யாவின் கொள்கைகள்தான். அதீதத புகழுரைகள் இலக்கிய அரங்கிற்கு தேவையில்லை என்பதுதான் சுரேஷ் கொள்கை. இதற்கு தூயனும் ஆமென், சச்சினும் ஆமென், ஸ்டாலின் மட்டும் நோ மென். இதைத்தான் அந்த அம்மணியும் சொன்னார்கள்.

அரங்கின் வெளியே யாழியுடனும், பிராங்குடனும் பேசினேன். பசி உல்வோரினின் அடமாண்டியம் நகங்களாக பிராண்ட ஆரம்பிக்க அரங்கில் இருந்த தேநீர்க் குவளையைக் கவிழ்த்துக்கொண்டேன்.

மிகச் சரியாக அந்த நேரம் மருமகள் லாவண்யா (ஏழாம் வகுப்பு) அருகே வந்தாள், மாமா இந்த அம்மா பேசியதெல்லாம் உங்களுக்குப் பிடித்ததா? என்றாள்.

நான் எங்கடா கேட்டேன், என்னடா பேசினாங்க? என்றேன்.

புதுக்கோட்டைக்காரர்களுக்கு  பேசத் தெரியலை என்று சொல்றாங்க மாமா என்றாள்.

ஆகா, சனியன் அரங்கிற்குள்  ஜிவ்னு பறந்துருக்குடா சாமி,  நல்லவேளை வெளியே போனது என்று நினைத்துக்கொண்டேன்.


கவிதை இரட்சகி அமர்ந்த உடன் ஸ்டாலின் மனுஷ் பற்றி அவரது தொகுப்புகளில் ஒன்றைக் கூட படிக்காத உங்களை பேசச்சொன்னது எனது தவறுதான் என்கிற பாணியில் பேச, மீண்டும் கவிதை ரட்சகி அம்மயார் எழுந்து மைக் கேட்க வாய்ப்பு மறுக்கப்பட்டது. (ஏற்கனவே பண்ணிய டேமேஜ் போதாதா?)

மனுஷ்ய புத்திரன் இதைக் குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளவே இல்லை!

அவரது பேச்சுப் பாணி தேர்ந்த ஒரு கோவில் பூசாரியின் பாணி, ஒரு ராகத்துடன், லயத்துடன் பேச ஆரம்பித்தார்,

என்ன பேசினார் ? என்பதுதானே உங்கள் கேள்வி?

தொடர்வோம்

அன்பன்

மது

Comments

 1. தொடர்கிறேன் தோழர்
  த.ம.

  ReplyDelete
  Replies
  1. தொடருங்கள் தோழர்

   Delete
 2. என்ன பேசினார் மனுஷ்??!! தொடர்கிறோம்...

  ReplyDelete
 3. ஆஹா...சொல்லுங்கள்..

  ReplyDelete
  Replies
  1. சொன்னது சரியா ?

   Delete
 4. நேருக்கு நேராய் கருத்தைச் சொல்வது நல்லதுதானே :)

  ReplyDelete
  Replies
  1. நல்லதுதான், தனியே சொல்லலாம் சபையில்?

   Delete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...

Popular posts from this blog

Thaaraa Bharati (1947-2000) from yahoo voices...

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை