மாட்டுக்கறிக்கு தடைபோடும் மகராஜா, அறிமுகம் செய்தது யாரப்பா? beef ban


#மாட்டுக்கறி #பிஜேபி
மீண்டும் ஒரு திரைப்படம்`


ஹீரோ என்று ஒரு திரைப்படம்.
நான் ரசித்த திரைப்படங்களில் இன்னும் விமர்சனத்தை பகிராத திரைப்படம்.
ஜெட் லீ நடித்தது.
சில படங்களை விமர்சிப்பதை விட ரசிப்பதோடு நிறுத்திக்கொள்வது ரசனைக்கு அழகு என்பதால் மட்டுமே எழுதவில்லை (வால்ட்டர் மிட்டியின் புலிப் புகைப்படம் போல)


இப்போ படம்.
சீனப் பேரரசன் தனது படையணிக்கு ஒரு ஆணை இடுகிறான்.

சீனாவில் இருக்கும் மற்ற மொழிப் பள்ளிகளை, அவர்களின் தற்காப்பு கலைகளை அழித்தொழிப்பதே உத்தரவு.

பள்ளிகள், அவற்றில் இருந்த தற்காப்புக் கலை வித்தகர்கள் கொத்துக் கொத்தாக அழிக்கப்படுகிறார்கள்.

பாதிக்கப் பட்ட பள்ளிகளில் இருந்து ஆகச் சிறந்த தற்காப்பு கலை வித்தகர்கள் எட்டு பேர் தப்புகிறார்கள்.

இவர்களின் ஒரே நோக்கம் அரசனைப் போட்டுத் தள்ளுவது.

வழக்கம் போல அரசன் இவர்களைத் தீர்த்துக் கட்டுபவர்களுக்கு விருதுத் தொகையை அறிவித்து அவர்கள் தீர்த்துக் கட்டும் தலைகளுக்கேற்ப அவர்கள் அருகில் அமர்ந்து பேசவும் முடியும் என்றும் அறிவிக்கிறான்.

அதவாது ஒரு மொழித்தீவிரவாதியை அழித்தால் பதினாறு அடித் தூரத்தில் இருந்து அரசனைத் தரிசிக்க முடியும். அனைவரையும் கொன்றால் பத்தடிக்கும் குறைவான தூரத்தில் அரசனைத் தரிசித்து பேசலாம்.

ஜெட் லீ, அந்த எட்டு மொழித் தீவிர வாதிகளையும் கொன்று அரசனை மிக நெருங்கிய தூரத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பை பெறுகிறார்.

இந்த இடத்தில் படம் ஒரு யூ டர்ன் எடுக்கும்.
நீங்களே பார்த்துகோங்க ..

இப்போ பி.ஜே.பி செய்வது எல்லாமே சைனா அரசர் செய்வதுதான்.

பிராந்திய மொழிகளை அழித்து, அடையாளங்களை அழித்து ஒரு ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவது அவர்களின் நோக்கம்.

பிரச்னை என்ன வென்றால், அன்றைய சைனாவிற்கு அத்தகு கொலை முயற்சிகள் தேவையாக இருந்தன.

தொழில் நுட்பமும் தகவல் தொடர்பும் வளர்ச்சியடைந்த இந்தக் காலத்தில் பிராந்திய மொழிகளையோ, அடையாளங்களையோ அழிக்கவேண்டிய அவசியமே இல்லை. சொல்லப் போனால் பன்மைத்துவம் இந்தியாவின் தனிப்பட்ட சொத்தாக அறிவிக்கப் பட்டு போற்றப்பட வேண்டும்.

இதை புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் மனு அருளிய வாழைப்பழத்தை வாயில் கவ்விக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியாது.




LikeShow more reactionsComment
Share

Comments

  1. ஒப்பீடு அருமை தோழரே
    யாராவது மோடியை பத்தடி தூரத்தில் பார்த்து ரசித்தபடி ஜெட்லீ செய்தது போலவே...................... செய்தால் நல்லது
    த.ம.1

    ReplyDelete
  2. deadly match ,உங்க ஜெட்லி கதை :)

    ReplyDelete
  3. இந்த ஒப்பீடு எல்லாம் உங்கள் வீண் கற்பனை.. இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் தமிழ் நாடும் ஓன்று. அவ்வளவே , என்னமோ பிரதமர் மோடிக்கு பிராந்திய மொழியை அழிப்பதே குறி என்பது 'குண்டுச்சட்டி குதிரை' போன்ற வீண் கற்பனை

    ReplyDelete
  4. பாரன்கீட் திரைப்படத்தில் நூலைக் கொளுத்துவார்களே, அதைப் போலுள்ளது.

    ReplyDelete

Post a Comment

வருக வருக