மொழி எனும் களிமண்


மொழி என்பது களிமண் போலத்தான், இல்லையா?அதீத அழுத்தங்கள் கொண்ட பணி தொடர்பான பயணத்தின் இடையே ஓர் பாடல் காதில் விழுந்தது.

சென்றது நண்பர் சங்கரின் மகிழுந்து என்பதால் வரிகளை முழுதாகக் கேட்க முடிந்தது.

தேசிய விருது பெற்ற  அழகே பாடல்தான்.

அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு
விழும் இல்லை கூட ஒரு அழகு

இசையோடு வருவதற்காக  பொருளற்ற வார்த்தைகளையும் சப்தங்களையும் இட்டு நிரப்பி திரை இசையை கவிதை ரசிகர்களிடம் இருந்து பிரிக்கும் திரைக்கவிஞர்கள்  மத்தியில் பளிச்சென வேறுபடும்  கவிஞர். 

எதிர்பார்த்தபடியே நா.முத்துக்குமார்தான் 

எப்பேர்ப்பட்ட இழப்பு  என மீண்டும் வருந்தவைத்த நிமிடங்களைக் கடந்தேன். 

இப்போது மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. 

காலை எனது மடியில் அமர்ந்துகொண்ட மகியுடன் பாடலைக் கேட்டேன். 

பாடல் அவளது முகத்தில் விளைவித்த உணர்வுப்  படர்வுகளை பார்த்தபடியே வார்த்தைகளில் மூழ்கிப்போனேன். 

எல்லோரும்தான் பேசுகிறோம், வாசிக்கிறோம் ஏன்  எழுதக்கூட செய்கிறோம்..

அவர் அவர்  கைப்பக்குவத்திற்கு தகுந்தமாதிரி படைப்புகள் வருகின்றன. 

வெறும் களி மண்ணைக் கொண்டு தேர்ந்த ஒரு குயவன் சிற்பங்களைச் செய்கிறான், இன்னொருவன் பானைகளை வனைகிறான். 

பானை அன்றாட இருத்தல் என்றால்  சிற்பம் நம்மை அடுத்த தளத்திற்கு உயர்த்துகிறது. 

செய்நேர்த்தியில் செழுமை பெற்ற  ஒரு மொழிக்குயவனை நாம் இழந்திருக்கிறோம். 

பாடலை  நீங்களும் இன்னொருமுறை கேளுங்கள் 

Comments

 1. பலமுறை மெய் மறந்து ரசித்த பாடல் தோழரே மீண்டும் கேட்டேன்
  த.ம.1

  ReplyDelete
 2. உற்சாகம் தரும் இனிமையான பாடல்...

  ReplyDelete
 3. பாடல் அழகு நண்பரே

  ReplyDelete
 4. திறமைசாலிகள் குறைந்த வயதிலேயே மரணித்து விடுவது மிகப் பெரிய சோகம்தான் :)

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...