பாலாஜி கஜா நாயகர்களில் ஒருவன்


கஜா தாண்டவத்தின் பதினைந்து நாட்களுக்கு முன்னர்தான் நான் ஒரு பெரும் இழப்பை சந்தித்தேன். கஜா நிவாரணப் பணிகளை நண்பர்கள் முன்னெடுத்தது எதுவுமே தெரியாது. மின்தடை ஒரு காரணம் என்றால் வாட்சப் பயன்படுத்துவதில்லை என்பது இன்னொரு காரணம்.ஒருவழியாக என் சொந்த சுழல்களில் இருந்து வெளிவந்து களத்தில் இறங்கலாம் என்று முடிவு செய்து முகநூலில் அறிவித்த மறு நொடியே ஓணான்குடி போலாம் சார் என்றார் பாலாஜி.

மறுநாள் நீண்ட முன் ஆயத்த பணிகளுக்கு பின்னர், நிவாரணப் பொருட்களை பாலாஜியும் நானுமாக வாங்கிச் சேர்த்து மதியம் குழுவினரோடு ஓணான்குடி சென்றோம்.விதைக்கலாம் அமைப்பிற்கு பெயர் சூட்டிய பிரபா, எஸ்.பி.ஐ வங்கியில் பணியாற்றும் நந்தா, ராம் கணேஷ் என ஒரு சிறு குழுவோடு புறப்பட்டோம்.

பாலாஜி, ஒரு அரசுப்பள்ளி ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர். ஓசையின்றி பல்வேறு சமூகப் பணிகளை செய்துவருபவர். விதைக்கலாம் அமைப்பின் புரவலர். 


ஓணான்குடியின் தலைவர் பாலாஜிக்கு வேண்டியவர் என்பதால் நிவாரணப் பொருட்களை கொடுப்பதில் எதுவும் சிக்கல்கள் இல்லை.

அப்படியும் கூக்குரல்கள் எழாமல் இல்லை,  திரும்பி வருகிறோம் என்று சொல்லிவிட்டு மீண்டும் மாலை சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினோம்.

பக்கத்தில் இருக்கும் பொன்னம்பட்டிக்கும் சென்று இயன்ற நிவாரணப் பொருட்களை வழங்கி வந்தோம்.

இந்த நிகழ்வில் இருந்துதான் நானும் நிவாரணப் பணிகளில் இணைந்தேன்.

இதன் பின்னர் பல்வேறு குழுக்களில் இணைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன்.

பாலாஜியும் தன்னுடைய நிவாரணச் சேவைகளை தொடர்ந்து செய்து வந்தார். சக மனிதர்கள் துயரில் பங்கெடுக்கும் பக்குவம் கொண்ட மனிதர்கள் அருகிப் போய்விட்ட இந்த சூழலில் பாலாஜி போன்ற இளைஞர்கள் மனித நேயத்துடன் களத்தில் சுழல்வது ஒரு ஆறுதல்.

இன்று பாலாஜியின் பிறந்தநாள்.

சேவைகளில், கல்விப் பணிகளில், பதவிகளில் மேன் மேலும் உயர பாலாஜிக்கு வாழ்த்துகள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ...பாலாஜிக்கு.

நீங்களும் வாழ்த்தலாமே.


நாயகர்கள் அணிவகுப்பு தொடரும்

அன்பன்
மது.
Share on Google Plus

About Kasthuri Rengan

    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. பாலாஜிக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்கள் வருகை எனது உவகை...