கஜா களச்செயல்பாட்டாளர்கள்



கடந்த வருடம் ஒரு தனிப்பட்ட உரையாடலில் உடலின் ஒவ்வொரு திசுவிலும் சாதிவெறியேறிப் போயிருந்த ஒருவர் கேட்ட கேள்வி "நிலவனெல்லாம் ஒரு ஆளாப்பா?"



அவ்வளவு எள்ளல் ..எகத்தாளம்..ஆதிக்கத் திமிர் வழியும் குரலில்..இதற்கு தக்க பதிலை அங்கேயே வழங்கிவிட்டாலும் என்னை துரத்திகொண்டே இருந்த கேள்வி அது.

நல்ல விசயங்களை ஊக்குவிப்பவர் என்கிற முறையில்தான் நிலவன் எனக்கு அறிமுகம்.

அவருக்கு நினைவு இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம் அவரை தோழர் என்றோ, கவிஞர் என்றோ எனக்கு அறிமுகம் கிடையாது.

அவர் எனக்கு அறிமுகமானது எனது பள்ளியில் தமிழாசிரியராக ...இன்று நான் அண்ணன் என்று அழைக்கும் இலகுத் தன்மை அவரது ஆளுமையின் பக்குவம்.

இவற்றை எல்லோருக்கும் புரியவைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

அதே சமயம் அவருடன் பல கருத்துக்களை விவாதித்திருக்கிறேன்.

எனக்கு சரி என்ற விசயங்களை பேசி வாதிட ஒரு வாய்ப்பை எப்போதுமே தருபவர் அவர்.

கஜா தாண்டவமாடிய இந்த நாட்களில் நிலவன் சத்தம் இன்றி செய்திருக்கும் பணி மூர்ச்சை வரவைக்கக் கூடியது.

எதைபற்றியும் கவலை கொள்ளாமல் ஆளுமைகளை ஒன்றிணைத்து ஒரு குழுவாக்கி அதன் முழுத் திறனை வெளிகொணர்ந்து இலக்கை வெல்வதில் நிலவன் ஏற்கனவே பலமுறை தன்னை நிருபித்திருக்கிறார்.

தனக்கு வேண்டியவர் வேண்டாதவர், பேசுபவர் எசுபவர் என்றெல்லாம் பார்க்காது குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார். அவருக்குத் தேவையெல்லாம் ஒன்றுதான் நோக்கம் நிறைவேறவேண்டும்.

புயல் ஓய்ந்த பின்னர் துவங்கிய நிவாரணப் புயல் என்றுதான் கஜா நிவாரணக் குழுவை சொல்ல வேண்டும்.

மருத்துவர் ராமதாஸ் தலைமையில், புதுகையின் பல்வேறு இயக்கங்களை ஒன்றிணைத்து (விரிவான பட்டியல் பின்னர்) களத்தில் இவர் காட்டிய ஈகைப் பாய்ச்சல் அசுரத்தனமாது.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் புதுகையின் நிவாரணக் குழுக்கள் அனைத்தையும் நேரிடையாக பார்த்துவருகிறேன்.

அதனால்தான் சொல்கிறேன்.

நிலவன் அவர்களின் வாழ்நாள் சாதனைகளில் இந்த நிவாரணம் ஒன்றாக இருக்கக்கூடும்.

இன்னும் நிறையவே எழுதலாம் ...

சரிப்பா அந்த சாதி வெறி பார்டி என்ன பண்ணுது என்றுதானே கேட்கிறீர்கள்..?

அது வீட்டுக்கார அம்மாவிற்கு துவைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது.

ஏன் நிலவன் குறித்து இவ்வளவு விரிவாக என்று யாரும் நினைக்க வேண்டாம்.

அன்று அந்த சாதிவெறி ஜந்து கேட்ட கேள்விக்கு விடையை நிலவன் அவர்களின் செயல் நேர்த்தியும் அர்பணிப்பும் காட்டிவிட்டது.

எனவேதான் இந்த இற்றை.
நண்பர்கள் பொருத்தருள்க...
மைன்ட் வாய்ஸ் என்று சத்தமாக பேசியதாகக் கூட
நினைத்துக்கொள்ளுங்கள் ...

முகநூலில் முன்னொரு நாளில் எழுதியது ...

தொடர்வோம்
அன்பன்
மது 

Comments

  1. புதுகை நண்பர்களுக்கு மட்டுமல்ல, இன்னும் பலருக்கும் நல்ல ஒரு வழிகாட்டி நிலவன் ஐயா. தொடரட்டும் அவரது பணி.

    உங்களையும் பதிவுலகில் மீண்டும் பார்த்ததில் பெருமகிழ்ச்சி. தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  2. சாதி மறப்பவர் மனமே மனிதம் சங்கமிக்கும் திடலாகும் தோழர்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக