3டி பிரிண்டிங்




ஷானாஸ் தனது தோழி லைலாவின் நெக்லஸ் அழகாக இருப்பதாக கூறுகிறாள். 
விழிகள் மகிழ்ச்சியில் விரிய ஒ அப்படியா தாங்க்ஸ் என்றாள் லைலா. என்ன நினைத்தாளோ கொஞ்சம் பொறு என்று தனது நகையை கழட்டி கணிப்பொறியை ஆண் செய்து ஸ்கேன் செய்து கண்ட்ரோல் பியை அழுத்த வந்து விழுகிறது அச்சு அசலாக இன்னோர் நெக்லஸ்! 
இது கொஞ்சம் அதிதமாக தெரிந்தாலும் கூடிய விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும் என்றே நினைக்கிறன். 

தற்போதைக்கு பல்வேறு துறை ஆய்வாளர்களும் தனது துறையில் இந்த தொழில் நுட்பத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று ஆய்ந்து வருகிறார்கள்.
மருந்துறுவாக்கும் துறை எதிர் காலத்தில் அடிப்படி வேதி சேர்மங்களை காட் ரிஜ்ஜில் நிரப்பி உங்களுக்கு தேவையான மருந்துகளை நீங்களே  பிரிண்ட் செய்துகொள்ளலாம் என்கிறார்கள்! 

இந்த பிரிண்டரின் மூலம் இறைச்சி பிரிண்ட் செய்து உண்ணும் ஆய்வு ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். சுவை இன்னும் சரியாக செட் ஆகவில்லையாம்!

இன்னும் கொஞ்சம் காலத்தில் மனித உடல் உறுப்புகளை கூட அச்செடுக்கும் துறையாக இது வளர சாத்தியம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு தோன்றுவதை கீழே உங்கள் கருத்துக்களாக பதிவிடுங்கள்.

நன்றி

அன்பன்
மது
கொஞ்சம் புதிய அறிவியல், கல்வி
$$$$$$$$$$ரிலாக்ஸ்$$$$$$$$$$$




இந்த வார காணொளி

$$$$$ஒரு ஹாஸ்யம்$$$$$


அது மியூசிக் வகுப்பு. மியூசிக் டீச்சர் மாணவர்களிடம் ஒவ்வொரு கேள்வியாக கேட்டார். ஒரு மாணவியிடம் உனக்குப் பிடித்த இசை எது என்று கேட்டார்.
அதற்கு அந்த மாணவி சொன்னாள்... 'லன்ச் பெல்'தான் மிஸ்...!

Comments