Thursday, 23 May 2013

மின்சாரம் ஒரு தமிழ் கண்டுபிடிப்பு! ஜோரான முக நூல் பகிர்வு.

விதை அறக்கட்டளை's photo.
குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.

தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"

புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.
இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,

"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் "அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்போ போடுங்க ஒரு லைக்கையும், ஷரையும்.

குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்.

இது போன்ற மேலும் தகவல்களுக்கு: http://www.facebook.com/vidhaifoundation

No comments:

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...

Labels

12 Years a Slave (2013) 2001: எ ஸ்பேஸ் ஆடிசி A Walk Among the Tombstones aathaar Amr Waked Avengers Age of Ultron avms kaarthik bairava blogging tips buds to blossoms c.c.e Fast and Furious 8 fb share Guardians of the Galaxy hariharasuthan honour killings innovations in Marketing into the storm Iyothee Thass jci jci pudukkottai central kalvi kannaki kovil keezhadi khan's academy kochadaiyaan review linking fraud Lucy(2014) spoiler madurai Min-sik Choi Morgan Freeman oblivion personal change positive attitude வெற்றி இலக்கியம் Rafeeq Friend robin williams rouge one 2016 sasikala for cm Scarlett Johansson shajakaan society spoiler ssa T.V.18 yaathum oore episode 12 Tamil Short Story tasmac tesla motors thamizh thirai vimarsanm udayakkumar viswaroopam movie want to write ? War for the Planet of the Apes www.ted.com X Standard Tamil Memory Songs Tamil Nadu X-Men: Days of Future Past அ பெ கா பண்பாட்டு இயக்கம் அ.பெ.கா அசத்தல் அரசுப் பள்ளி அச்சம் என்பது மடமையடா அப்பா அமெரிக்கா அம்மா அயோத்தி தாசர் அரசு ஊழியர் ஓய்வூதிய போராட்டம் அரசு ஊழியர்களின் குரல் அரசுப் பள்ளிகள் அரிமளம் பள்ளி அரைவல் அலைகள் அலையும் குரல்கள் அவென்ஜெர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான் அறிவிப்புகள் அனுபவம் அன்னவாசல் கே. ரெங்கசாமி ஆஃபரா ஆங்கில கேட்டல் பயிற்சி ஆங்கிலத்தொடர்பாற்றல் ஆங்கிலப் படம் ஆங்கிலப் பயிற்சி ஆங்கிலம் ஆசிரியர் ஆசிரியர் தினம் ஆசிவகம் ஆசை தொடர் பதிவு ஆண்டனி ஆதிச்சநல்லூர் இசை இடஒதுக்கீடு இடைநிறுத்தம் இடைநிற்றல் இந்திய தேசிய ராணுவம் இந்தியா வரங்களும் சாபங்களும் இந்துத்துவம் இமான் இளையராஜா இறுதிச் சுற்று இனப்படுகொலை இன் டு தி ஸ்டார்ம் இன்னுமொரு சிறுகதை. புன்னகை இஸ்ரேல் ஈர்ப்பலைகள் ஈழம் ஈழம் சமுகம் உயிர்மை உலகின் பொருளாதாரக் கொள்கை உலோக உருக்கு ஆலை எக்ஸ்.மென் அபோகிளிப்ஸ் எட்ஜ் ஆப் டுமாரா எல்காம் எஸ்.எம்.எஸ். கொள்ளை ஏற்பாடுகள் ஐஸ் ஸ்டுபா ஒரு கோப்பை மனிதம் ஒரு முகநூல் பகிர்வு ஒலிம்பிக் ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் ஓவியர்கள் கடிதம் கட்செவி பகிர்வு ஒன்று கட்டிடப் பொறியியல் கட்டுரைப் போட்டி கண்ணகி கோவில் கண்ணேநலமா - கண்ணாடி பவர் குறைபாடுகள் கதிர்வேல் கதை திரைக்கதை வசனம் இயக்கம் கத்தி கயல் கருத்தாளிகள் கலாச்சராம் கலிலியோ அறிவியல் மையம். கல்வி கல்வித்துறை விழா கல்வியாண்டு கவண் கவிஞர் தங்கம் மூர்த்தி கவிஞர் நீலா கவிதை கவிதை அறிமுகம் கவிதை பகிர்வு கவிதைகள் கவிதைத் தொகுப்பு கவிநாடு கண்மாய் கவுரவக் கொலைகள் கற்க கசடற கற்பித்தல் யுக்திகள் கனகசபை ராமசாமி கனவில் வந்த காந்தி கனிமொழி காக்கா முட்டை காசு பணம் துட்டு மணி மணி காணொளிகள் சில காதர் காந்தி திரைப்படம் காப்டன் அப்பாஸ் அலி காப்புரிமை கார்டியன்ஸ் ஆப் தி காலக்ஸி கார்த்திக் கார்த்திக் கார்த்திக் காவியத் தலைவன் காற்றுவெளியிடை கிரமத்து குழந்தைகள் கிரேஸ் பிரதிபா கிரேஸ் பிரதீபாவின் துளிர் விடும் விதைகள் கிஷோர் டேவிட் ராஜ ராஜன் கீழடி குருநாதசுந்தரம் குழந்தை வளர்ப்பு குழந்தைகள் தினம் குறும்படம் கேவல் நதி கொசுவத்தி கொசுவர்த்தி கொஞ்சம் புதிய அறிவியல் கொஞ்சம் வெப் கொடி காத்த குமரன் கொம்பன் திரை விமர்சனம் கோச்சடையான் கோடை நகர்ந்த கதை கோபிநாத் கோவை ஆவி க்விஸ் சக்கரக்காலன் சக்தி சவுந்தர் ராஜன் சச்சின் சதுர ஆவுடைகள் சந்தானம் சந்திப்பு சந்திரமோகன் வெற்றிவேல் சந்தைப்படுத்துதல் சமணச் சிலை சமுகம் சமுத்திரக்கனி சமூகம் சர்தார் வல்லபாய் பட்டேல் சாதனைப் பெண்மணிகள் சித்தன்னவாசல் ஓவியங்கள் சித்தன்னாவாசல் இலக்கிய சந்திப்பு சிவகார்த்திகேயன் சிறுகதை சினிமா சின்னவள் கவிதைத் தொகுப்பு சீனு சுகு சுய முன்னேற்றம் சுயபுராணம் சுரபி சுரேந்தர் சூப்பர்மென் வெர்சஸ் பாட்மேன் செந்தூரன் பாலிடெக்னிக் செந்தூரன் பாலியின் தொடர் சாதனை செல்பி செவன்த் சென்ஸ் செவென்த் சென்ஸ் சொன்னாங்க சோ ஸ்வீட் வலைப்பூ ஞானாலயா ஆவணப் படம் டாக்டர் ஸ்ட்ரேஞ் டான் ஆப் ஜஸ்டிஸ் டி.எம்.என்.டி Teenage Mutant Ninja Turtles (2014) டினா அரீனா டெல்லி சம்பவம் ட்ரான்ஸ்பார்மர்ஸ் ஏஜ் ஆப் எக்ஸ்டின்ஷன் தங்கமகன் தஞ்சை தபால்காரர் தமிழ் தமிழ் ஹிந்து தமிழ்ச் செம்மல் விருது தயான் சந்த் தர்மதுரை தலைமைப் பண்பு தலைவாரி பூச்சூடி தாயம்மாள் தாய்மொழி தாரை தப்பட்டை தி இத்தாலியன் ஜாப் தி பிரஸ்டீஜ் தி.ஆலை பள்ளி தியாக வரலாறு திருச்சி புகைப்பட பொருட்கள் கண்காட்சி. நிகழ்வுகள் திரை இசை திரை வி மர்சனம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் தீபிகா படுகோன் தீரன் சின்னமலை துவரங்குறிச்சி தேவதைகளால் தேடப்படுபவன் தேறி தொடர்பதிவு தொலைகாட்சி 18 தொல்காப்பியர் விருது தொல்லியல் ஆய்வுக் கழகம் தொல்லியல் சான்றுகள் தொழில் நுட்பம் தொழில் முனைவு தொழில்முனைவு தோழர் ரபீக் பதிவு நகை நடாஷா ரைட் நடிகர் சங்கத் தேர்தல் நத்தார் தின வாழ்த்துக்கள் நந்தன் ஸ்ரீதரன் நமக்கு நாமே திட்டம் நம்பிக்கை மனிதர்கள். நம்மாழ்வார் நலம் நன்றிகள் நாகூர் ரூமி நாடகக் கலைஞர்கள் நாயகர்கள் நாளைய மனிதர்களின் நேற்று நான் ஒரு குழந்தை நிகழ்வு நிகழ்வுகள் நிகில் நிறுவனம் நிகில் பயிற்சி நிலைப்பாடுகள் நிழல் பதியம் நீட் பார் ஸ்பீட் நீயா நானா நுட்பம் நூர் டீச்சர் நூல் அறிமுகம் நூல் பட்டியல் நூல் விமர்சனம் நேர நிர்வாக தளம் நேர நிர்வாகம் நேர மேலாண்மை நேர்மறைச் சிந்தனை பக்தி பஞ்ச் 75 படிக்க வேண்டாத பதிவுகள் பட்லர் பணமதிப்பு நீக்கம் பணிநிறைவு பதிவர் சந்திப்பு 2014 பதிவர் சந்திப்பு 2015 பதிவர் சந்திப்பு 2015 ஆல்பம் பதிவர் திருவிழா 2015 பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் பயிற்சிகள் பயிற்சித்துறை பலூஸ்சிஸ்தான் பள்ளி பள்ளிக்கல்வி பாகுபலி பாட்டன் காட்டைத் தேடி பாபநாசம் பாரதி புத்தகாலயம் பாரத் ஸ்டேஜ் 4 பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7 Fast and Furious 7 பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 8 பாஸ்ட் எய்ட் பிட் டோரறேன்ட் பிரபு சாலோமோன் பிராங்கின் படங்கள் பிரார்த்தனை பிரித்தாளுதல் பிரியங்கா பிரேமா தக்ஷிணாமூர்த்தி பிரேம்சந்த் பு.கோ.சரவணன் புகைப்படத் தொகுப்பு புதியவன் புதுகை குளம் மீட்பு புதுகை செல்வா புதுகை தொல்லியல் ஆய்வுக் கழகம். புதுகை தொல்லியல் ஆய்வுக்கழகம் புதுகையின் கல்வி முகங்கள் புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட பாறை ஓவியங்கள் புள்ளிகள் புறம்போக்கு பெரியார் பெற்றோர் பேப்பர் ஒன்று பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி பைரவா பொது பொதுப் போக்குவரத்து மேம்பாடு பொற்பனைக்கோட்டை போட்டிகள் ப்ரோசன் ப்ளாகர் டிப்ஸ் மணிகண்டன் ஆறுமுகம் மதத்தீவிரவாதம் மதுரை மதுரை வரலாறு மரபு நடை மரபு வழி நடை மராத்திய மொழிப் படங்கள் மலர்தரு மழைமனிதர்கள் மனிதர்கள் மாட் மாக்ஸ் ஃபியூரி ரோட் Mad_Max:_Fury_Road மாணவர் போராட்டம் மாண்பு மிகு மகளிர் - அறிவியல் சுடர்கள் மாண்புமிகு மகளிர் மாதொரு பாகன் மாத்யு ப்ளோரிஸ் மாமழை நினைவுகள் மார்க் அண்டோனி மாறாப்புன்னகை மாற்றத்தின் முகங்கள் மியான்மர் மிருதன் மிஷன் இம்பாசிபிள் 5 Mission Imposible Rogue Nation முகநூல் முகநூல் நிலைத்தகவல்கள் முகநூல் பகிர்வு முத்தலாக் முத்துக்கிருஷ்ணன் முத்துநிலவன் முனைவர் மு பிரபு முனைவர் ஜம்புலிங்கம் முனைவர். அருள்முருகன் மூன்று புத்தகங்கள் வெளியீடும் குடும்ப விழாவும் மெட்ராஸ் மெமரி கார்ட் மேன்மை இதழ் அறிமுகம் மொழி மொழித்திறன் மோசன் காப்ச்சர் யாதும் ஊரே யாழியின் இரண்டு தொகுப்புகள் ரபீக் ரபீக் பகிர்வு ரம்ஜான் ரவீந்திரன் ரஜனி ரஷ் ரஹ்மான் ராஜ கோபால தொண்டைமான் ராஜ சுந்தர்ராஜன் ராஜசுந்தர்ராஜன் ராஜா சுந்தர்ராஜன் ராஜேஷ் வைத்யா ரிச்சர்ட் அட்டன்பரோ ரியோ ஒலிம்பிக் ருத்ரையா ரோக் ஒன் movie review ரோஹித் வேமுலா லாரீனா லூசி லோகன் 2017 வகுப்பறை அனுபவங்கள் வகை ஒன்று வணக்கம் வண்ணதாசன் வலைச்சரம் வலைப்பதிவர் மாநாடு வலைப்பூ நுட்பம் வள ஆசிரியர்கள் வனமகன் வாசிப்பு வாசிப்பு அனுபவப்பகிர்வு வாழ்த்துக்கள் வாழ்வியல் திறன்கள் பயிற்சி. வாழ்வியல் திறன்கள் பயிற்சி. தன்னை அறிதல் பயிற்சி வானவில் விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் விடைபெறல் விதைக்கலாம் வித்டிராயல் சிம்ப்டம் விப்லாஷ் விருது வில்வன்னி நாகரீகம் விவசாயம் விஜய் டீ.வி விஜூ கனைக்ட் விஷாலின் விஸ்வரூபம் வீணை இசை வீதி கூட்டம் வீதிக் கூட்டம் வீதிக்கூட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் வீரமுரசு சுப்பிரமணிய சிவா வெயிலில் நனைந்த மழை வெர்சடைல் ப்ளாகர் விருது வெள்ளைப் புலி வெற்றி இலக்கியம் வைகறை வைகறையின் ஜெய் நல நிதி ஜல்லிக்கட்டு ஜாக்கி சேகர் ஜாதவ் ஜூராசிக் வோர்ல்ட் ஜெயப் பிரபு ஜெர்மனி ஜே.சி. பயிற்சி ஜேசி இயக்கம் ஜோக்கர் ஜோசப் விஜூ ஷபானா பாஸிஜ் ஷாமிலா தலுவத் ஷாருக்கான் ஷான் கருப்புசாமி ஷாஜகான் ஸ்டான்லி குப்ரிக் ஸ்பாய்லர் ஸ்பிலிட் ஸ்ரீதர் சுப்பிரமணியன் ஹாக்ஸா ரிட்ஜ் ஹாண்ட்ஸ் ஆப் ஸ்டீல் ஹாலிவுட் ஹெர்குலிஸ்