2 கன்ஸ்

இரு துப்பாக்கிகள், டான்சல் வாசிங்க்டன், மார்க் வால்பர்க் இணைந்து மிரட்டிய படம். கதை வழக்கம்போல் ஒரு போதை வியாபாரி, அவனை ஆதாரத்துடன் கைது செய்ய தொடரும் ஒரு அண்டர்கவர் போலிஸ் அதிகாரி, அவருக்கு ஒரு கைப்பிள்ளை என பல அதிரடி சரவெடிகளை பொதித்துவைத்துள்ள திரைக்கதை.

கொஞ்சம் போதைப்பொருள் வில்லனின் இடத்தில் கிடைத்தால் கைதுசெய்துவிடலாம் என்னும் நிலையில், விவரமான வில்லன் கத்தையாய் பணத்தைக் கொடுத்து வெறுப்பெற்றுகிறான்.இப்படி தொடங்கும் கதை பேசாமல் போதைக் கடத்தல் வில்லனின் பணத்தை பாங்கில் இருந்து அபேஸ் செய்தால் என்ன என்று திரும்பி, ஒரு நல்ல காமெடியான வங்கிக் கொள்ளையில் முடிகிறது. முப்பது லெட்சம் இருக்கும் என்று போனால் அங்கெ நாலுகோடியே முப்பது லெட்சம் இருக்கிறது.

டான்சலின் கைபிள்ளை ஒரு நேவல் ஆபீசர் என்பதும், இந்தப் பணத்தை திருடி நேவியின் ரகசிய செயல்பாடுகளுக்கு வைத்துக்கொள்லாம் என்பது நேவியின் திட்டம்!

சரியான ஆக்சன் படம்.  குறிப்பாக கிளைமாக்சில் பணம் மழையாக பொழிய இரண்டு நண்பர்களும் போடுகின்ற துப்பாக்கி சண்டை, வெகுஜோர். வால்பெர்க் இந்தப் படத்தில் வாய்ஓயாமல் பேசும் ஒரு காரக்டர், மிகச் சரியாக குறிபார்த்து சுடும் ஒரு நேவல் ஆபிசர் என முத்திரை பதித்திருக்கிறார்.

டான்சல்பற்றி சொல்லவே வேண்டாம். இப்படி ஒரு அவுட் புட் ரொம்ப நல்ல வொர்க். பிளைட் படத்தில் குடிகார விமானியாக நடித்ததற்கு பின்னர் இப்படத்தில் பார்த்தவர்களுக்கு கொஞ்சம் குழப்பம் இருக்கும். எப்படி இப்படி ஒரு மசாலா அவுட்புட் தர முடிகிறது டான்சலால். நம்ம இயக்குனர்கள் நிறய கற்கவேண்டும். ஒருபடத்தில் குடிகாரன் என்றால் அவன் கடைசிப் படம் வரை குடிகாரன் என்கிற மனோபாவம் இங்கே ரொம்ப அசிங்கமாய்த் தொடர்கிறது. அங்கே அப்படி இல்லை ஒருபடத்தில் அசகாயசூரராக நடித்துவிட்டு அடுத்த படத்தில் நடுரோட்டில் அடிவாங்கி அழும் ஒரு கதாபாத்திரத்தை கூட அருமையாக செய்வார்கள். அதைவிட ஜோரான விசயம் இரண்டு படமும் ஓடும், கொண்டாடப்படும். இங்கே கொஞ்சம் யோசித்து பாருங்கள்?

நம்ம பயக இப்பதான் உலகத்தரம் வாய்ந்த லென்ஸ், இசை, இ.எப்.எக்ஸ் என்று முன்னேறியிருக்கிரார்கள், கதை திரைக்கதை இன்னும் காத்திருக்கிறது.

பாக்கியராஜ், பாலா, மிஸ்கின் போன்ற சிலர் விதிவிலக்கு..

அன்பன்
மது

ஒரு கலைவடிவம்


இப்படி குச்சிகளை சேர்த்து

இப்படி அடுக்கினால் 


இப்படி பார்ப்பார்கள் 

ஆமா எப்படி இருக்கு ?

Comments

 1. குச்சிகளும் நல்லா இருக்குங்க...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா..

   Delete
 2. வணக்கம் சகோ. மிக சிறப்பான ஒரு விமர்சனத்தோடு நம்ம சினிமாவின் போக்கையும் சிந்திக்க வைத்தது சிறப்பாக உள்ளது. ஹாலிவுட் படங்களைப் பார்க்க வேண்டுமெனும் ஆவல் தங்களது விமர்சனத்தால் எனக்கு ஏற்பட்டுள்ளது. இனி நீங்கள் சொல்லும் நல்ல படங்களைப் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி சகோ. தொடருங்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி...
   நான் இன்னும் நல்ல படங்கள் குறித்து முழுமையாக எழுதவில்லை.
   பார்க்கிற படங்களை எழுதுகிறேன்.
   நல்ல படங்கள் என்றால் முகநூலில் முனைவர்.பிரபுவை தொடர்க..

   Delete
 3. நல்ல விமர்சனம்! அவர்கள் அளவிற்கு நாம் படம் எடுக்க வேண்டுமென்றால் பல சென்டிமென்ட்ஸ்லிருந்து நாம் வெளிவர வேண்டும்!! பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா..

   Delete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...