பக்தி, பிரார்த்தனை எனது பார்வை -1


பக்திமார்க்கம் மனித குலம் உய்ய மனிதனால் வடிமைக்கப்பட்ட ஒரு கருவி. உலகின் உன்னதமான வெற்றி இலக்கியங்கள் எல்லாம் பக்தியும் பிரார்த்தனையும் தனிமனித வாழ்வில் ஒரு நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்பதை ஓயாமல் சொல்லிக்கொண்டே இருகின்றன.ஒரு முறை அமெரிக்க மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி மருத்துவர் கணித்ததைவிட விரைவாக குணமடைய அதிசயித்த மருத்தவர்கள் இதற்கான காரணிகளை ஆராய்ந்து பார்த்ததில் ஏதும் புரிபடவில்லை.

சரி பாட்டியிடமே கேட்போம் என்று தீர்மானித்தனர் மருத்துவக் குழுவினர். விசயத்தை கேட்ட பாட்டி மெல்ல புன்னகைத்தவரே சொன்னார் நான் இறைவனிடம் பேசுவேன்!

தனியே இருக்கும் பொழுது பைபிளை இறுகப்பற்றி  ஏதோ கர்த்தர் பக்கத்து பெட்டில் அட்மிட் ஆகியிருக்கும் சக நோயாளி மாதிரி பேசினார் பாட்டி. இது உளவியல் ரீதியில் அவருக்கு விரைந்த உடல்நலத்தை அளித்திருக்கிறது!
வாழ்க்கை யாரையும் விட்டுவைக்காமல் சோதிக்கும். கடும் நெஞ்சுரம் உள்ளவர்கள் எந்த இறைவனையும் துணைக்கு அழைக்காமல் இந்த சோதனைகளை கடக்கின்றனர். பெரும்பாலோனர் இறைசக்தியை துணைக்கு அழைக்கின்றனர்.

இன்னும் மனிதனுக்கு மனித உடலைப்பற்றிய ஆயிரம் கேள்விகளுக்கு விடைகள் தெரியாது. சமீபத்திய ஆய்வு ஒன்று தூங்கினால் மூளையில் உள்ள விசப்பொருட்கள் விரைந்து வெளியேறி மூளை நல்ல செயல்பாட்டை பெறும் என்று கண்டறிந்திருகின்றது. அதேபோல் தூக்கம் கெடுவது மூளையில் உள்ள கிரே மேட்டரின் அளவை குறைப்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள். இப்படி இன்னும் நாம் அறியாத பல விசயங்களில் ஒன்று பிரார்த்தனையின் அறிவியல் நிருபணம்.

இப்படி பக்தியும் பிரார்த்தனையும் நமது உடல் இயக்கத்தில் நேர்மறையான நல்ல விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றே கருதுகிறேன். அதற்காக பிரார்த்தித்தால் தங்ககாசுகள் வானத்தில் இருந்து கொட்டும் என்று சொல்வது மிக மிக பிற்போக்கானது.

கோவில் வாசலில் ஒரு பசித்த நாயைக் கடந்து கடவுள் சிலைக்கு நான் பாலாபிசேகம் செய்வேன் என்றால் எனது பிரார்த்தனை சுயநலமிக்கது. நான் உண்மையில் பக்தி பிரார்த்தனை என்று என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பது வெள்ளிடைமலை. உண்மையில் நான் நேசிக்கும் பூசிக்கும் கடவுளை நிந்திக்கிறேன் அல்லவா?

யாரவது வந்து அது நாயின் கர்மா நீ பாலாபிசேகம் செய்வது உன் கர்மா என்று கர்மா கருமாந்திரம் பேசாதீர்கள். மனிதத்தை சக ஜீவராசியை நேசிக்க சொல்லாத எந்த தத்துவமும் கருமம்பிடித்த தத்துவம் என்பதே என் தெளிவு.

இன்னும் பேசுவோம்.
அன்பன்
மது.

Comments

 1. கர்மா = கருமாந்திரம்... அதானே...!

  ReplyDelete
  Replies
  1. சக உயிர்கள் குறிந்து எவ்வித அக்கறையும் இல்லாதா பிரார்த்தனை, வழிபாடு கருமாந்திரம் என்பதுதான் சரியான புரிதலாக இருக்கும்..சரியா அண்ணா

   Delete
 2. கர்மா = கருமாந்திரம்... அதானே...! பார்வைகள் தொடரட்டும்...

  ReplyDelete
 3. தேளிவான வார்த்தைகள் நண்பரே.
  மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம்
  என்பது திருமூலர் வாக்கு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா ...

   Delete
 4. பக்தியைப் பற்றிய ஒரு நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

  "அன்பே சிவம்" என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. இன்று அன்பே சிவம் என்று சொல்லி மகிழும் நாம் சில நூற்றாண்டுகள் பின்னே சென்று பார்த்தோம் என்றால் ....
   இதயத்தின் சுவர்களில் சில விரிசல்களோடுதான் வருவோம்...

   Delete
 5. அழகிய பதிவு.

  ReplyDelete
 6. மதங்கள் உருவானது மனித நேயத்தை காக்க தானே அதுவே மோதல்கள் உருவாகவும் மனித நேயத்தை, ஒற்றுமையை குலைப்பதும், நசுக்குவதும் என்றால் அதை ஏன். எந்த மதமும் தவறாக போதிக்கவில்லையே. செம்மை படுத்தாவிட்டாலும் சேதப் படுத்தாமல் ஆவது இருக்கலாமே. நீங்கள் சொல்வது உண்மை தான் ! சகோ எவ்வளவு அழகாக சொன்னீர்கள்.
  நன்றி வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
 7. அருமை..உண்மைதான்...சக மனிதருக்கும் பிற உயிர்களுக்கும் ஒன்றும் செய்யாமல் செய்யும் பிரார்த்தனை பிரார்த்தனையே அல்ல..

  ReplyDelete
  Replies
  1. warm welcome and greetings poetess
   thank you very much for the feed back...

   Delete
 8. வணக்கம் சகோ
  கூழுக்கும் பாலுக்கும் ஏழைகள் அழுகையில் ஆங்கே பாலாபிசேகமா எனும் பெரியாரின் (பெரியார் தானே சகோ) வார்த்தைகளைப் பிரதிபலிக்கிறது தங்கள் பதிவு. காலை பள்ளிக்கு செல்கையில் இருக்கும் இடமே கோவில் உள்ளமே கடவுள்னு ஒரு தலைப்பு வைத்து பதிவு போடலாம்னு யோசித்த வரிகள் அனைத்தும் நீங்கள் போட்டீங்களே சகோ!! ம்ம்ம் ஆகட்டும் நான் வரிகளை மாற்றிக்கொள்கிறேன். நான் நாய் எல்லாம் நினைக்கல சகோ வெளியில் அமர்ந்து கையேந்தும் கைகளைக் காணாதது போல செல்லும் மனம் இருக்கிறதே அது மிருக குணம்... மிக்க நன்றி சகோ..

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...

Popular posts from this blog

ஜான் விக் 3

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 2 வீரபாண்டிய கட்டபொம்மன்

நாளைய மனிதர்களின் நேற்று