Tuesday, 21 March 2017

காப்புரிமை அவசியமா?
காப்புரிமை குறித்த விவாதங்கள் ஒன்றும் புதிதல்ல.சொல்லப் போனால் காபி ரைட் இயக்கதிற்கு மாற்றாக காப்பி லேப்ட் இயக்கம் எழுத்து பல ஆண்டுகள் ஆகின்றன.

விண்டோஸ் காப்பிரைட், பேட்டன்ட் உரிமைகளில் பில் கேட்ஸ் அறுவடை செய்ததுதானே உலகின் பெரும் பணக்கரார் என்கிற இடம்!

இன்டெல் நிறுவனம் ஒரு நாளுக்கு பதினோரு பேடன்ட் ரைட்களை பதிவு செய்கிறது.

நல்லவேளை மைக்ரோ பிராசசர் என்று யாராவது பேசினாலே எங்களுக்கு பணம் கொடுக்கணும்னு அவர்கள் ஆரம்பிக்கவில்லை.

சிலோன் ரோடியோ எம்.ஜி.ஆருக்கு ராயல்டி தந்த பொழுது அதில் தனக்கும் பங்குவேண்டும் என்று டி.எம்.எஸ் கேட்டது பிடிக்காமல்தான் எஸ்.பி.பியை எம்.ஜி.ஆர் பயன்படுத்த ஆரம்பித்தார் என்றொரு செய்தி உண்டு.

நாமெல்லாம் எம்.ஜி.ஆர் போலத்தான் யோசிக்கிறோம்!

என்னை நிறைய யோசிக்க வைத்த காப்புரிமை பிரச்னை தி.கவின் பெரியார் நூற்களின் உரிமைப்பிரச்சனைதான்.

ஆரம்பத்தில் கடுமையாக நான் விமர்சித்துவந்தாலும் தோழர்  பிரின்ஸ் என்ராசு பெரியாரிடம் பேசிய பொழுது அவர் சொன்னகாரணம் ஏற்புடையதாக இருந்தது.

உரிமைகளை விட்டுத்தரும் பொழுது யார்வேண்டுமானாலும் நூல்களை அச்சிடலாம் என்கிற உரிமையை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தும் வரை ஏதும் பிரச்னை இல்லை.

எப்போ எப்போ என்று காத்திருக்கும் சிலர் அய்யாவின் எழுத்தில் தங்கள் சொந்த சரக்கைச் சேர்த்துவிட்டால்?

யோசித்து பாருங்கள். பெரியார் வழிபாட்டு முறை, பெரியார் பூஜை முறை என்று எழுதவாய்ப்பு இருக்கிறது இல்லையா?


சமீபத்தில் இளையராஜா எஸ்.பி.பி கருத்துவேறுபாடு நண்பர்கள் பலரையும் உணர்ச்சிவசப்படவைத்திருக்கிறது.

பொதுவாகவே இளையராஜாவின் ரசிகர்களே இரண்டுவிதமாக இருக்கிறார்கள். இசையை மட்டும் ரசிப்பவர்கள், அவரையும் அவரது இசையும் ரசிப்பவர்கள் என்ற பிரிவு உண்டு.

இசையை மட்டும் ரசிப்பவர்கள் இராவை அவரது கர்வம் வழியும் நடத்தைக்காக சாடுவதும் உண்டு.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கருவறைக்குள் கடவுளையே தடை செய்யும் காப்புரிமைகள் குறித்து நாம் சினப்பதே இல்லை. ஒரே வரியில் அது அப்படித்தான் என்று போய்க்கொண்டே இருப்போம்.

இந்த சிகாமணிகள்தான் இன்று இளையராஜா தவறு செய்துவிட்டார் என்கின்றனர். நல்ல நியாயம் இவர்கள் நியாயம்.

இவர்களில் சிலர் ஜாதி புத்தி என்று எழுத்தில் மலம்  கக்கியிருக்கிறார்கள். எவ்வளவு திமிர் இருந்தால் இந்த வார்த்தை வரும். இந்திய வல்லரசின் மேன்மைமிகு குடிகளின் தகுதி இதுதான்.

இராவை அவரது தனி வாழ்வோடு சேர்ந்து ரசிப்பவர்கள் ஒருபோதும் அவரை விட்டுத்தரமாட்டார்கள்.

என்னுடைய பார்வையில் இராமீது எந்த தவறும் இல்லை என்றே சொல்வேன்.

மேலை நாடுகளில் இருப்பது போல தனி இசைக்குழுக்கள் எழும் பொழுது இதுபோன்ற சிக்கல்கள் தீர்வுக்குவரும்.

அதுவரை எளிய ரசிகர்களுக்கு இந்தப் பிரச்சனையின் பின்னால் இருக்கும் நியாயம் புரிய வாய்ப்பில்லைதான்.

இளையராஜாவை அவரது காப்புரிமையை விட்டுத்தரச் சொல்பவர்கள் கருவறைக் காப்புரிமையையும் விட்டுத்தரச் சொல்வார்களா?


மேலும் ஒரு வியப்பாக தங்கள் பதிவுகள் சிலரால் திருடப்படுவதாக வருந்தும் பதிவர்கள் சிலரே இரா மீது குற்றப்பத்திரிக்கை வாசித்திருக்கிறார்கள்!

தங்கள் படைப்பு என்கிற பொழுது ஒன்றும் அடுத்தவர் படைப்பு என்கிற பொழுது வேறுமாதிரியும் பேசும் நண்பர்கள் என் இதழில் ஒரு குறுநகையைப் பொருத்துகிறார்கள்.


அன்பன்
மது10 comments:

 1. நல்ல பகிர்வு. For and against ரெண்டும் படித்து வருகிறேன்.

  என்னைக் கேட்டால், இதில் கருத்து சொல்ல வேண்டியதில்லை. இது அவர்களுக்கு இடையேயான பிரச்சனை.

  ReplyDelete
 2. //சிலோன் ரோடியோ எம்.ஜி.ஆருக்கு ராயல்டி தந்த பொழுது அதில் தனக்கும் பங்குவேண்டும் என்று டி.எம்.எஸ் கேட்டது பிடிக்காமல்தான் எஸ்.பி.பியை எம்.ஜி.ஆர் பயன்படுத்த ஆரம்பித்தார் என்றொரு செய்தி உண்டு.//

  இது எனக்குச் செய்தி! டி எம் எஸ் தனது குறளால்தான் எம் ஜி ஆருக்குப் பெருமை என்று சொன்னதால் என்று(ம்) படித்த ஞாபகம்.

  இளையராஜா - எஸ் பி பி விவகாரத்தில் படித்த உடனே இளையராஜா மீது முதலில் அதிருப்தி ஏற்பட்டாலும், பின்னர் விவரங்கள் ஒவொன்றையும், ஒவ்வொரு இடத்திலும் படித்தபோது நியாயம் புரிந்தது. சாதியை எந்த இடத்திலும் இழுப்பவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும், குறள் அல்ல, குரல்!

   Delete
 3. இது இராவின் சொந்தப் பிரச்சனை இதில் மற்றவர்கள் கண்டபடி விமர்சிக்க கூடாது என்பது எனது கருத்து தோழரே.

  ReplyDelete
 4. அவர்கள் இருவரையும் மோதவிட்டு யாரோ சந்தடி சாக்கில் இந்த சிறு விஷயத்தை பெரிதாக்குகிறார்களோ என தோன்றுகிறது ..அவர்கள் இருவருமே பேசி ஒரு தீர்வுக்கு வரட்டும் ..அவர்கள் இருவரையும் இந்த போராளிகள் பிரிக்காதிருந்தால் நலல்து ...
  அப்புறம் எங்கே சந்தர்ப்பம் அமையும் அதில் ஜாதி மதம் விஷயத்தை நுழைக்கலாம் என்று காத்திருப்பாங்க போல சிலர் மிக்க வேதனையான விஷயம் ..இளையராஜா அவர்களை பொறுத்தவரை அவர் கொஞ்சம் ஸ்ட்ரெயிட் பார்வார்ட் முன்கோபி அதனாலேயே அடிக்கடி இப்படி விமர்சனங்கள் .எழும்புகிறது ..
  பணமும் பேராசையும் நல்ல மனிதர்களின் நட்பை சூறையாடுகிறதே :(

  ReplyDelete
 5. இரா என்ன செய்தாலும் அதை நியாயப்படுத்தும் கூட்டத்தினர் இருக்கும் வரை சில கோணல்கள் நிமிராது என்று தோன்றுகிறது.

  வக்கீல் நோட்டீஸ் அனுப்பி நட்பை உடைத்துக்கொண்டவர் இரா.

  இவர் முட்டிக்கொண்டு நின்றவர்களைத்தான் நாம் குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம். வைரமுத்துவிலிருந்து இப்போது எஸ் பி பி வரை. இடையில் பாரதிராஜா, பாலச்சந்தர், ஏ வி எம் நிறுவனம், மணிரத்னம் எல்லாம் உண்டு.

  இராவை ரசிப்பது என்பது அவரை விம்சர்சனங்களுக்கு அப்பால் வைப்பது என்றால் அது சரியல்ல.

  ReplyDelete
 6. நியாயத்தை சொல்லியிருக்கிறீர்கள். வரவேற்கிறேன். தனது இசையை வியாபாரம் செய்து சம்பாதிப்பவரிடம்தான் ராஜா பங்கு கேட்கிறார் . லட்சக்கணக்கான ஜனங்கள் கோடிகளைக் கொட்டி அவர் பாடல்களை கேட்பதற்கு தயார் ஆவதை வணிகம் செய்யும்போது இளையராஜா தனது காப்புரிமையை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. ரகுமான் தனது இசைக்கு காப்புரிமை பெற்றிருக்கிறார் . சத்தமே இல்லாமல் எல்லா நிறுவனங்களும் பங்கு வழங்கி கொண்டுதானிருக்கின்றன. ராஜா என்று வரும்போது மட்டும் பலருக்கு மாற்றான் பார்வை எங்கிருந்து வருகிறதோ? இதில் சாதியை குறிப்பிடும் சல்லித்தனமான விமர்சகர்கள் என்றுதான் மாறுவார்களோ?

  ReplyDelete
 7. உங்கள் பாயின்ட்ஸ் நல்லாருக்கு. இப்படிப் பல பதிவுகள் சரி என்றும் தவறு என்றும்...இதிலிருந்து தெரிவது என்னவென்றால் நம்மூரில் இன்னும் லா தெளிவாக்கப்பட வேண்டும் லே பெர்சனுக்கும் தெரிஉயும் அளவிற்கு விளக்கபப்ட வேண்டும். இது வருங்கால மற்றும் தற்போதைய வளர்ந்துவ் அரும் இசைக்கலைஞர்களுக்கு உதவும் இல்லையா...

  கீதா

  ReplyDelete
 8. நன்றாக அலசி உள்ளீர்கள்

  மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
  https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

  ReplyDelete
 9. முதல் போடுபவர்க்குகே முதல் உரிமை !அவருடன் யார் ஒப்பந்தம் போட்டிருந்தாலும் உரிமை கேட்பதில் தவறில்லை :)

  ReplyDelete

தங்கள் வருகை எனது உவகை...