Saturday, 22 April 2017

லேய் மரம் என்ன உங்க வீட்டு பொண்ணாப்பா, பூத்தா பொங்கல் வைக்க ?

தோழமைகளுக்கு வணக்கம்,


தகவலைச் சொன்ன பெரியவர்

வாழ்வின் மிக எளிமையான விசயங்கள் கூட என்னை எடி.எம்மில் பணத்தை பார்த்ததது போன்ற ஆனந்த அதிர்ச்சியில் தள்ளிவிடுகின்றன.



 தோப்புப்பட்டியில் விதைக்கலாம் மரக்கன்று நடும் நிகழ்வில் ஒரு தகவலை கிராமத்தின் பெரியவர் ஒருவர் சொன்னார்.

நாங்கள்  ஏழு மரக்கன்றுகளை நட திட்டமிட்டிருந்தோம். ஆனால் கூண்டுகள் ஆறுதான் கிடைத்தன.

கோவில் என்பதால் அரசையும், வேம்பையும் ஒன்றாக நடலாம் என்று சொன்னோம்.

சரி என்றார்கள்.

அப்போதுதான் பெரியவர் அந்த விசயத்தை சொன்னார். நடுவது பெரிய விசயமில்லை. வேம்பு பூ பூக்கிற பொழுது பொங்கல் வைக்கணும் என்றார்.

ஒருகணம் ஆச்சர்யத்தில் உறைந்தேன்.

என்ன சொல்றீங்க மரம் பூ பூத்தால் பொங்கல் வைக்க வேண்டுமா?
ஆமா, அந்த பாருங்க கரையில் ஒரு வேம்பு பூ விட்டிருக்கிறது அதற்கு வரும் செவ்வாய் அன்று பொங்கல். காலையில எட்டுமணிக்கெல்லாம் வந்திருங்க என்றார்.

நமது மரபில் மரம் பூத்தால் பொங்கல் வைத்திருகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய செய்தி.

கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு இது இயல்பான செய்தியாக இருக்கலாம்.

என்போன்ற ஆட்களுக்கு மூர்ச்சை வரவைக்கும் செய்தி இது.

எவ்வளவு செழுமையான பண்பாட்டோடு நாம் இருந்திருக்கிறோம்?
அப்படி இருந்த நம் நாட்டில்தான் மணற்கொள்ளை நடக்கிறது எனபதும் நினைவில் எழ கலவையான உணர்வுகளோடு விடைபெற்றேன்.

#தமிழன் என்று சொல்லடா


பின்னூட்டங்கள்.


Rafeeq Sulaiman உண்மைதான் நம்மண்ணின் பெருமைகாத்தலென்பது நமது மரபு மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதேயாகும். அப்போதுதான் தலைநிமிர்ந்து நடக்க முடியும்
Unlike · Reply · 6 · 18 hrs

Subramanian ஆமாம் சார் கடந்த வாரம் தான் நம்ம வீட்டில் தென்னனை மரத்துக்கு பொங்கல் வைத்தோம்
Unlike · Reply · 2 · 18 hrs

Selva Kumar அய்யா..தென்னை பாலைவிட்டால் இதுபோல் உண்டு...
Unlike · Reply · 2 · 18 hrs

             Kasthuri Rengan பாலை ப்ரிட்ஜிலும், தேங்காயை கடையிலும்            பார்க்கும் தலைமுறைக்கு இதெல்லாம் புதுசு ஆசானே
           Like · Reply · 2 · 18 hrs

           Selva Kumar மன்னிக்கவும் பாளை...
           Unlike · Reply · 1 · 18 hrs

Devatha Tamil நானும் தென்னை பாளை விட்ட போது வைத்தேன்
Unlike · Reply · 2 · 18 hrs

            Devaraj Pudhugaipudhalvan இத்தன பேரு பொங்க வச்சுருக்கீக!         ஒருத்தரும் என்ன கூப்பிடவுமில்ல! பொங்கலுந்தரல!
Unlike · Reply · 1 · 17 hrs

மா. செல்லத்துரை எங்க ஊர் தலைவரே (தோப்புப்பட்டி)
Like · Reply · 1 · 17 hrs

பேசுவோம் வாங்க நல்ல தகவல் நன்றி
Like · Reply · 1 · 17 hrs

Siva Shanmugam தமிழனின் ஒவ்வொரு செயலும் அறிவியல் சார்ந்தது என்பதுதானே வரலாறு.
Unlike · Reply · 1 · 10 hrs

Sivasankaravadivelu Subramanian வாழை போட்டு முதல் குலை போட்டவுடன் பாயாசம் வைத்து வீட்டுக்கு வீடு கொடுப்பார்கள்.முதல் குலையை கோவிலுக்கு கொடுப்பார்கள்.அதை பக்கத்து வீடுகளுக்கு கொடுப்பார்கள்.
Unlike · Reply · 2 · 9 hrs

Adaikalaraj Arumugam ஏறத்தாழ 22 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தோப்பில் உள்ள தென்னை குழை தள்ளியபோது பொங்கல் வைத்த ஞாபகம் வந்து செல்கின்றது...
Unlike · Reply · 1 · 4 hrs

Palanivelu Velu உங்க அக்கவுண்ட்ல பணமிருந்தா ஏ.டி.எம் ல பணம் வரும் .அக்கவுண்ட்ல பணமில்லன்னா ஏடி.எம்.ல பணம்வராது இதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு?
Unlike · Reply · 1 · 2 hrs

2 comments:

  1. நானும் முதல்முறை அறிகிறேன் தோழர்
    த.ம.

    ReplyDelete
  2. தென்னை மரம் பாளை விட்டால் பெண் வயதுக்கு வந்தால் செய்யும் சடங்குகள் அனைத்தும் செய்வர்

    ReplyDelete

தங்கள் வருகை எனது உவகை...

Labels

12 Years a Slave (2013) 2001: எ ஸ்பேஸ் ஆடிசி A Walk Among the Tombstones Amr Waked Avengers Age of Ultron avms kaarthik bairava blogging tips buds to blossoms c.c.e honour killings innovations in Marketing into the storm Iyothee Thass jci jci pudukkottai central kalvi kannaki kovil keezhadi khan's academy kochadaiyaan review Lucy(2014) spoiler madurai Min-sik Choi Morgan Freeman oblivion Rafeeq Friend robin williams rouge one 2016 sasikala for cm Scarlett Johansson shajakaan spoiler ssa T.V.18 yaathum oore episode 12 Tamil Short Story tesla motors thamizh thirai vimarsanm udayakkumar viswaroopam movie want to write ? www.ted.com X Standard Tamil Memory Songs Tamil Nadu X-Men: Days of Future Past அ பெ கா பண்பாட்டு இயக்கம் அ.பெ.கா அசத்தல் அரசுப் பள்ளி அச்சம் என்பது மடமையடா அப்பா அமெரிக்கா அம்மா அயோத்தி தாசர் அரசு ஊழியர்களின் குரல் அரசுப் பள்ளிகள் அரிமளம் பள்ளி அரைவல் அலைகள் அலையும் குரல்கள் அவென்ஜெர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான் அறிவிப்புகள் அனுபவம் அன்னவாசல் கே. ரெங்கசாமி ஆஃபரா ஆங்கில கேட்டல் பயிற்சி ஆங்கிலப் படம் ஆங்கிலப் பயிற்சி ஆங்கிலம் ஆசிரியர் ஆசிரியர் தினம் ஆசை தொடர் பதிவு ஆண்டனி ஆதிச்சநல்லூர் இசை இடைநிறுத்தம் இடைநிற்றல் இந்திய தேசிய ராணுவம் இந்தியா வரங்களும் சாபங்களும் இமான் இளையராஜா இறுதிச் சுற்று இனப்படுகொலை இன் டு தி ஸ்டார்ம் இன்னுமொரு சிறுகதை. புன்னகை இஸ்ரேல் ஈர்ப்பலைகள் ஈழம் ஈழம் சமுகம் உயிர்மை உலகின் பொருளாதாரக் கொள்கை உலோக உருக்கு ஆலை எக்ஸ்.மென் அபோகிளிப்ஸ் எட்ஜ் ஆப் டுமாரா எல்காம் எஸ்.எம்.எஸ். கொள்ளை ஏற்பாடுகள் ஐஸ் ஸ்டுபா ஒரு கோப்பை மனிதம் ஒரு முகநூல் பகிர்வு ஒலிம்பிக் ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் ஓவியர்கள் கடிதம் கட்செவி பகிர்வு ஒன்று கட்டிடப் பொறியியல் கட்டுரைப் போட்டி கண்ணகி கோவில் கதிர்வேல் கதை திரைக்கதை வசனம் இயக்கம் கத்தி கயல் கருத்தாளிகள் கலாச்சராம் கலிலியோ அறிவியல் மையம். கல்வி கல்வித்துறை விழா கல்வியாண்டு கவண் கவிஞர் நீலா கவிதை கவிதை அறிமுகம் கவிதை பகிர்வு கவிதைகள் கவிதைத் தொகுப்பு கவுரவக் கொலைகள் கற்க கசடற கற்பித்தல் யுக்திகள் கனவில் வந்த காந்தி கனிமொழி காக்கா முட்டை காணொளிகள் சில காதர் காந்தி திரைப்படம் காப்டன் அப்பாஸ் அலி காப்புரிமை கார்டியன்ஸ் ஆப் தி காலக்ஸி கார்த்திக் கார்த்திக் கார்த்திக் காவியத் தலைவன் காற்றுவெளியிடை கிரமத்து குழந்தைகள் கிரேஸ் பிரதீபாவின் துளிர் விடும் விதைகள் கிஷோர் டேவிட் ராஜ ராஜன் கீழடி குருநாதசுந்தரம் குழந்தை வளர்ப்பு குழந்தைகள் தினம் குறும்படம் கேவல் நதி கொசுவத்தி கொசுவர்த்தி கொஞ்சம் புதிய அறிவியல் கொஞ்சம் வெப் கொடி காத்த குமரன் கொம்பன் திரை விமர்சனம் கோச்சடையான் கோடை நகர்ந்த கதை கோபிநாத் கோவை ஆவி க்விஸ் சக்கரக்காலன் சக்தி சவுந்தர் ராஜன் சந்தானம் சந்திப்பு சந்திரமோகன் வெற்றிவேல் சந்தைப்படுத்துதல் சமுகம் சமுத்திரக்கனி சமூகம் சர்தார் வல்லபாய் பட்டேல் சித்தன்னவாசல் ஓவியங்கள் சித்தன்னாவாசல் இலக்கிய சந்திப்பு சிவகார்த்திகேயன் சிறுகதை சினிமா சீனு சுகு சுயபுராணம் சுரபி சுரேந்தர் சூப்பர்மென் வெர்சஸ் பாட்மேன் செந்தூரன் பாலிடெக்னிக் செந்தூரன் பாலியின் தொடர் சாதனை செல்பி செவன்த் சென்ஸ் செவென்த் சென்ஸ் சொன்னாங்க சோ ஸ்வீட் வலைப்பூ ஞானாலயா ஆவணப் படம் டாக்டர் ஸ்ட்ரேஞ் டான் ஆப் ஜஸ்டிஸ் டி.எம்.என்.டி Teenage Mutant Ninja Turtles (2014) டினா அரீனா டெல்லி சம்பவம் ட்ரான்ஸ்பார்மர்ஸ் ஏஜ் ஆப் எக்ஸ்டின்ஷன் தங்கமகன் தஞ்சை தபால்காரர் தமிழ் தமிழ் ஹிந்து தயான் சந்த் தர்மதுரை தலைமைப் பண்பு தலைவாரி பூச்சூடி தாயம்மாள் தாய்மொழி தாரை தப்பட்டை தி இத்தாலியன் ஜாப் தி பிரஸ்டீஜ் தி.ஆலை பள்ளி தியாக வரலாறு திருச்சி புகைப்பட பொருட்கள் கண்காட்சி. நிகழ்வுகள் திரை இசை திரை வி மர்சனம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் தீபிகா படுகோன் தீரன் சின்னமலை துவரங்குறிச்சி தேறி தொடர்பதிவு தொலைகாட்சி 18 தொழில் நுட்பம் தொழில் முனைவு தோழர் ரபீக் பதிவு நகை நடாஷா ரைட் நடிகர் சங்கத் தேர்தல் நத்தார் தின வாழ்த்துக்கள் நந்தன் ஸ்ரீதரன் நமக்கு நாமே திட்டம் நம்பிக்கை மனிதர்கள். நலம் நன்றிகள் நாடகக் கலைஞர்கள் நாயகர்கள் நாளைய மனிதர்களின் நேற்று நான் ஒரு குழந்தை நிகழ்வு நிகழ்வுகள் நிகில் நிறுவனம் நிகில் பயிற்சி நிலைப்பாடுகள் நிழல் பதியம் நீட் பார் ஸ்பீட் நீயா நானா நுட்பம் நூர் டீச்சர் நூல் அறிமுகம் நூல் விமர்சனம் நேர நிர்வாக தளம் நேர நிர்வாகம் நேர மேலாண்மை பக்தி படிக்க வேண்டாத பதிவுகள் பட்லர் பணமதிப்பு நீக்கம் பணிநிறைவு பதிவர் சந்திப்பு 2014 பதிவர் சந்திப்பு 2015 பதிவர் சந்திப்பு 2015 ஆல்பம் பதிவர் திருவிழா 2015 பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் பயிற்சிகள் பயிற்சித்துறை பலூஸ்சிஸ்தான் பள்ளி பாகுபலி பாபநாசம் பாரத் ஸ்டேஜ் 4 பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7 Fast and Furious 7 பாஸ்ட் எய்ட் பிட் டோரறேன்ட் பிரபு சாலோமோன் பிராங்கின் படங்கள் பிரார்த்தனை பிரித்தாளுதல் பிரியங்கா பிரேமா தக்ஷிணாமூர்த்தி பிரேம்சந்த் பு.கோ.சரவணன் புகைப்படத் தொகுப்பு புதியவன் புதுகை குளம் மீட்பு புதுகை செல்வா புதுகை தொல்லியல் ஆய்வுக் கழகம். புதுகையின் கல்வி முகங்கள் புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட பாறை ஓவியங்கள் புள்ளிகள் புறம்போக்கு பெரியார் பெற்றோர் பேப்பர் ஒன்று பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி பைரவா பொது பொற்பனைக்கோட்டை போட்டிகள் ப்ளாகர் டிப்ஸ் மணிகண்டன் ஆறுமுகம் மதுரை மதுரை வரலாறு மரபு வழி நடை மராத்திய மொழிப் படங்கள் மனிதர்கள் மாட் மாக்ஸ் ஃபியூரி ரோட் Mad_Max:_Fury_Road மாணவர் போராட்டம் மாண்பு மிகு மகளிர் - அறிவியல் சுடர்கள் மாண்புமிகு மகளிர் மாதொரு பாகன் மாத்யு ப்ளோரிஸ் மாமழை நினைவுகள் மார்க் அண்டோனி மாறாப்புன்னகை மாற்றத்தின் முகங்கள் மியான்மர் மிருதன் மிஷன் இம்பாசிபிள் 5 Mission Imposible Rogue Nation முகநூல் முகநூல் நிலைத்தகவல்கள் முகநூல் பகிர்வு முத்துக்கிருஷ்ணன் முத்துநிலவன் முனைவர் மு பிரபு முனைவர். அருள்முருகன் மூன்று புத்தகங்கள் வெளியீடும் குடும்ப விழாவும் மெட்ராஸ் மெமரி கார்ட் மேன்மை இதழ் அறிமுகம் மொழி மொழித்திறன் மோசன் காப்ச்சர் யாதும் ஊரே யாழியின் இரண்டு தொகுப்புகள் ரபீக் ரபீக் பகிர்வு ரம்ஜான் ரவீந்திரன் ரஜனி ரஷ் ரஹ்மான் ராஜ கோபால தொண்டைமான் ராஜ சுந்தர்ராஜன் ராஜசுந்தர்ராஜன் ராஜா சுந்தர்ராஜன் ராஜேஷ் வைத்யா ரிச்சர்ட் அட்டன்பரோ ரியோ ஒலிம்பிக் ருத்ரையா ரோக் ஒன் movie review ரோஹித் வேமுலா லாரீனா லூசி லோகன் 2017 வகுப்பறை அனுபவங்கள் வகை ஒன்று வண்ணதாசன் வலைச்சரம் வலைப்பதிவர் மாநாடு வலைப்பூ நுட்பம் வள ஆசிரியர்கள் வாசிப்பு வாசிப்பு அனுபவப்பகிர்வு வாழ்த்துக்கள் வாழ்வியல் திறன்கள் பயிற்சி. வாழ்வியல் திறன்கள் பயிற்சி. தன்னை அறிதல் பயிற்சி வானவில் விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் விடைபெறல் விதைக்கலாம் வித்டிராயல் சிம்ப்டம் விப்லாஷ் விருது விவசாயம் விஜய் டீ.வி விஜூ கனைக்ட் விஷாலின் விஸ்வரூபம் வீணை இசை வீதி கூட்டம் வீதிக் கூட்டம் வீதிக்கூட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் வீரமுரசு சுப்பிரமணிய சிவா வெயிலில் நனைந்த மழை வெர்சடைல் ப்ளாகர் விருது வெள்ளைப் புலி வெற்றி இலக்கியம் வைகறை வைகறையின் ஜெய் நல நிதி ஜல்லிக்கட்டு ஜாக்கி சேகர் ஜாதவ் ஜூராசிக் வோர்ல்ட் ஜெயப் பிரபு ஜெர்மனி ஜே.சி. பயிற்சி ஜேசி இயக்கம் ஜோக்கர் ஷபானா பாஸிஜ் ஷாமிலா தலுவத் ஷாருக்கான் ஷான் கருப்புசாமி ஷாஜகான் ஸ்டான்லி குப்ரிக் ஸ்பாய்லர் ஸ்பிலிட் ஸ்ரீதர் சுப்பிரமணியன் ஹாக்ஸா ரிட்ஜ் ஹாண்ட்ஸ் ஆப் ஸ்டீல் ஹாலிவுட் ஹெர்குலிஸ்