செயற்கை விழித்திரைஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் வேதியியல்  ஆய்வு மாணவியாக இருக்கும் வேனேசா ரெஸ்ட்ரோப ஷெல்ட் ஒரு செயற்கை விழித்திரையை உருவாக்கியிருக்கிறார்.இருபத்தி நான்கு வயதில் வேனேசாவின் சாதனை பிரமிப்பு. இவரது குழு உயிரியல் கூட்டுப் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மென்திசுக்களை  கொண்டு இந்த விழித்திரையை உருவாக்கியிருக்கிறார்கள்.

வெகு எளிதாக இது உடலோடு சேர்ந்துவிடும், எனவே அன்னியப் பொருள் என ஒவ்வாமைகள் ஏற்படாது. ஏனைய செயற்கை விழித்திரை ஆய்வுகள் கடினப்  பொருட்களை பயன்படுத்துவதால் அவை உடலால் ஏற்கப்படும் வாய்ப்புகள் சவால்தான். இந்த பெரும் தடையை வேனசாவின் கண்டுபிடிப்பு தகர்திருக்கிறது.

ஹைட்ரோஜெல் மற்றும் உயிரியல் செல் திசுக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த விழித்திரை அப்படியே புகைப்படக் கருவியின் உணரி (சென்சார்) போலவே  செயல்படுகிறது. ஒளியை உணர்ந்து அவற்றை மூளைக்கு கடத்தும் பணியைச் செவ்வனே செய்வதால் அடுத்தகட்ட ஆய்வுக்கு நகர்கிறது குழு.

விரைவில் உடல் மறுக்காத, பயன்பாட்டுக்குப் பிறகு மட்கும் ஒரு விழித்திரை வணிகத்திற்கு வரலாம்.

சாதனை பெண்ணின் ஆய்வு வெற்றியடையட்டும்

திறக்கட்டும் இருள்படர்ந்த விழிகள்.

சந்திப்போம்

அன்பன்
மது 

Comments

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...