சோ ஸ்வீட் வலைப்பூ 2

கே.கே.தேவதாஸ்
கல்விச்சோலை


kalvisolai@blogspot.com தமிழக ஆசிரியர்கள் அனைவருக்கும் அறிமுகமான தளம் இது. மிகக் குறுகிய காலத்தில் அதீதமான பார்வையாளர்களை ஈர்த்தது இத்தளம். தேவதாஸ் என்ற ஆசிரியரால் நடத்தப்படும் இத்தளம் தமிழக பள்ளிக் கல்வித்துறை குறித்த அனைத்து தகவல்களின் களஞ்சியமாக உள்ளது. கல்வித்துறையின் அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் அளித்துவருவது இதன் தனிச்சிறப்பு.
ஒரு தனி மனிதராக தேவதாஸ் ஆற்றிவரும் தகவல் சேவை வியக்கவைப்பது ஆகும். மாவட்ட அதிகாரிகளும் இத்தளத்தை பார்ப்பது இதன் சேவையை உணர்த்துகிறது. கல்விச்சோலை தனிமனித உழைப்பின் அடையாளம். இணையம் சேவை நோக்குடன் உழைக்கும் தனிமனிதர்களை அடையாளப்படுத்தி ஒரு செங்குத்து இயக்கத்தை தருவதற்க்கான நிகழ்கால சாட்சி கல்விச்சோலை.

Comments