வார்த்தைகளை சேமிப்போம்

ஆங்கிலம் பேச சில எளிய கருவிகள் …

ஆங்கிலம் பேச சில யுக்திகள் நாம் நினைப்பதை விட நமக்கு அதிக ஆங்கில வார்த்தைகளைத் தெரியும் என்பது ஒரு ஆச்சர்யமான செய்தி. இருந்தாலும் நாம் அவற்றில் எத்தனை வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம் என்பது கேள்விக்குறி. நமது நினைவில் வார்த்தைகள் இரண்டு குழுவாக பதியவைக்கப்படுகிறது. அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள், எப்போவதாவது பயன்படுத்தும் வார்த்தைகள் என்கிற இரண்டு குழுக்களை நாம் நன்கு புரிந்துகொண்டோமென்றால் நாம் சுலபமாக ஆங்கிலத்தை பேச முடியும். ரொம்ப சிம்பிள் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள் நம் நினைவில் நிற்கும் எப்போவதாவது பயன்படுத்தும் வார்த்தைகள் மெல்ல மெல்ல மறந்து போகும். எனவே நமது எப்போதாவது பயன்படுத்தும் வார்த்தைகளை நாம் அன்றாடம் பயன்படுத்துகிற வழியை பார்க்கவேண்டும். அது எப்படி அன்றாடம் இரண்டு புதிய வார்த்தைகளையாவது நாம் பயன்படுத்திப் பேச வேண்டும். வார்த்தைகளுக்கும் நமக்குமான தொடர்பு அறுந்துவிடக்கூடது. கொஞ்சம் பொறுமை விடாத பயிற்சி இருந்தால் இது எளிமையான பணிதான். ரொம்ப போட்டு மண்டைய கொடையாம இந்த பணியை எளிமைப்படுத்தும் ஒரு வலைத்தளம் www.wordhippo.com . இந்த தளத்தில் எந்த வார்த்தையை கொடுத்தாலும் அதற்கான சரியான சமன் வார்த்தைகளை தந்து பயனாளரின் வார்த்தைவங்கியை வளப்படுத்துகிறார்கள். ஆங்கிலம் பேச அதும் சரளமா பேச விரும்பும் ஆர்வலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய சைட் இது.

தளத்தின் முகப்பு பகுதி

Comments