கொஞ்சம் புதிய அறிவியல்


ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர் வரலாற்றில் ஒரு மைல் கல்


நாசாவின் திறந்த நிலை நிர்வாகம் மிகச் சிறந்தது என அறியப்படுகிறது. ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக நாசா தனது திட்டங்களுக்கு தேவையான மென்பொருள்களை ஓப்பன் ஸ்டோர்ஸ் முறையில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ள தனிநபரும் இந்த மென்பொருள்களை பார்வையிடலாம். நாசாவின் தொழில்நுட்பத்தை பொதுமக்கள் பயன்படுத்த இது வாய்ப்பாக அமையும்.


ஹாக்கர்கள் நினைத்தால் நீங்கள் இருக்கும் இடத்தை அறிய முடியும்.

மினசோட்டா பல்கலைக்கழக ஆய்வு ஒன்றின் மூலம் செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர் எங்கிருந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்ற விவரத்தை வெளியிடுவதை கண்டுபிடித்திருக்கிறார்கள். செல்போன் நிறுவனங்கள் அவற்றின் சேவையை தொடர்ந்து வழங்க வாடிக்கையாளர் எங்கிருக்கிறார் என்று அறிந்தாக வேண்டும். இதுதான் ஹாக்கர்காளுக்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த ஆய்வின் முடிவுகள் தனிமனிதன் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

Comments