டிப்பிங் பாயிண்ட்

வாசிப்பு அனுபவப்பகிர்வு

மால்கம் கிளடுவெல்


ஆசிரியர் : மால்கம் கிளடுவெல் தி நியுயார்க்கர் என்ற பத்திரிக்கையில் எழுத்தாளராக பணிபுரிந்துவருகிறார். இவர் எழுதிய அனைத்து நூட்களுமே விற்பனையில் சாதனை புரிந்தவை.

வியாபாரத்தை பெருக்க நினைக்கும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்கவேண்டிய நூல். விளம்பரங்கள் சரியாக வடிவமைக்கப் பட்டிருக்கிறதா? நுண் கலாச்சார ஜதீ என்றால் என்ன போன்ற ஆச்சர்யமூட்டும் அறிவை விரிவு செய்யும் தகவல்கள் இந்நூலின் பக்கங்களில் விரவிக்கிடக்கிறது.

குற்றச்செயல்களின் தலைநகராக இருந்த நியுயார்க் எப்படி திடீரென பாதுகாப்பான நகராக மாறியது என்பதை ஆசிரியர் விளக்கும்போது ஏற்படும் வியப்பு விழிப்புணர்வையும் தருகிறது. நம்மை சுற்றி உள்ள உடைந்த ஜன்னல்களை நம்மை கவனிக்க வைக்கும் ஒரு அருமையான நூல்.

குற்றச்செயல்களின் திடீர் நிறுத்தத்திற்கும் சுரங்க ரயில் பாதைகளில் வெள்ளையடித்ததிற்க்கும் உள்ள தொடர்பை ஆசிரியர் விளக்கும்பொது நமக்கு உடைந்த ஜன்னல் தத்துவம் தெளிவாக புரிகிறது. சுருங்க சொன்னால் வெற்றி இலக்கிய வரிசையில் அவசியம் படிக்க வேண்டிய நூல். வெற்றிபெற மட்டுமல்ல அதை தக்கவைத்துக்கொள்ளவும்


நூல் தலைப்பு : டிப்பிங் பாயிண்ட்
ஆசிரியர் : மால்கம கிளடுவெல்
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
விலை :120 /- ரூபாய்கள்.

ஆசிரியரின்  பிற நூல்கள் :
ப்ளின்க்
அவுட் ல்யர்ஸ்
தி பவர் ஆப் திங்கிங் வித் அவுட் திங்கிங்

vikatan link

Comments