ஒரு ஆய்வு சில அதிர்வுகள்

மைல்டா ஒரு ஷாக் வைல்டா ஒரு தாட்

நம்புங்கள் வெற்றி உமதே

சாலிக்மான் என்கிற உளவியல் அறிஞர் தனது ஆய்விற்காக சில நாய்க்குட்டிகளை பயன்படுத்திவந்தார்.   ஆனால் அவருக்கு தெரியாது அந்த ஆய்வு மனித குலத்திற்கு ஒரு அற்புதமான உண்மையை சொல்லப்போவது.

ஆய்வினை இரண்டு கட்டமாக பிரித்த அவர் முதல் கட்டடம் கண்டிஷனிங்க், இதில் நாய்கள் அனைத்திற்கும் ஒரு ஒலி அறிமுகம் செய்யப்பட்டது இதனை தொடர்ந்து ஒரு சிறிய மின்னதிர்ச்சி தரப்பட்டது. பீப் என்று ஒரு சத்தம் ஒரு மைல்ட் ஷாக்.

இரண்டாவது கட்டதில்  இரண்டு அறைகளை கொண்ட ஒரு பெட்டியில் நாய்கள் விடப்பட்டன. பீப் ஒலி கேட்டவுடன் நாய்கள் தவ்வி அடுத்த அறைக்கு போனால் அவற்றுக்கு மின்னதிர்ச்சி  கொடுக்கப்படக்கூடாது என்ற வகையில் சோதனை வடிவைமைப்பு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இரண்டாவது கட்டச் சோதனையில் மின்னதிர்ச்சி நாய்களுக்கல்ல ஆய்வாளர்களுக்கு! ஆமா இருக்காதா பின்னே. பீப் ஒலி கேட்டவுடன் நாய்கள் மெல்ல முனகிக்கொண்டு படுத்துவிட்டன!

அவை என்ன பன்னுவ சத்தம் அப்புறம் ஷாக் என்று நினைத்திருக்க வேண்டும்! எப்போது பீப் ஒலி கேட்டாலும் முனகிக்கொண்டு படுத்துவிட்டன! பெட்டியின் அடுத்த அறைக்கு தாவவே இல்லை.

ஆனால் 20 சதவீத நாய்கள் மட்டும் விதிவிலக்காக இருந்தன. பீப் என்றவுடனே தவ்வி அடுத்த அறைக்குள் விழுந்தன.


சாலிக்மான் இந்த ஆய்வு எப்படி அப்படியே மனிதர்களுக்கு பொருந்துகிறது என்பதை விளக்குகிறார். பலர் நான் தொட்டால் எதுவும் விளங்காது என்று புலம்பியபடி திரிவதை பார்த்திருக்கிறோம். இவர்களை தோல்விக்கு பழகியவர்கள் என்கிறார்.இத்தகு மனப்பான்மையை அவர் கற்றுக்கொண்ட தோல்வி மனப்பான்மை என்கிறார். (லெர்ண்டு ஹெல்ப்லஸ்நெஸ்) மாறாக ஒவ்வொரு முறை பீப் ஒலி கேட்ட பின்பும் தவ்வும் நாய்கள் வெற்றிகரமான மனப்பான்மை கொண்டவை என்கிறார்.

என்பது சதம் மக்கள் சாதாரண வாழ்க்கை வாழவும் மீதம் இருவதுபேர் தனது கனவுகளை  அடையவும் காரணம் அவர்களின் சொந்த மனப்பான்மையே! 

உலகில் அநேகர் தோற்கவும்  சிலர் மட்டுமே ஜெயிக்கவும் காரணம் ஒரு துன்பம் வரும்போது துவண்டுபோகாமல் எதிர்த்து செயல்படுவதே.  

அடுத்த முறை ஒரு துன்பம் வரும்போது அதை துவட்டி எடுக்க தயாராகுங்கள்.
உங்கள் இலக்குகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்க வேண்டாம். வெற்றி உமதே!


அன்பன்
மது  


Comments