மாணவர் போராட்டம் தேவையற்றதா?சிலர் தும்பை விட்டு வாலை பிடிக்கிறரமாதிரி இருக்கு இப்போ போய் எதுக்கு போராட்டம் என்று கேட்கிறார்கள். தும்பு பிடிக்க எங்கள் கைகள் கட்டப்பட்டு இருந்ததே காரணம் என்பது அவர்களுக்கும் தெரியும்.

மாணவர் போராட்டம் தமிழன் இன்னும் சொரணையோடு இருக்கிறான் என்பதற்கான ஒரு குறியீடு. இதயத்தால் உணர்வால் வாழும் ஒரு தலைமுறை இன்னும் தமிழ் நாட்டில் மிச்சமிருக்கிறது என்பதற்கான அடையாளம் இது. எனவேதான் நான் இதை ஆதரிக்கிறேன்.

சட்டத்தால் ஆளப்படும் ஒரு ஜனநாயக நாட்டில் அஹிம்சை வழியில் மிக நாகரீகமாக தங்கள் எதிர்ப்பினை வலியை வேதனையை பதிவிடும் எனது மாணவ சமூகம் எனது வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது. ஈழப் பிரச்சனையில் மாணவர்கள் முதல் முறையாக உலகத் தமிழர்களின் (உணர்வாளர்களின்) மத்தியில் மரியாதைக்குரியவர்களாக மாறியிருகின்றனர்.

அஹிம்சை முறையில் போராட்டம் வலுவுடன் முன்னெடுத்து செல்லப்படவேண்டும்.

முகநூல் போராளிகள் உலகின் அத்துணை நாடுகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் நியாயம் கேட்டு கடிதங்களை எழுத ஆரம்பிக்கவேண்டும்.

தமிழக இளைஞன் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறான் உணர்வோடு இருக்கிறான் என்பது என்போன்றவர்களுக்கு    வரும் காலம்  நல்ல காலம் என்பதற்கான அடையாளமாக படுகிறது.

போராட்டம் வெல்லட்டும்.

வெற்றி நமதே
மது 

Comments

 1. Anonymous21/5/14

  வணக்கம்

  அனைத்துலகத் தாய்மொழி நாள் பெப்ரவரி-21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காளமொழியைஅரசகரும மொழியாக ஆக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூரப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
  மாணவர் போராட்டத்தின் விளைவால்தான் இந்த நாள் மலந்தது என்று சொல்ல முடியும் ஒரு நாட்டின் சரித்திரத்தைமாற்றி எழுதும் சக்தி மாணவர்களுக்கு உண்டு எனவே மாணவர் போராட்டம் வேண்டும் வேண்டும் என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன்.


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

Post a Comment

வருக வருக