தமிழ்ப்பாடம் கற்பித்தலுக்கான வகுப்பறை உத்திகள்

How to teach Tamil? Part I

Tamil Teaching tips, kasthuri rengan, malartharu, pudukkottai, www.malartharu.com how to teach
    பாடப் பொருள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் கற்கும் மாணவர் தரம் எவ்வளவு குறைவாக இருந்தாலும் கற்பிக்கும் ஆசிரியர்களின் சிறப்பான உத்திகளால் கற்றலைச் சுவையாகவும் எளிமையாகவும் ஆக்கிவிட முடியும் என்பது பட்டறிந்த உண்மை. ஆசிரியப் பெருமக்கள் ஒவ்வொருவரும் தனித்திறன் பலவாய்க்க பெற்றவரேயாவர். அத்திறன்களை ஒருமுகப்படுத்தி வகுப்பறைச் சூழலுக்கு ஏற்பக்கற்பிக்கப் புகுவாராயின் கற்பித்தல் – கற்றல் சிறப்படையும்; கல்விப்பயன் முழுமையுறும்.
கற்பித்தல் உத்திகள்
1. பாடப்பொருளுக்கு ஏற்றவாறு ஆர்வப்படுத்துதல்
2. பகுதியிலிருந்து முழுமைக்கு செல்லல்
3. முழுமையிலிருந்து பகுதிக்கு செல்லல்
4. துணைக்கருவிகளை  பயன்படுத்துதல்   
5. இசையுடன் பாடுதல்
6. நடித்துக் காட்டுதல்
7. குரல் ஏற்றத் தாழ்வுடன் படித்தல்
8. மாணாக்கரை பங்கெடுக்கச் செய்தல்
9. நினைவூட்டுதல்
10. ஒப்புமைப்படுத்திக் கற்பித்தல்
11. தொடர்புடைய செய்திகள், நிகழ்வுகள், வரலாறுகள் ஆகியவற்றைக் கூறுதல்
12. எளிய படங்கள் வரைதல்
13. மாணவர்-புலன்களுக்குப் பயிற்சி அளித்தல்
14. விளையாட்டு முறையில் கற்கத் தூண்டுதல்
15. நாட்டுநடப்பு செய்திகளை அறிந்து கூறுதல்
16. பள்ளிச் சூழலில் அமைந்துள்ள பொருள்களை பயன்படுத்தல்
17. அறிந்ததிலிருந்து அறியாதற்குச் செல்லுதல்
18. எளிமையிலிருந்து அருமைக்குச் செல்லுதல்
19. தெளிவிலிருந்து சிக்கலுக்குச் செல்லுதல்
20. தொடர்புடைய நூல்களைப் படிக்கச் செய்தல்    
21. எழுத்துக்கள் பிறப்பு முறையை செய்து காட்டல்
22. நுட்பமான ஒலிகள், மயங்கொலி சொற்கள் ஆகியவற்றை ஒலித்துக் காட்டுதல் 
 இவை மட்டும் முடிவாகாது. இவை போல பல உத்திகளை பெருக்கி கற்றலைச் செழிக்கச் செய்வது ஆசிரியரின் கடமை.

செய்யுள் கற்பித்தல்
v  செய்யுளுக்கு உரிய ஓசையை அறியச் செய்தல்
v  ஓசையுடன் செய்யுளைப் படிக்கச் செய்தல்
v  செய்யுளுக்குரிய சொற்களைப் பிரித்துப் படிக்கச் செய்தல்
v  செய்யுளை அன்வயப்படுத்த(கொண்டு கூட்ட) அறிந்து கொள்ளச் செய்தல்
v  செய்யுளிலுள்ள பொருட்செறிவான சொற்களை அறியச் செய்தல்
v  சொல்லாட்சித் திறனை அறியச் செய்தல்
v  அருஞ்சொற்களின் பொருள் அறிதல்
v  எதுகை, மோனைகளை அறியச் செய்தல்
v  செய்யுளில் அமைந்த அணியை அறியச் செய்தல்    
v  செய்யுளின் பாவகையை அறியச் செய்தல்
v  பொருள் உணர்ச்சிக்கேற்ற குரல் ஏற்றத் தாழ்வுடன் படித்தலை அறியச் செய்தல்
v  சரியாக ஒலிக்க இயலாத சொற்களுக்குப் பயிற்சி அளித்தல்
v  செய்யுளின்-சொற்கள்-தொடர்களுக்குப் பயிற்சி அளித்தல்
v  அணி,ஓசை மற்றும் கருத்தால் ஒத்த பிற பாடல்களை அறியச் செய்தல்
 



தொடரும்
நன்றி
பள்ளி நடைமுறை வழிகாட்டி நூல்
வெளியீடு தமிழ் நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம்
சென்னை – ஆறு
 

Comments

  1. இதெல்லாம் சும்மா திருக்குறளில் எத்தனை குறில் எழுத்து, கமா வை எத்தனை முறை பயன்படுத்தியிருக்கிறார் வள்ளுவர் என்பது மாதிரியான ஆய்வுதான். ”மேலிடங்களில்” இருக்கும் சில மேதாவிகளின் கண்டுபிடிப்பு அல்லது, மாநில ஆசிரியர் முகாம்களில் “தமிழ்ப்பாடம் கற்பித்தலுக்கான வகுப்பறை உத்திகள்”பற்றி ஒவ்வொருவராகச் சொல்லச் சொல்லி, தொகுத்ததாக இருக்கும்.
    ஒரே வரியில் ரெண்டு சொற்களில் சொல்ல வேண்டுமானால்... “ஆசிரியரின் ஈடுபாடு” அது இருந்தால் எல்லாம் தானாக நடக்கும்... இதை எடுத்து வெளியிட்ட உங்கள் ஈடுபாட்டுக்கு நன்றி.
    -- நா.மு.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு சும்மாதான் கொஞ்சம் புதியதாக வருபர்வகளுக்கு பயன்படாலம் என்கிற நோக்கில் வெளியிட்டேன் ...

      Delete

Post a Comment

வருக வருக