தீர்மானம் செய்யும் பழக்கம் ஜோரான முக நூல் பகிர்வு


நீங்கள் உடைத்தெறிய விரும்பும் பழக்கங்களின் மீது கவனம் செலுத்தாமல், நீங்கள் உங்களிடம் உருவாக்கிக் கொள்ள விரும்பும் நடத்தைகளை ஒரு பட்டியலிடுங்கள். அதற்கான ஒரு எடுத்துக்காட்டு இது.

விரைவாகத் தீர்மானிக்கும் பழக்கத்தை அடைய வேண்டுமே என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய சில நபர்களை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள் என்று நீங்கள் நினைத்திருக்கக்கூடும். ஆனால் அது உண்மையல்ல.

ஒரு செயல்திட்டம் அவர்களிடம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் இரண்டு அல்லது மூன்று டஜன் வாய்ப்புகள் இருக்கிறது. அதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதைத் தீர்மானிப்பதில் அவர்கள் தயக்கம் காட்டுகின்றனரா? காட்டுவதில்லை. அவர்கள் அவற்றை உடனடியாகச் சீர்தூக்கிப் பார்த்து, விரைவாக முடிவெடுக்கின்றான். பின் காலத்தை வீணாக்காமல் அடுத்த விஷயத்திற்கு செல்கிறார்கள். இவ்வாறுதான் அவர்கள் நாள் முழுவதும் செயல்படுகிறார்கள்.

உடனடியாக தீர்மானிக்கும் மக்கள் பிறக்கும்போதே அவ்வாறு பிறக்கிறார்களா? ஒரு சிலர் அப்படிப் பிறந்திருக்கலாம். ஆனால் உடனடியாகவும், சரியாகவும் தீர்மானிக்கும் திறன் என்பது ஒரு பழக்கம் தான்.
இப்பழக்கத்தை உருவாக்குவது மிகவும் எளிது. அது ஒரு எளிய சூத்திரத்தைப் பின்பற்றுவதைச் சார்ந்துள்ளது. ஒரு விஷயத்தைக் குறித்து தீர்மானிக்க வேண்டுமென்றால், நீங்கள் ஒரு சில கேள்விகளை எழுதிக்கொள்ள வேண்டும்.

-அது என் வேலையை எளிதாக்குமா?

என் பாதுகாப்பையும், வெற்றியையும் அதிகரிக்குமா?
வேறு என்னவெல்லாம் செய்யும்?

பிறகு இக்கேள்விகளை உங்கள் முன் வைத்துக் கொண்டு நீங்கள் தீர்மானிக்கவிருக்கும் விஷயம் நேர்மறையான அல்லது எதிர்மறையான பதில்களைக் கொடுக்குமா? என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

ஒரு சில கேள்விகளின் அடிப்படையில் அமைந்த எளிய ஆய்வை மேற்கொள்ளும் பழக்கம், வெற்றிகரமாகத் திகழ்வதற்குத் தேவையான மிக விலையுயர்ந்த ஒரு திறமையை உங்களிடம் உருவாக்கும். செயலாக்கத் தீர்மானங்களை மேற்கொள்ளும் திறமைதான் அது.

காலப்போக்கில் உங்களுக்கு அக்கேள்விகளை எழுத்துப்பூர்வமாக வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. அவற்றை உங்கள் மனதிலேயே எழுப்பு, அவற்றிற்கு விடையும் அளிப்பீர்கள். எழுத வேண்டிய தேவை மறைந்துவிடும். ஆனால் துவக்கத்தில், அப்பழக்கம் உங்களிடம் நிரந்தரமாக நிலைகொள்ளும்வரை முதலில் எழுதிவிட்டு பின்னர் விடையளியுங்கள்.

சொந்த வளர்ச்சி, வேலை அல்லது தொழில், சமூகம் என்று உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் வலுக்கட்டாயமாக நேர்மறையான பழக்கங்களை உருவாக்குவது, வெற்றிக்கான அடித்தளங்களை அமைப்பதற்கான பல்லாயிரக்கணக்கான வழிகளில் ஒன்றுதான்...

Comments