தாரா பாரதி..

பல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது

வெறும் கை என்பது மூடத்தனம் 
விரல்கள் பத்தும் மூலதனம்  

யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது. 


கடந்த சில நாட்களாக மிக எளிமையாக  காணொளி உருவாக்கதிற்கு உதவும் ஒரு மென்பொருளில் உலவியபோழுது அப்பாவின் சைக்கிள் என்ற ஓர் கவிதை மனதை எதோ செய்ய அப்படியே எடுத்து ஓர் கவிதை காணொளியாக மாற்றி யூ டியூப்பில் போட்டேன். 

இந்த வரிசையில் மறுநாள்  இன்னும் பிறக்காத குழந்தைக்கு பெயர் வைத்துக் காத்திருப்பவரா நீங்கள்? என்று நந்தன் ஸ்ரீதரன் என் மனதை ரொம்பவே ஆட்டி வைத்தார். குழந்தைக்கு காத்திருக்கும் அத்துணை சகோதரிகளின் ஒட்டு மொத்த வலியையும் ஒரு கவிதையில் வடித்து....  சும்மா படிங்க நீங்க 
நான் அதையும் யூடியூப்பில் சேர்த்தேன்.

அப்பறோம் தாரா பாரதியின் திண்ணையை இடித்துதெருவாக்கு கிடைக்க விடுவேனா அதை.. ஆனால் கவிஞரின் படம் கிடைக்கவில்லை. இதை நான் முகநூலில் நிலைத் தகவலாக பதிவிட  

அந்த நிலைத் தகவல் 
//கடந்த அரைமணி நேரமாக கவிஞர் தாரா பாரதியின் படத்தை கூகிளில் தேடித் தோற்றேன்..

அதிகம் அறியப்படாத ஒரு ஆங்கில கவிஞர் பெயரினை தந்தாலும் அடுத்த நிமிடம் தரவுகளை இறைக்கும் கூகிள் ஆண்டவர் தாரா பாரதிக்கு அருள் பாலிக்க வில்லை தவறு தாரவினுடையது அல்ல...

யப்பா தமிழ் இயக்கங்களே தொழில் நுட்பத்தை கூட்டு சேர்த்தால்தான் அடுத்த தலைமுறைக்கு எளிதாக போய்ச்சேர முடியும் கொஞ்சம் முழிச்சு பாருங்க ராசா..

#தமிழ்_உணர்வாளர்கள்_கவனத்திற்கு /// 



நாணல் கலை இலக்கிய பெருமன்றம் இன்று எனக்குஅந்தப் படத்தை அனுப்பி வைக்க அதை கூகிள் ஆண்டவருக்கு புரிகிற மொழியில் பதிவிடவே இந்த பதிவு. 

tharaa baarathi tamil poet kavingar கவிஞர் தாரா பாரதி, தமிழ்,கவிஞர்,
கவிஞர் தாரா பாரதி

tharaa baarathi tamil poet kavingar, தமிழ்க் கவிஞர், தாரா பாரதி, தமிழ்,கவிதை, கவிஞர்
கவிஞர் தாரா பாரதி


உங்கள் கருத்துக்கள் அவசியம்,  

நன்றி நண்பர்களே,
சந்திப்போம்,

இன்னும் சில கவிதைகளின் காணொளி



Comments

  1. சிறப்பித்தமைக்கு நன்றி...

    தேடலுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அன்பு சகோததரருக்கு வணக்கம்.
    மென்பொருள் அறிமுகத்திற்கும், சிறப்பான முயற்சிக்கும், புதிய தேடலுக்கும் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளை பத்திரப் படுத்தியிருக்கிறேன் .... நன்றி சகோ..

      Delete
  3. http://creative.sulekha.com/poet-thaaraa-baarathy_284657_blog
    The above link is for my another blog on Thaaraa Barathi
    ---Maraimalai Ilakkuvanar

    ReplyDelete
  4. நல்லதொரு தொகுப்பு

    ReplyDelete

Post a Comment

வருக வருக