கணினித் தமிழ் சங்கம் புதுக்கோட்டை

இந்த நாள் இனிய நாள் ...
திரு நா. அருள் முருகன், முதன்மைக் கல்வி அலுவலர், புதுகை விழாவில்

வலைப்பூக்களின் வீச்சும் சக்தியும் இன்னும் புதுகை இலக்கிய ஆளுமைகளால் சரிவர புரிந்துகொள்ளப்படவில்லை, சரிவர பயன்படுத்தப் படவில்லை என்ற ஆதங்கம் எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு.இது குறித்து அய்யா திரு முத்து நிலவன் அவர்களிடம் பல முறை பேசி திட்டமிட்டு பின் மறந்துவிட்டு வேறு வேலைகளில் மூழ்கிவிடுவது என்பது  பழக்கமாகி போனது.

இன்னோர் பக்கம் இனைய உலகில் கொடிகட்டி பறக்கும் பிரபலங்களின் வெற்றி  வேறு எனக்கு இந்த நிறைவேறா திட்டம் குறித்து ஒரு ஆதங்கத்தை உருவாக்கியிருந்தது. 

இரு தினங்களுக்குமுன்  திடீர் என முத்துநிலவன் அய்யா அழைத்தார் பயிலரங்கம் ஏற்பாடாகிவிட்டது நீங்களும் தங்கையும் அவசியம் வரவேண்டும் என்றவுடன் எனக்கு ஒரு இனிய ஆச்சர்யம். ஓடாத தேர் ஒன்று திடும் என்று நகர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.

விசயம் கேள்விப்பட்டவுடன் உதவி தொடக்க கல்வி அலுவலர், நர்சரி திருமதி. ஜெயலெட்சுமி அம்மாவும் வருகிறேன் என்று ஆர்வமாக வந்தார். பின்னர் அழைப்பிதழை கண்டபோது தான் தெரிந்தது இது புதுகை மாவட்ட தமிழாசிரியர் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு பெருமதிப்பிற்குரிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் வடிவமைக்கப் பட்டு வெங்கடேஸ்வரா பல்தொழில்நுட்ப கல்லூரியின் ஆதரவை பெற்றிருப்பது.

இதன் வீச்சு வரலாற்றில் பதிவாகும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. பல்வேறு காரணிகளால் இது ஒரு ஆரோக்கியமான முன்னுதாரணமாக மாறியிருக்கிறது.
திரு நா. அருள் முருகன், முதன்மைக் கல்வி அலுவலர், புதுகை விழாவில்


நான் பார்க்கும் அசத்தல்காரணிகள்.

1. மனிதநேயம்மிக்க பண்பாளர் ஒருவர் முதன்மைக் கல்வி அலுவலராக இருந்தால் எப்படி ஒரு ஆரோக்கியமான சமூக பொறுப்புள்ள செயல்களைதூண்ட முடியும் என்பதற்கு ஒரு முன்மாதிரி. தமிழ் படைப்புகள் இணையத்தில் வெளிவருவதை ஊக்குவிப்பதைவிட என்ன பெரிய தமிழ் சேவை இருந்துவிடப்போகிறது?

2. மிக நீண்டகாலம் ஒரு சமூக பொறுப்புள்ள நல்ல ஆசிரியராக இருப்பவர் எப்படி தனது சக ஆசிரியர்களை தூண்டி நெறிப்படுத்தி வளர்க்க முடியும் என்பதற்கு திரு முத்து நிலவன் அய்யா அவர்களின் இந்த முயற்சி ஒரு மாபெரும் சாதனை உதாரணம்.

3. சந்தா வாங்குதல் சங்கம் நடத்துதல் வாயிற்கூட்டம் போடுதல் என்பதை தாண்டி அடுத்த நூற்றாண்டு பயிற்சிகளை தமிழாசிரியர்களுக்கு தருவதில் எமது மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் தூள் பரத்தியிருகிரார்கள். வெறும் வார்தைகள் மட்டும் போதாது இந்த சாதனையின் வீர்யத்தை பதிவிட. சங்க பொறுப்பளர்கள் கவிஞர் திரு மகா சுந்தர், தனித்தமிழ் வித்தகர் குருநாத சுந்தரம், தங்கமெடல் துரைக்குமரன் என ஒரு பெரிய பட்டாளமே சுழன்று சுழன்று வேலை பார்த்தது. நிறை குடம் கு.மா. திருப்பதி மதியம் வந்திருந்து சிறப்பித்தார்.

பயிலரங்கின் முதல் நிகழ்வாக தனக்கே உரிய பாணியில் மிக எளிமையாக பவர் பாயின்ட் மூலம் பேரா.பழனியப்பன் மின்அஞ்சல் முகவரியை துவக்குவது குறித்து பயிற்சியளித்து நாற்பது பங்கேற்பாளர்களையும் புதிய மின் அஞ்சல்களையும், வலைப்பூக்களையும் துவக்க  வைத்தார். பின்னர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் புதுகை கல்வி மாவட்டத்தின் கல்வித்துறை வலைத்தளம் பற்றி விளக்கினார்.

நான் சிறிது நேரம் ஒரு ஜிமெயில் முகவரி மூலம் நமக்கு கூகுள் தரும் சேவைகளை பகிர்ந்தேன். எனக்கு பிடித்த பதிவர்களையும் அறிமுகம் செய்தேன்(வண்ணதாசன், ஜாக்கிசேகர், திண்டுக்கல் தனபாலன் ராசி பன்னீர்செல்வன், பாண்டியன், ஸ்டாலின் சரவணன்)

மதியம் திண்டுக்கல் தனபாலன் சும்மா அசத்திவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தனது மனைவியின் உடல் நலக் குறைவையும் பொருட்படுத்தாது இந்நிகழ்வில் கலந்துகொண்டு மிக நுட்பமான விசயங்களை பகிர்ந்து கொண்டார். விழாவின் மற்றொரு ஸ்டார் இவர்தான். விடாப் பிடியாக தமிழ் திரட்டிகளை அறிமுகம் செய்துவிட்டுதான் விடைபெற்றார்.

முதன்மை கல்வி அலுவலர் மிக சிறப்பாக ஒரு ஊக்க உரையை தந்தார்.

நாள் நிகழ்வின் பின் சந்திப்போம் தோழர்களே.

அன்பன்
மது.

Comments

 1. very good feedback

  ReplyDelete
 2. அருமை சகோதரே! அதற்குள்ளே பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். ///இதன் வீச்சு வரலாற்றில் பதிவாகும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. பல்வேறு காரணிகளால் இது ஒரு ஆரோக்கியமான முன்னுதாரணமாக மாறியிருக்கிறது./// முற்றிலும் உண்மையான வார்த்தைகள்.. இப்பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்த கவிஞர் முத்துநிலவன் அய்யா உள்ளிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறேன். எனக்கு பிடித்தப் பதிவர்கள் என்று என்னையும் அறிமுகம் செய்த தங்களுக்கு அன்பான நன்றிகள். தங்களது நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.

  ReplyDelete
 3. appreciatable posting about the blogger workshop

  ReplyDelete
 4. அனைவருக்கும் கற்றுக் கொடுப்பதன் மூலம் நானும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் ஐயா... மீண்டும் பல சந்தர்ப்பங்கள் வாய்க்க வேண்டும்... நன்றிகள் ஐயா... இன்றும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. தமிழார்வலர்கள் பலருள்ளும் பதுங்கிக் கிடந்த ஊற்றுப் பீரிட்டு எழுந்தது கண்டு மகிழ்ச்சி. ஒருங்கிணைத்த கவிஞர் நா.முத்துநிலவன், கு.ம.திருப்பதி, துரைக்குமரன், மகா.சுந்தர், மற்றும் தங்களைப் போன்ற துடிப்புள்ள தமிழ்நெஞ்சங்களுக்கும், அடிநாதமாய் விளங்கும் நமது முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கும் புதுக்கோட்டை கணினித் தமிழ் சங்கம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி அய்யா..

   Delete

Post a Comment

வருக வருக