ராஜேஷ் வைத்யாவும் கோயலா ஹெலிகாப்டரும்

முகநூலில் நண்பர் சந்திரமோகன் வெற்றிவேல் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார். ஒரு இசைக் காணொளி பார்த்தவுடன் நெகிழ்ந்து அழவைத்த ஒரு காணொளி அது. 


எப்படிப்பட்ட அனுபவம் என்றால் (யாருப்பா அங்கே அந்த கொசுவர்த்திய கொஞ்சம் சுத்துப்பா)

கோய்லா(நிலக்கரி)என்கிற ஷாருக்கின் படத்தை நண்பர் கார்த்திக்குடன் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு சண்டைக் காட்சியில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஹெலி மெல்ல உயர்ந்து ஒரு நாற்பத்தைந்து பாகையில் சென்று பின்னர் அதே பாகையில் அப்படியே பின்னாலேயே (ரிவர்சில்)திருப்பி வரும். 

கார்த்திக் அதிர்ச்சியும் ஆச்சர்யமாக கேட்டான் ஒரு ஹெலி இப்படியெல்லாம் பறக்குமா?  

இந்தியத் திரையுலகில் ஒரு ஹெலியை அதன் பறத்தல் சாத்தியங்களை மிக நன்றாக பயன்படுத்திக் கொண்ட படம் அது.  

டிஸ்கவரியிலும், பி.பி.சியிலும் பல நிகழ்சிகளில் இதைபோன்ற ஹெலி நகர்வுகளை முன்பே பார்த்திருந்ததால் எனக்கு ஒன்றும் பெரிய ஆச்சர்யமாக தெரியவில்லை. சொல்லப் போனால் படத்தில் வரும் அந்த நகர்வைப் போலவே ஒரு மாடோட்டி செய்து தனது மாடுகளை ஹெலியில் இருந்து வழி நடத்துவதையும் நான் நினைவுகூர்ந்தேன். 

ஆமாப்பா மாடு மேய்க்க பல நாடுகளில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப் படுகிறது. நம்ம ஊரைப் போல அரசியல் புறம்போக்குகள் அந்த நாடுகளில் இருக்க மாட்டார்கள் . விவசாயத்தை விட்டு வெளியில் போங்க என்று சொல்லி அவர்களை விரட்ட.  (விவசாய மான்யம் அதிகம் தரும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று!)

சரி இப்போ இந்தப் பதிவை எழுதத் தூண்டிய ஒரு காணொளி.

வீணை குறித்து ஒரு வியப்பு எப்போதும் உண்டு.

ராஜேஷ் வைத்தியா என்கிற ஒரு வீணை இசைக் கலைஞர். இவரது கரங்களில் வீணை பாடுகிறது!

வீணையைப் பார்த்திருந்தாலும் அதன் நாண்களின் இசையைக் கேட்டிருந்தாலும் இது ஒரு பரவச அனுபவமாக இருந்தது எனக்கு. உங்களில் நிறையப் பேருக்கு வீணை இப்படி பேசவும் பாடவும் கூடும் என்கிற விசயம் தெரிந்திருக்கலாம்.

ஆனால் எனக்கு இது முதல் அனுபவம்.

வாழ்க ராஜேஷ் வைத்யா.

நன்றி சந்திரமோகன் வெற்றிவேல்


Comments

 1. ஆமாப்பா மாடு மேய்க்க பல நாடுகளில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப் படுகிறது. நம்ம ஊரைப் போல அரசியல் புறம்போக்குகள் அந்த நாடுகளில் இருக்க மாட்டார்கள் . விவசாயத்தை விட்டு வெளியில் போங்க என்று சொல்லி அவர்களை விரட்ட. (விவசாய மான்யம் அதிகம் தரும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று!)//

  ஐயோ போட்டு உடைச்சிருக்கீங்க.....இதுல கனடாவையும் சேர்த்துக்கலாம் அதாவது விவசாயத்திற்கு அதிவ முக்கியத்துவம் தரும் நாடு....மான்யம் வழங்கும் நாடு....

  ராஜேஷ் வைத்தியா மிக மிக அருமையான வீணை வித்வான்.....வீணை ப்ராடிஜி, ஜாம்பவான் சிட்டி பாபுவின் சீடர்...

  ReplyDelete
  Replies
  1. வருக தோழர் ...
   கருத்துக்கு நன்றி

   Delete
 2. Replies
  1. வருக மலை நன்றி...

   Delete
 3. தென்றல் வந்து என்னையும் தீண்டியது.....
  வாழ்க ராஜேஷ் வைத்யா.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்

   Delete

Post a Comment

வருக வருக