எனது ஜேசிஐ அனுபவங்களும் ஒரு நட்சத்திரத் தலைவரும்


செயல் புயல் ஜேசி. ஜே.எப்.எம் ஏ.வி.எம். எஸ் கார்த்திக் தலைவர் ஜேசிஐ பதுக்கோட்டை சென்ட்ரல் 2014
அன்பிற்குரிய அண்ணன் கவிஞர் மகாசுந்தர் என்ன இழுத்து விடாவிட்டால் நான் இயக்கத்திற்குள் வந்திருக்க மாட்டேன். கடந்த இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டில் இருந்து நான் ஜேசி இயக்கத்தில் இருக்கிறேன். இது ஒரு இளைஞர் பயிற்சி இயக்கம். சமூக சேவை இயக்கம் அல்ல. ஆனாலும் சமூக சேவையில் இருக்கும் இயக்கம்.

குழப்பமாக இருக்கிறதா?

இது பதினெட்டில் இருந்து நாற்பது வயது வரை உள்ள இளைஞர்களுக்கான இயக்கம். பதினெட்டு வயதில் ஒரு இளைஞர் சமூக சேவையில் ஈடுபடும் அளவு பொருளாதார பலத்துடன் இருப்பாரா என்ன?

எனவே இது தனது உறுப்பினர்களுக்கு பல்வேறு பயிற்சிகளைத் தந்து அவர்களின் ஆளுமை மேம்பாட்டை உறுதி செய்கிறது. ஜே.சி ஐ மண்டலம் பதினெட்டில் மட்டும் மூவாயிரம் இளைஞர்கள் இருக்கிறார்கள். மூவாயிரம் இளைஞர்கள் மேம்படுகிறார்கள் என்றால் இது சமூக சேவை இல்லாமல் வேறு என்ன?

பயிற்சிகள் சுயஆய்வில் தொடங்கி தலைமைப் பண்புவரை நீளும். சொல்லப் போனால் ஜேசி இயக்கத்தில் சேரும் வரை எனக்கு பயிற்சித் துறை ஒன்று இருப்பதே தெரியாது!

நிகில் நாகலிங்கம் அப்பா, குரு வெங்கடாச்சலம், குரு. ஆர்.ஆர். கணேசன், வைகை விஸ்வநாதன், கவிஞர் தீன தயாளன்,  பயிற்சியாளர் ஸ்ரீராம், யோசி முருகபாரதி, பயிற்சியாளர் முருகராஜ் என அற்புதமான ஆளுமைகளை எனக்கு அறிமுகம் செய்தது இந்த இயக்கம்தான்.

பயிற்சித் துறை, நிர்வாகத் துறை என இரண்டு பிரிவுகளிலும் செயல்பட திறனும் ஆர்வமும் உள்ளவர்கள் ஜொலிக்கலாம்.

எல்லைப்பட்டி அரசுப்பள்ளியில் மட்டுமே பணியாற்றிக் கொண்டிருந்த என்னை கீழக்கரை கல்லூரியில் இருந்து மன்னார்குடி கல்லூரிகள் வரை நிற்க வைத்தது இந்த இளைஞர் இயக்கம்தான்.

கல்லூரிக் காலத்துடன் புதிய நட்புக்களுக்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிற வாழ்கையில் சிவகாசியில் இருந்து என்ன மச்சான் எப்படி இருக்க என்று கூப்பிடுகிற சரவணப் பெருமாளும், வாத்தியார் எப்படி இருக்க என்று கேட்கிற அறந்தை டாக்டர் ராமன் பரத்வாஜும் எனக்கு இயக்கம் தந்த இனிய நட்புகள் . ஸ்ரீஹரா, ராமநாதபுரம் சபா, சிவகாசி மதன் என மனதிற்கு நெருக்கமாய் உண்மையாய் இருக்கும் நட்புக்களை தந்த இயக்கம் ஜேசி.

எனது கிளை இயக்கம் ஜே.சி. ஐ புதுக்கோட்டை சென்ட்ரல். தலைவர். ஆக்ஸ்போர்ட் சுரேஷில் இருந்து ரியாலுதீன் வரை பார்த்திருக்கிறேன். அப்போதிலிருந்து  ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவே தொடர்கிறேன். நடுவில் வலிய வந்த தலைமைப் பதவியை ஏற்கும் அளவிற்கு உடல்நிலை இல்லை.

எமது கிளைஇயக்க தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் தனது முத்திரையைப் பதித்தவர்கள்.  குறிப்பாக வெள்ளிவிழா ஆண்டுத் தலைவர் ஜே.சி ரியாலுதீன் நீண்ட நெடுங்காலமாக எமது கிளை இயக்கத்தின் எ.டி.எம்மாக செயல்பட்டவர். எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கிளை இயக்கத்திற்கென  இவரிடம் வாங்கிக் கொள்ளலாம். இவருக்கு இயக்கம் செய்த பதில் மரியாதையும் பிரமாண்டமானது. இவர் இயக்கத்தின் வெள்ளிவிழாத் தலைவரானார். இயக்கம் இவருக்கு கமல் பத்ரா விருதினை வழங்கிச் சிறப்பித்தது.

இவரைத் தொடர்ந்து வந்த தலைவர் ஜே.சி. ஏவி.எம்.எஸ். கார்த்திக். இவர் அனேகமாக என்னிடம் 1996இல் ஏழாம் வகுப்பு படித்த மாணவர்களின் தோழராக இருக்க வேண்டும். (நல்லவேளை இவர் எனது வகுப்பறையில் இல்லை.)

கார்த்திக் பதவியேற்கும் பொழுது எமது கிளை இயக்கத்தின் முதுகெலும்பே இல்லை என்கிற மட்டமான விமர்சனம் ஒன்று எழுந்தது. ஆனால் நடந்தது வேறு!   துவக்கத்தில் இருந்தே எல்லாவற்றையும் திட்டமிட்டு சுழன்றடிக்கும் செயல்புயலாக மண்டலத்தின் முதல் இடத்தில் எமது கிளை இயக்கத்தை இவர் நிறுத்தியிருக்கிறார். 2009 இல் இருந்தே முதல் பத்து இடதிற்குள் வந்த இயக்கம்தான் எனினும் இது ஒரு பெருமகிழ்வை எங்களுக்குத் தந்திருக்கிறது.

இன்று மண்டலம் முழுதும் வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு கிளை இயக்கம் எமது இயக்கம்!

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல் வசூலித்த ஓவ்வொரு பைசாவிற்கும் கணக்கு கொடுத்து அசத்தியவர் கார்த்திக்.

கார்த்திக் இந்த நல்ல அனுபவத்தையும், மகிழ்வையும் தந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.

குடும்பச் சந்திப்புகள், பயிற்சிகள், திட்டங்கள், குறிப்பாக பொறுப்பின் மீது உண்மையிலேயே மரியாதை வைத்து அதை கொண்டாடும் விதத்தில் செயல்பட்ட உங்களுக்கு மனம் திறந்த பாராட்டுக்கள்.

கார்த்திக் அவர்களின் சாதனைகளை சொல்லவேண்டும் என்றால் பதிவு பல கிலோ மீட்டர் நீளும். எனவே ஒரு வரியில்


தலைவன் எப்படி இருக்க வேண்டும் . கார்த்திக் மாதிரி ...


போதும் என்று நினைக்கேன்.

(இது ஒரு பீடு மிகு அனுபவம், அனுபவித்தால் மட்டுமே புரியும்!)

அன்பன்
மது

Comments

  1. சார் நீங்க ஒருவரைப்பற்றிசொன்னால் அது எந்த அளவுக்கு
    உண்மையாக இருக்குமென்பது தெரியும் தலைவர் கார்த்திக்கிற்கு
    பாரட்டுக்களும் வழ்த்துக்களும் அப்புரம் பராட்டுவதற்கு ஒரு
    மனம் வேண்டும் ,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கனஜோராக வீதிக் கூட்டத்தை நடத்திய உங்களைப் பற்றியும் கவிஞர் வைகரையைப் பற்றியும்தான் பதிவு வந்திருக்க வேண்டும்...

      இந்த ஓராண்டு முழுதும் இன்று நீங்கள் செயல்பட்ட மாதிரி செயல்பட்டவர் கார்த்திக்..
      எனவே..
      பெருந்தன்மையோடு நீங்கள்தான் என்னைப் பாராட்டியிருக்கீங்க நன்றி...

      Delete
  2. கார்த்திக்கைப் பாராட்டுவோம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா வாழ்த்துக்களை கடத்துகிறேன்..

      Delete
  3. #நிகில் நாகலிங்கம் அப்பா#
    நிகில் அப்பா நாகலிங்கம் என்று சிறிய திருத்தம் செய்யுங்கள் சகோ ...
    திரு .நாகலிங்கம் தலைமையில் temple city JCI இயக்கத்தில் மிகவும் ஜாலியாக பல ஊர்களுக்கும் சுற்றித் திரிந்த நாட்கள் மறக்க முடியாதவை ,உங்கள் ஊரில் அய்யா திருமண மண்டபம் என்று நினைக்கிறேன் ,அங்கே நடந்த கூட்டத்தில்கலந்து கொண்டது நினைவுக்கு வருகிறது ...
    வைகை விஸ்வநாதன் அவர்கள் மதுரையில் இருப்பதால் எப்போதாவது சந்திக்க முடிகிறது !
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. ஞானத் தந்தை... எனவே... அப்படி குறிப்பிட்டேன்..

      Delete
  4. j.c என்றால் என்வென்று இத்தனை சிக்கனவார்த்தைகளில் சொல்லிவிடமுடியுமா!!!! நான் இதை விளக்க, பல முறை,பல வார்த்தைகள் செலவழித்தும் எனக்கு திருப்பதியான விளக்கம் தரமுடியாமல் திணறி இருக்கிறேன். அருமை சகா!
    ---------
    கார்த்திக் சார் க்கு சரியான மரியாதை. நெஜமாவே அட்டகாசமானதொரு சேவையை செய்துள்ளார். இதற்கு முன் எப்போதும் நான் பெறாத பல j.c.குடும்ப நட்புகளை இவர் காலத்தில் பெற்றேன். இதை எல்லாம் சொல்லும் போது நட்புபொங்கும் j.c.ரெட் சரண்யா கார்த்திக் அவர்களது இனிய முகம் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி..

      Delete
  5. சேவைகள் தொடரட்டும்... அவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. இவ்வியக்கத்தைப்பற்றி எனக்கு அவ்வளாக தெரியாது . இருப்பினும் தங்களின் கூற்றிலிருந்து ஒரு சிறப்பானதொரு சேவையை வழங்கி வருகிறதென்பதும் , சில நல்ல மனிதர்களைப்பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது .தொடரட்டும் தங்களின் சேவை அண்ணா !

    டெம்ப்ளேட் நிறம் அருமை 1 எனக்குப்பிடித்த பசுமைநிறத்தில் அழகாய் இருக்கிறது .

    ReplyDelete
    Replies
    1. ஹலோ மெக்
      வருகைக்கு நன்றி...
      பச்சை நிறமே என்று பாட்டே பாடிவிடுவீர்கள் போல...
      அது ஒரு பெரும் சோகக் கதை ...
      திடீரேனே இஸ்ரேலில் இருந்து இரண்டாயிரத்து ஐநூறு பேர் வர ... மிரண்டு போய் பழைய டெம்ப்ளேட்டை காலி செய்து... புத்சாப் போட்டு தமிழ்மனம் இணைத்து அவ்வ்வ்வவ்வ்வ் அழுதுருவேன்..

      Delete
    2. ஹா ஹா ஹா ! ஏதோ பெருசா பண்ணிருப்பிங்க போல இருக்கு !!!

      Delete
  7. அன்புள்ள அய்யா,

    ஜேசிஐ அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டீர்கள். சமூக சேவை இயக்கம் அல்ல. ஆனாலும் சமூக சேவையில் இருக்கும் இயக்கம் என்று விரிவான அதனைப் பற்றிய விவரங்களை கொடுத்தைப் படித்து அறிந்தேன்.

    தலைவன் எப்படி இருக்க வேண்டும் . கார்த்திக் மாதிரி ...
    ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும்... சமூக அக்கறை உள்ளவராக தாங்கள் மாதிரி...

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருக மணவையின் மாபெரும் பதிவரே...
      வணக்கங்கள் நன்றிகள்

      Delete
  8. நாலு பேர் சேர்ந்து நல்லது செய்யுறீங்க..... தொடர்ந்து நடக்கட்டும். பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழரே..

      Delete
    2. அவர்களை குரிப்பிடாதது தவறுதான்
      குறிப்பாக குட்டி அஸ்விதா தங்கு தடை இன்றி இனிய குரலில் ஜேசி கிரீடை சொல்ல சொல்ல அரங்கு திரும்ப சொன்னது ... நல்லோதோர் அனுபவம் அது ..

      Delete
  9. உங்க ஊருல 18 வயதில் இருந்து 40 வயது உள்ளவரை மட்டும் இளைஞர்கள் லிஸ்டில் சேர்த்து இருக்கீங்க நல்ல வேலை தமிழலில் எழுதி தமிழ் நாட்டில் இருக்கீங்க இல்லையென்றால் இங்குள்ள 60 வயதுள்ள இளைஞர்கள் உங்ககளை அடிக்க வந்து இருப்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. யா ... ஐ காட் யூ
      சாமி நான் ஜே.சி ரூல் மட்டுமே சொன்னேன் விட்டா விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து அடிக்க ஆள் அனுபுவிங்க போல

      Delete
    2. நம்ம மதுரைத் தமிழனுக்கு மனைவியிடம் அடி வாங்கியே வெறுத்துபோனதால், யாராவது அடி வாங்குவதற்கு தென்படமாட்டார்களா என்று கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு பார்க்கிறார். நீங்க தப்பிச்சுட்டீங்க.

      Delete
    3. தப்பிச்சுட்டேனா, அப்பாடி... நன்றி உண்மையானவரே

      Delete
  10. சேவை தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. ஜே சி ல இவ்ளோ இருக்கா..நல்லசெயல்கள்.அனைத்தும் வாழ்த்துகள் சகோ...மேலும் உயர...

    ReplyDelete
  12. Heart felt thanks to all your wishes

    ReplyDelete
    Replies
    1. ஆகா வாங்க தலைவரே.. வாங்க..
      நன்றி வருகைக்கு

      Delete
  13. A special thanks to our editor Kasthuri sir and to our team 2014.

    ReplyDelete
  14. " இது ஒரு பீடு மிகு அனுபவம், அனுபவித்தால் மட்டுமே புரியும்! "

    எனது மரியாதை வணக்கம் !

    இது தான், இது போன்ற இயக்கங்களும், உங்களை போன்ற ஆசான்களும், கார்த்திக் போன்ற இளம் ஆளுமைகளும் தான் தேசத்துக்கு தேவை !

    வரும் காலங்களில் நிச்சயமாய் காதில் இன்பத்தேன் பாயும் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. வருக சாம் ஜி
      நலம்தானே

      Delete
  15. "//அனுபவித்தால் மட்டுமே புரியும்//" - நாங்கள் அனுபவிக்காமல் தங்களின் இந்த பதிவின் மூலம் புரிந்து கொண்டோம்.
    தலைவர் கார்த்திக் அவர்களுக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. அவர் ஓராண்டில் சாதித்ததை ஒரு பதிவில் எப்படி சொல்ல முடியும் எனவே அப்படி எழுத வேண்டியதாயிற்று
      நன்றி உண்மையானவரே

      Delete
  16. ஜெ.சி ன்னா என்னன்னு சொல்லவே இல்லையே.Junior Chamber International தானே இது
    ஏற்கனவே ஒரு முறை இதைப் பத்தி எழுதி இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.கார்த்திக்கின் சேவைக்கு ஹாட்ஸ் ஆஃப்

    ReplyDelete
    Replies
    1. ஆம் கல்வி அலுவலரே..
      நன்றி .

      Delete
  17. சிறப்பான ஒரு இளைஞரை அறிமுகம் செய்து விட்டீர்கள்! ஜே.சி இயக்கத்தின் விரிவு என்ன? என்ன பணிகள் செய்கிறது? ஒரு பதிவு இடலாமே?

    ReplyDelete
    Replies
    1. நானே செய்ய வேண்டிய பணி அது ..
      கட்டாயம் செய்கிறேன் தோழர்.

      Delete
  18. கல்லூரியில் படிக்கும் சமயத்தில் இவ்வியக்கத்தின் Junior Wing-ல் இருந்திருக்கிறேன். Chairman பதவியில் இருந்து பல விஷயங்களை செய்திருக்கிறோம். அந்த நினைவுகளை மீட்டெடுக்க உதவியது உங்கள் பதிவு.

    திரு கார்த்திக் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சேர்மன்...
      மகிழ்வான தகவல் அது
      கவியாழியும் ஒரு முறை சொன்னார் நான் ஜே.சியில் இருந்திருக்கிறேன் என்று ..

      Delete
  19. தொடர்கிறேன்! தோழரே!
    புதுவை வேலு

    ReplyDelete

Post a Comment

வருக வருக