அட நா இன்னாத்துக்கு பெண்களை மதிக்கணும்?



ஏங்க இன்னாங்க இது கேள்வி.

நா எதுக்குங்க பெண்களை மதிக்கணும்?

செம பேஜாரான கேள்வியாச்சேப்பு இது. ஆமா  நான் பெண்களை மதிக்கிறேன்னு சொல்லீட்டு சத்தமில்லாம மிதிச்சா அப்பால யாரு கண்டுக்கபோறா?

இத்த மாதிரி ஒரு அம்மணி எழுத சொன்னதுகொசரம் நானும் ரோசிச்சு ரோசிச்சு பார்த்தேன்.



இத எழுத தகுதி கீதா(தில்லையகத்து கீதா மேடம் இல்ல நைனா) இல்லையான்னு.

பெரிய பேஜாராப் போச்சுப்போ. இப்படியே ரோசிசுக்கிட்டு போய்கிட்டே இருந்தனா எதிதாப்புல பார்த்தா ஒரு பாப்பா வருது.

பின்னால பின்னால பார்த்துக்குட்டு போகுது. எங்கேயோ பார்த்த மாதிரிகீதா யாராக்கும்னு பார்த்தா, அட ஜோஷ்னா.

நம்மளாண்ட பத்தாம் கிளாஸ் படிச்ச பொண்ணு நைனா. சரின்னு கொஞ்சம் தூரம் போனா வரிசையா ஏழு எட்டு சுடிதார்.

பார்த்தோன்ன அவ்வளோ குஷி! (லேய் நீங்க நெனைக்கிற மாறி இல்ல மக்கா) அம்மாம் பேரும் ஏம் புள்ளைங்க!  அல்லாரும் காலேஜ் சேர்ந்துட்டாங்க. அம்மாம் திருப்தி எனக்கு.

அப்போத்தான் எனக்கு  இந்த பதிவ எழுத கொஞ்சம் தெகிரியம் வந்தது. அப்புறம் நியாயமான கேள்வி ஒன்னும் வந்தது.

இப்படி அல்லாரும் பெண்களை மதிக்கிறேன்னு பதிவு மட்டும் போட்டாப் போதுமா?

என்னப் பொறுத்த வரை ஆண் பெண் என்று பிரித்து பார்ப்பதே தப்பு. அல்லாரும் மன்சங்கதானே. அப்புறம் இன்னாத்துக்கு இந்தப் பதிவு. ஆமா நான் மதிக்கிறேன்னு நான் சொன்னா என்னமோ நான் உயரத்திலேயும் அவுக பொசுக்குன்னு கீழேயும் இருக்கமாரி தோணுதே இது எனக்கு மட்டுமா இல்ல உங்கள்ள சிலபேருக்குமா?

மன்சங்கள நல்வங்களும் இருக்காங்க. அவுக எவ்வளவு நல்லவுகன்னு  நாம தெரிஞ்சுக்கிறதுக்கோசரம் கெட்டவுகளும் இருக்காக.

நல்லவுக சிலர் லேடீசாகவும் இருக்காக.

பொதுவா சொல்றதுல்ல பல சிக்கல் எனக்கு இருக்கு.

முதல்ல இத்தாலியில்  இருந்து வந்த அம்மணி ஒன்னு நினைவுக்கு வருது.

ரெண்டு லெட்சம் உசுரு போயிருச்சே. நான் எப்படி சொல்வேன் பெண்களை மதிக்கிறேன்னு.

தேவதாசி முறைய ஒழிச்ச முத்துலெட்சுமி அம்மா, ஒரே கவிதையில அல்லா பள்ளிகூடத்திற்கும் மாற்றம் கொடுத்த கவிஞர் வெண்ணிலா என  அல்லாரும் நினைவுல இருக்காகதான். அவுக மேல எனக்கு அம்மாம் மரியாத. அதுக்குன்னு இத்தாலி ஆத்தா வந்து நின்னுச்சுன்னா?

சுளுவா சொல்றேன் நா அல்லாரையும் மதிக்கிறேன். இதுல போய் பெண்களை மதிக்கிரீயா இல்லையான்னு சொக்காய புடிச்சி கேட்டா நியாயமா பாஸ்?

இப்படியெல்லாம் பதிவு போடற நெலமயில நாம இருக்கோன்றதுதான் பேஜாரே.

யப்பா நான் கொஞ்சம் முன்னாலகீறேன் கொஞ்சம் வெரசா வாங்க.

நொந்தவனத்தில்
மது 

Comments

  1. என்னப் பொறுத்த வரை ஆண் பெண் என்று பிரித்து பார்ப்பதே தப்பு. அல்லாரும் மன்சங்கதானே. ஸூப்பர் தோழரே,,,,
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. அதானே... வருசத்துல ஒருநா மதிக்கிறேன்னு மாஞ்சு மாஞ்சு பதிவெழுதுனாப் போதுமா... மத்த நாளெல்லாம்...
    எல்லா நாளும் ஆணும் பெண்ணும் சமமென நினைப்போம்.... அருமை சார்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி பரிவை ஜி

      Delete
  3. அட கடவுளே நெஞ்சில கல்லைத் தூக்கி போட்டது போல இருந்தது தலைப்பு. ம்..ம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ .. நலம்தானே

      Delete
  4. என்ன நைனா பதிவு ஜோராகீது பெண்களை மதிக்கிறேன்னு சொல்லிவிட்டு மிதிக்கிறதா அதெல்லாம் அந்த காலம் நைனா பெண்களை நாம மதிக்கலைன்னா அவங்க நமமளை தூக்கி போட்டு மிதிச்சுடுவாங்க நைனா

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தோழர்.

      Delete
  5. அதானே? எதுக்கு மதிக்கணும்? பெரியார் சொன்னமாதிரி, “நம்மகிட்ட மத்தவுங்க எப்படி நடந்துக்கணும்னு நாம நெனைக்கிறமோ, அதுமாதிரி நாம அடுத்தவங்க கிட்ட நடந்துகிட்டா அதுபோதும்“ல? இர்ந்தாலும் மாமே..டபால்னு உன் பாட்ல லாங்வேஜ மாத்திக்கினியா? ஆர்ரா இத்து நம்ம பேட்டையில புத்ச்சா கீதேனு பாத்துக்கினே வந்து... அட நம்ப மதுவா இது..ன்னு..படா பேஜாரா பூட்ச்சிபா..அக்கா..ங்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா கலக்குறீங்க

      Delete
  6. ரொம்ப நாளிக்கி அப்பறமாங்காட்டியும் வந்துனுகீறியா.. மறந்துட்டேம்பா.. இந்தா புட்சுக்கோ த.ம.2 (எங்க தங்காச்சி சொன்னதும்படி ஜோரா எளுதிகினே சாரே! ரொம்ப டாங்ஸ்பா)

    ReplyDelete
  7. //என்னப் பொறுத்த வரை ஆண் பெண் என்று பிரித்து பார்ப்பதே தப்பு. அல்லாரும் மன்சங்கதானே.//
    //சுளுவா சொல்றேன் நா அல்லாரையும் மதிக்கிறேன்.//
    ஆகா அண்ணா!! எங்கேயோப் போய்ட்டீங்க! :)

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் இல்லாமல் உலகு இல்லை .. தாயாக தோழியாக சகோதரியாக இன்னும் எல்லாமாக இருப்பவள் அவளே.
      இருப்பினும் என்னை மிகுத்த சுய பரிசோதனைகளுக்கு உட்படுத்திய பின்னர் எழுதிய பதிவு இது. மதிக்கிறேன் மாண்புற நடக்கும் பெண்களை.
      அவ்வளவே ..
      இது மேலும் பால் வேறுபாட்டை ஏற்படுத்தும் ஒரு தலைப்பாக வேறு தெரிகிறது.
      எனக்கென்னவோ ஆண்களின் மரியாதை ஏற்பு இதெல்லாம் பெண்களுக்கு தேவையில்லை அதுகுறித்து அவர்கள் கவலைப்படவும் தேவையில்லை என்றே தோன்றுகிறது.
      வலிந்து சென்று என்னை மதிங்க மதிங்க என்று சொல்வதால் என்ன பயன். அது அணிச்சயாகவே வருமே.

      Delete
    2. உண்மைதான், எனக்கும் இந்த எண்ணம் வரும் அண்ணா, சுவாசிப்பதுபோல் அனைவரையும் சமமாய் மதித்தலும் இயல்பானதாய் இருக்கவேண்டும் என்று. ஆனாலும் நீங்கள் சொல்வது போல் பெரியோர் ஒரு சிறு வட்டத்தில் அடங்கிவிடுவர் அண்ணா. உங்களைப் போன்றோர் எத்தனை பேர் இருக்கிறார்கள்? பெண்களை சரிசமமாக மதித்து வாழ வேண்டும் என்று தெரியாத, உணராத, மதிக்காவிட்டாலும் பரவாயில்லை மிதிக்கும் சிறியோர் இருக்கும்வரை சொல்லவேண்டியிருக்கிறதே அண்ணா..
      பல இடங்களில் கணவர் சரிசமமாக நடத்தினாலும் மருமகளாய் நசுக்கப்படும் பெண்மையும், சில இடங்களில் கணவரும் மிதிக்கும் பெண்மையும், உயர் அதிகாரியால் மிதிக்கப்படும் பெண்மையும் இருக்கும்வரை அம்மியை அடிக்கத்தான் வேண்டும் :)
      அனைவரையும் மதிக்கும் குணம் அனிச்சையாக வராத அ-மனிதரை அடித்து உணர வைக்க வேண்டும்தானே?

      Delete
  8. எல்லோரையும் மதிக்கின்றேன் என்று கூறும்போது அதில் அனைத்தும் அடங்கிவிடுகிறது. ஆதலால் அதிகம் யோசிக்கவேண்டியதில்லை.

    ReplyDelete
  9. மது நண்பரே! எங்களையும் உங்க லிஸ்டுல சேர்த்துக்கங்க...... அடடா நம்ம பேரு சவுண்டா இருக்கே ஏதோ வெவகாரமான்னு பாத்தா (னீங்க என்னடானா தில்லை அகத்து கீதா இல்லைனு சொல்லிட்டீங்களே) நல்லா சொன்னீங்க நீங்க....அதான் கடைசீல சொன்னீங்க பாருங்க...அதாங்க சுளுவா சொல்றேன் நா அல்லாரையும் மதிக்கிறேன். இதுல போய் பெண்களை மதிக்கிரீயா இல்லையான்னு சொக்காய புடிச்சி கேட்டா நியாயமா பாஸ்?

    இப்படியெல்லாம் பதிவு போடற நெலமயில நாம இருக்கோன்றதுதான் பேஜாரே.// இதுதாங்க... நாங்களும் அப்பால ஒரு பதிவு போடணும் போடணும்னு 3 நாளா தவிச்சுக்கிட்டுருக்கோம்.....இதா இத்த மாதிரிதான்....நாங்களும் சேந்துக்கறோம் இன்னிக்கு அப்பால ஒரு பதிவ போட்டு......கை கொடுங்க....அட சும்மா இல்லைங்க....கீழ விழுந்துப்புட்டோம்...நல்லாகீதுங்க...

    ReplyDelete
  10. ரெண்டு பேரும் ஒண்ணுதாங்க அதாங்க ஆணும், பெண்ணும்...சொன்னீங்க பாருங்க .அதுக்குத்தான் ஷொட்டு....

    ReplyDelete
  11. நல்ல பதிவு.

    ReplyDelete
  12. சென்னைக்கு எப்போது சென்று வந்தீர்கள்...?

    ReplyDelete
  13. ரூட்டு தல .. சோக்காகீது பதிவு ...

    ReplyDelete
    Replies
    1. இன்னது ரூட்டுத் தலையா அவ்வவ்வ்வ்வ் .
      நன்றி தோழர்

      Delete
  14. எனக்கு ஒருசிலநேரங்களில் எப்போதாவது மூளை ஒருவிதமாக யோசிக்கும் . பூமி என்ற கிரகத்தில் , உயிரினங்களின் மணிமுடியாக விளங்குகிறான் . ஆனால் அவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வகையாக உலகில் வாழும் மற்ற உயிர்களை தன் தேவைக்காக நாசம் செய்துகொண்டே இருக்கிறான் . இதுபோதாதென்று சக மனிதனையும் நாட்டின் பெயராலும் , மதத்தின் பெயராலும் , இனத்தின் பெயராலும் பிரிவினையை உண்டாக்கி அடித்துக்கொள்கிறான் . இதுவும் போதாதென தன் சக பிறவியான பெண்ணானவளையும் தனக்குக்கீழே அடக்கி ஆள நினைக்கிறான் . அவர்களின் விடுதலைக்கென ஒரேஒரு தினத்தை வைத்து மற்ற அனைத்து நாட்களும் அவர்களையும் துன்பத்தில் ஆழ்த்துகிறான் . சோ சேட் .... நா என்ன எழுதறன்னு எனக்கே புரியல ,....

    தம+

    ReplyDelete
  15. மதிக்கவும் வேணாம் ,மிதிக்கவும் வேணாம் ..தோழமையாய் பழகினாலே போதும் .
    த ம 8

    ReplyDelete

Post a Comment

வருக வருக