குழந்தைகளும் இணையமும் - 4 internet security

 https://www.facebook.com/shahjahanr பதிவில் இருந்து


ஃபில்டர்கள், ஆன்லைன் ஷாப்பிங், பிரைவசி பாலிசி ஆகியவை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.



வடிகட்டி மென்பொருள் பயன் தருமா?
வடிகட்டிள் - ஃபில்டர்ஸ் - குழந்தைகள் விஷயத்தில் பெற்றோரின் கண்காணிப்புக்கு துணையாக இருக்கலாம் - ஆனால் கண்காணிப்புக்கு மாற்றாக இருக்காது. வடிகட்டிகளும் தடுப்பிகளும் முற்ற முழுக்க பிழையற்றவையாக இருக்க முடியாது. பலநேரங்களில் அவை தேவையற்ற தகவல்களை தடுக்கத் தவறி விடுகின்றன. உங்கள் குழந்தைகளின் பள்ளிப் பணிகளுக்குத் தேவைப்படக்கூடிய பயனுள்ள விஷயங்களையும்கூட அவை தடுத்துவிடக்கூடும்.

சிறு குழந்தைகளுக்கு வடிகட்டிகள் பயனுள்ளவையாக இருக்கலாம். அவர்கள் வளர வளர, இணையத்தில் பொறுப்புடனும் பாதுகாப்பாகவும் நடந்துகொள்ளும் பழக்கத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

என் வீட்டு பதின்மைப் பருவத்தினர் இணையவழி ஷாப்பிங் செய்ய விரும்புகிறார். வலைதளம் பாதுகாப்பானதுதான் என்பதை எப்படி உறுதி செய்வது?
உங்கள் பதின்மைப் பருவத்தினர் இணைய தளங்களில் கடன் அட்டையைப் பயன்படுத்த அனுமதிப்பதற்கு முன்பு, இணையதள ஷாப்பிங் பற்றியும், அதை பாதுகாப்பாகச் செய்வது எப்படி என்றும் தெளிவாக அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
வலைதளத்தில் கடன் அட்டை தகவலைக் கொடுப்பதில் தவறில்லை என்று உறுதி செய்து கொள்ள ஒரு தளத்தில் எதையெதைப் பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள். வலைதளத்தில் ஷாப்பிங் செய்வதற்கு முன்பு இவற்றைப் பாருங்கள்:
• சம்பந்தப்பட்ட வலைதளத்துக்கு பெட்டர் பிசினஸ் பீரோ (Better Business Bureau) (அல்லது இதர அமைப்பின்) தர உத்தரவாத முத்திரை இணைப்பாக இருத்தல்.
• வலைப் பக்கத்தின் கீழ்மூலைப் பகுதியில் உடைபடாத பூட்டுச் சின்னம் - இது, நீங்களும் வலைதளமும் மட்டுமே நிதிப் புழக்கத்தைப் பார்க்க முடியும் என்று காட்டுகிறது.
• உங்கள் உலாவியின் முகவரிப்பட்டியில் தெரியும் முகவரியில் "https" என இருத்தல் வேண்டும் ("s" என்பது பாதுகாப்பானது என்பதைக் குறிக்கும்).

மேலே குறிப்பிட்ட அம்சங்களும் மோசடி செய்யப்பட்டதாக இருக்கலாம். எனவே, உங்கள் குழந்தைகள் இணைய வழியில் எதையும் வாங்குவதற்கு முன்னால், உங்களிடம் கேட்க வேண்டும் என்று அறிவுறுத்துவது முக்கியம். அப்போது, வலைதளம் பாதுகாப்பானதா என்று இறுதி முடிவு செய்பவர் நீங்களாகவே இருப்பீர்கள். உங்கள் உலாவி 128-பிட் மறையாக்க வசதியை ஆதரிக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதில் உங்கள் கடன் அட்டை எண் அனுப்பப்படுவதற்கு முன்னர் தானாகவே மறையாக்கப்பட்டு, அல்லது கிறுக்கப்பட்டு விடும்.
https://www.facebook.com/shahjahanr
வலைதளத்தின் இரகசியக் காப்புக் கொள்கையில் நான் என்ன பார்க்க வேண்டும்?
வலைதள இரகசியக் காப்புக் கொள்கைகள், தளத்தில் திரட்டப்படும் தனிநபர் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, பரிமாறப்படுகின்றன, சேமிக்கப்படுகின்றன என்பதை கோடிட்டுக் காட்டுகின்றன. ஒரு வலைதள இரகசியக் காப்புக் கொள்கையை பெற்றோர் படித்துப் பார்ப்பதும், தமது சொந்த விவரங்களை வழங்குவதற்கு முன்னால் இரகசியக் காப்புக் கொள்கையில் எதைப் பார்க்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு விளக்குவதும் மிகவும் அவசியம். சில நேரங்களில் இக்கொள்கைகள் மிக நீளமாகவோ, சிக்கலானதாகவோ, தெளிவில்லாமலோ இருக்கலாம்.

வலைதளத்தில் இரகசியக் காப்புக் கொள்கை அல்லது அறிக்கை இல்லை என்றால், அத்தளத்தில் ஷாப்பிங் செய்யும்போது அல்லது சொந்த விவரங்களைத் தரும்போது எச்சரிக்கையாக இருங்கள்.

ஒரு இரகசியக் காப்புக் கொள்கையை படிக்கும்போது, இவற்றை அறிய வேண்டும்:
• என்ன தகவல் திரட்டப்படுகிறது மற்றும் தடமறியப்படுகிறது.
• இத்தகவல் எவ்வாறு பயன்படுத்தப்படும் (குறிப்பாக, மூன்றாம் தரப்புக்கு விற்கப்படுமா).
• உங்கள் குழந்தைகளிடமிருந்து திரட்டப்பட்ட தகவல் தரவை மாற்ற அல்லது நீக்க உங்களுக்கு வசதி உண்டா.
• தளத்தின் அரட்டை அறைகள், சேதிப் பலகைகள், மின்னஞ்சல் நடவடிக்கைகளில் குழந்தைகளைப் பாதுகாக்க என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
• இணையத்தில் ஒரு குழந்தை சொந்த விவரத்தை வெளியிடுவதற்கு முன்னால், பெற்றோர் ஒப்புதலைப் பெற்று சரிபார்க்க வலைதளம் முயற்சி செய்கிறதா.
https://www.facebook.com/shahjahanr

Comments

  1. குழந்தை தெரிந்து கொள்வதற்கு முன் நான் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது இவ்வளவையும்.

    இவை அறியாதன.

    பகிர்விற்கு நன்றி தோழர்.

    த ம 2

    ReplyDelete
  2. வணக்கம்
    தகவல் அருமையாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றி த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்கள்
    நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
  4. இணைப்பில் பார்க்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல்கள் அருமை !மிக்க நன்றி பதிவுக்கு.

    ReplyDelete
  6. பலருக்கும் பயன் பெறட்டும்
    தமிழ் மணம் 6

    ReplyDelete
  7. மிக மிக நல்ல பயனுள்ள தகவல்கள். குழந்தைகள் என்றில்லை நமக்கும் அவசியம்தானே!

    நன்றி பகிர்வுக்கு....

    ReplyDelete
  8. அனைவருக்கும் தேவையான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றி! த.ம.1

    ReplyDelete
  10. நம்மை விட நம் குழந்தைகள் இந்த மாதிரி விசயங்களில் புத்திசாலிகள் :)

    ReplyDelete
  11. அன்புள்ள அய்யா,

    குழந்தைகளும் இணையமும் வடிகட்டிள் - ஃபில்டர்ஸ் - குழந்தைகள் விஷயத்தில் பெற்றோரின் கண்காணிப்பு - பாதுகாப்பு - பெட்டர் பிசினஸ் பீரோ இவை பற்றி அறிந்து கொள்வதற்கு பல விசயங்களைச் சொன்னது கண்டோம்.

    நன்றி.
    த.ம. 10.

    ReplyDelete
  12. நல்ல தகவல்கள். நன்றி.

    ReplyDelete

Post a Comment

வருக வருக