கவிஞர் ஷாமிலா தலுவத்தின் உலுக்கும் கவிதைப் பகிர்வு

சகோதரி அப்துல் ஹாக் லாரீனா ஒரு கவிதையைப் முகநூலில் பகிர்ந்திருந்தார். ஷாமிலா தலுவத்தின் உள்ளத்தை உலுக்கும் கவிதை அது.
நீங்களே படியுங்களேன்.




Abdul Haq Lareena
14 mins ·
அவர்கள் மன்னம்பேரியை
பாலியல் பலாத்காரம் செய்து
அவளை உயிருடன் புதைத்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
கிளர்ச்சி எழுச்சிபெற்றிருந்தது.
பின்னர் அவர்கள்
ககவத்த பெண்களிடம் வந்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
நான் கஹவத்தையைச் சேர்ந்தவளல்ல.
நுரிவத்த பெண்களிடம் வந்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
நான் நுரிவத்தவில் வாழவில்லை.
பின்னர் அவர்கள்
வடக்கின் மகளீரிடம் வந்தார்கள்
நான் பேசவில்லை
கிருஷாந்தி குமாரசாமி,கோணேஸ்வரி,இசைப்பிரியா
இவர்கள் என் சகோதரிகளல்ல.
பின்னர் அவர்கள்
வேறு தோல் நிறம்கொண்ட
பெண்ணிடம் வந்தார்கள்
கூட்டாய் எட்டுப்பேர்
விக்ரோறியா அலெக்ஸ்சாண்டிராவை
பாலியல் பலாத்காரம் செய்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
அவள் வெளிநாட்டவள் என்பதால்.
அந்தக கோரக் கும்பல்
ரீட்டா ஜானை
பாலியல் பலாத்காரம் செய்தது
அவளது உடல்
பதினைந்துமுறை குத்தப்பட்டு
மொடேரா கடற்கரையில்
வீசப்பட்டது.
நான் பேசவில்லை
ஏனெனில்
அவள் ஒரு இந்தியப் பெண் என்பதால்.
அவள் மாலை வேளை
நகைகள் அணிந்து
கடற்கரையில் நடைப்பயிற்சி செய்து
வினையை தானே தேடிக்கொண்டாள்.
பின்னர் அவர்கள் விஜேராமவில்
பெண் ஒருவரை பலாத்காரம் செய்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
அவள் ஒரு விபச்சாரி என்பதால்.
பின்னரும் அவர்கள்
நூற்றுக்கணக்கான கன்னிகளை
பலாத்காரம் செய்தார்கள்
சம்பையின் மதுவுடன்
அக்குரசவிலும் மொனராகலையிலும்
கொண்டாடினார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
எனக்கு அரசியல்வாதிகளுக்கு பயம்.
பின்னர் அவர்கள்
லோகராணியை
பாலியல் பலாத்காரம் செய்து
புனித தலமொன்றில் நிர்வாணமாய்
உடலை வீசியெறிந்தார்கள்
கும்பலாய் அவர்கள்
சரண்யா செல்வராசாவை
பாலியல் பலாத்காரம் செய்தார்கள்
நான் பேசவில்லை.
இன்று அவர்கள்
வித்தியா சிவலோகநாதனை
பாலியல் பலாத்காரம் செய்தனர்
நான் பேசவில்லை
ஏனெனில்
அவள் தமிழிச்சி
புங்குடு தீவு எனும்
சிறு கிராமத்தவள்.
- Shamila Daluwatte-
(மொழிபெயர்த்தவரின் விபரம் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள் சகோஸ்)

காதல் கவிதைகள் எளிமையானவை. ஆனால் இப்படி வலியைப் வேதனையைப் பதிவு செய்யும் கவிதைகள் தங்களை சரித்திரத்தின் பக்கங்களில் நிரந்தரமாய் இருத்திக்கொள்கின்றன.

நீங்க என்ன நினைகிறீங்க...

Comments

  1. உண்மையிலேயே உலுக்கிவிட்டது. அறிமுகப்படுத்தி பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு நன்றி முனைவரே

      Delete
  2. வணக்கம்
    கவிதையை படித்த போது இப்படியான சம்பங்கள் நடந்துள்ளது என்பதை அறிந்தேன்.. மிகவும் உருக்கமாக உள்ளது பகிர்வுக்கு நன்றி. த.ம 3
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூப்ஸ்
      முகநூலில் ஒரு விருதினைப் பார்த்தேன்...
      இன்னொருவரையும் அறிவேன்..
      நல்ல பணி தொடர்க

      Delete
  3. வேதனையின் உச்சம் நீதி செத்து விட்டது...
    தமிழ் மணம் 4

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தோழர்

      Delete
  4. உலுக்கியெடுத்துவிட்டது நண்பரே
    முகநூலில் பகிர்ந்துள்ளேன்
    நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
  5. என்ன கொடுமைங்க இது...?

    ReplyDelete
    Replies
    1. கொடுமைகள் தொடர்கின்றனவே..

      Delete
  6. Replies
    1. வரிகள் வேண்டுமானால் இருக்கலாம்
      எழுப்பும் உணர்வுகள் அல்லவே அய்யா.

      Delete
  7. உண்மையில் உலுக்கிய கவிதைதான்.

    த ம 8

    ReplyDelete
    Replies
    1. வருக செந்தில் ஜி ..

      Delete
  8. நான் பேச வில்லை
    இந்த பதிவை கூகுளில், பேஸ்புக்கில், டுவிட்டரில் பகிர்ந்துள்ளேன்!
    நன்றி!
    த ம 9
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  9. அவர் பேசவில்லை என்றாலும் நம் எல்லோரையும் பேச வைத்து விட்டார் !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஆசானே..

      Delete
  10. வதைக்குமிவ் வஞ்சகரை வாழவிடல் கூடா
    பதைக்கிறது கேட்டுமனம் பார்க்கும் இடத்தில்
    சதையெல்லாம் முள்குத்தி சாக்கடையில் இட்டுப்
    புதைக்க வளரா திவை !
    உலுக்கும் கவிதந்து உண்மையை உரக்கச் சொல்லி ஆதங்கத் தை வெளிப்படுத் தியவர்க்கு மிக்க நன்றியும் பாராட்டுகளும்.
    பதிவுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  11. மிகவும் வேதனை நிறைந்த கவிதை! உள்ளத்தை உலுக்கியது !

    ReplyDelete

Post a Comment

வருக வருக