இற்றைகள் - விளம்பரமா இது


சகாயம் ஐ.ஏ.எஸ் ஒரு விளம்பரப்பிரியர் என்கிற குரல்கள் புதிதல்ல...
ஒரு தணிக்கையாளரிடம் பேசிகொண்டிருந்த பொழுது அவர் என் கிளாஸ்மேட் தேவையில்லாம விளம்பரம் தேடுறார் என்றார்.
படிக்கும் பொழுது ஒரு தமிழாசிரியர் எழுதிக்கொடுத்த கட்டுரைகளை படித்து பரிசுகளை வாங்கினார் அவர் என்றும் சொன்னார்
ஆப்டர் ஆல் ஒரு கன்பர்ட் ஆபீசர் எப்படி இருக்கணும்னு தெரியலை என்றார்.
ஒ அப்படியா என்றதுடன் முடிந்தது எங்கள் முதலும் கடைசியுமான அந்த சந்திப்பு..
இந்தியாவில் இதுவரை சொத்து மதிப்பை வெளிப்பட்டையாக அறிவித்த ஒரே ஐ.ஏ.எஸ் இவர்தான்
அறிவித்த மறுநாள் ஒரு வடஇந்திய வருவாய்த்துறை அதிகாரி தனக்கு கோடிக்கணக்கில் சொத்து இருபதாகவும் சகாயம் வெளியிட்ட தகவல்களை நம்பமுடியவில்லை எனவும் தெரிவித்தார்.
தற்போது ஏதோ ஒரு போதைகுரு உபன்யாசம் செய்திருக்காராம் ...
மெண்டலி அபக்ட் ஆயுட்டார் சகாயம் என்று ...
பொருப்பான பத்திரிக்கைகள் சொன்னவரின் பணி அனுபவச் சாதனைகளை பட்டியலிடாமல் அவர் கருத்தைமட்டும் முன்வைக்கின்றன.
அவர்களுக்கும் விற்பனை முக்கியம்...
நம்மை வேதனைப்படுத்துவது குறித்தெல்லாம் பத்திரிக்கைகளுக்கு கவலைகிடையாது...
சுட சுட செய்தி வேண்டும் அவ்வளவே...
பத்திரிக்கையாளர்கள் மேல்குறிப்பிட்ட உபன்யாசத்தை செய்த போதைகுருவின் பணிக்கால அனுபவங்களை தேடிவெளியிட்டாலே போதுமே
அவர்களுக்கு விற்பனையும் ஆச்சு செய்த பாவத்திற்கு பரிகாரமும் ஆச்சு ..
செய்வார்களா...

Comments

  1. பழுத்த மரமே கல்லடிப் படும். நேர்மையாளர்களை வேற்றுலகிலிருந்து வந்தவர்களாகவே பார்க்கும் சமூகம் இது.

    ReplyDelete
  2. சகாயம் கன்ஃபர்டு ஐ.ஏ.எஸ் என்பதை இப்போதுதான். அறிந்தேன். எந்த நேரடி ஐ.ஏ. எஸ் செய்யாததையும் அவர் செய்திருக்கிறார் பொதுவாக எந்த பதவிக்கும் தேர்வு மூலமாக தேர்ந்துக்கப் பட்டவர்கள் பதவி உயர்வு பெற்றவர்களைவிட சிறந்தவர்களாகவும் திறமை மிக்கவர்களாகவும் கருதப் படுகிறார்கள். உயர் அதிகாரிகள் அவர்கள் மீது மென்பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.அவர்களுடைய தவறுகளை கண்டு கொள்வதும் இல்லை.இது ஏன் என்று இன்றுவரை விளங்கவில்லை.

    ReplyDelete
  3. நேர்மையாளவர்கள் மீது மக்களுக்கு சந்தேக கண்ணோட்டம் வருவது நமது நாட்டின் சாபக்கேடு தோழரே..
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  4. நேர்மையாளரை தூற்றுவது வாடிக்கைதான்...

    ReplyDelete
  5. இப்போது அவர் யார் எப்படிப்பட்டவர் என்பதை சிந்திப்பதை விடுத்து அப்போது அவர் எப்படி இருந்தார் என்று பேசுவது நண்பர்களுக்கும் சொந்த பந்தங்களுக்கும் வழக்கமான ஒன்றே! பிரபலமானவரை குறைத்துப் பேசுவது சில சாடிஸ்டுகளுக்கு பிடிக்கும். குறுகிய புத்தி உள்ளவர்கள். அவர்களைக் கடக்காமல் நாம் போக முடியாது.

    ReplyDelete
  6. //அறிவித்த மறுநாள் ஒரு வடஇந்திய வருவாய்த்துறை அதிகாரி தனக்கு கோடிக்கணக்கில் சொத்து இருபதாகவும் சகாயம் வெளியிட்ட தகவல்களை நம்பமுடியவில்லை எனவும் தெரிவித்தார்.// ஹஹஹ இதுவே உண்மையைப் பறைசாற்றிவிட்டதே. எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைனு....நாம் கேட்பதும் அதுதானே.

    நேர்மைக்கு வேல்யூ இல்லை என்பது பல வகைகளில் நிரூபணம் ஆகிவருகிறது. ஒருவர் தன் நேர்மையால் புகழ்பெற்றுவிட்டால் இப்படித்தான் வாய்கள் கண்டபடி பேசும் அவதூறுகளை.

    4 வது தூணாகிய பத்திரிகை தர்மம் என்பது சுத்தமாக இல்லை நம் நாட்டில் பரபரப்பிற்காகத்தான் வியாபரத்திற்காகத்தான் செய்திகளை வெளியிடுதல்.இது எல்லா ஊடகங்களுக்கும் பொருந்தும். இதுதான் நம் நாட்டின் நிலைமை..வேதனைதான்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோ
      வருகைக்கு நன்றி

      Delete

Post a Comment

வருக வருக