இலக்குமி இரண்டு விமர்சனங்கள் ....

திருமிகு. ராஜசுந்தரராஜன் அவர்களின் விமர்சனம்...

இலக்கு me
____________
சின்ன விலகல் அல்லது கோணலாவது இல்லாவிட்டால் அது கலை ஆகாது. அது ராக்கெட் சயின்ஸ்.ராக்கெட் சயின்ஸில், விலகல் நேர்ந்தால்...

ஓர் இடைக்கோடு (hyphen) இடத் தவறியதால் Mariner I ஊட்டியக்குப்புற விழுந்த வரலாறு அறிவோம்.

ஏவுகணை-அறிவியல் இல்லை வாழ்க்கை. இடைக்கோடு இடத் தவறுதல் போன்ற சிறு தவறுகளால் முடிவுக்கு வரக்கூடியதும் இல்லை. இதற்குள் அடங்கிய குடும்பம்? அதுவும்தான்.

நான் ஒருவன் மட்டுமல்ல, என் மனைவியும் சேர்ந்து சம்பாதித்தால்தான் எங்கள் குடும்பத்துக்கு போதுமான பொருளாதாரம் தேறும். பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்புவது அலுவலகத்துக்கு ஓடுவது என எந்நேரமும் இறுக்கமாக இருக்கும் எங்கள் வாழ்க்கையில் ஒரே ஓர் இடைக்கோடு கலவிதான். ஒரொரு நாளும் இரவில் அந்த இடைக்கோடு இடத் தவறியதில்லை.

இருக்க, ஒருநாள் அதுவும் கூடாமற் போயிற்று. காவிரிப்பிரச்சனைக்காக தொடர்வண்டி பேருந்துகள் ஓடாமற் போயின. தொடர்வண்டியிற் போய்வருகிற என் மனைவி, அந்தோ, என்ன பண்ணுவாள்? அந்த ஓரிரவுக்கு தன் பெற்றோர் வீட்டில் தங்கிவிட்டு, காலைச் சமையலுக்கு வெள்ளெனே ஓடிவந்துவிடுவதாகச் சொன்னாள். வேறுவழி? விட்டுவிட்டேன். கலவியில்லாத அந்த இரவால் வாழ்க்கை யொன்றும் புரண்டுவிடவில்லை.
மறுநாளிலிருந்து, தான் தொடர்வண்டியில் இல்லை, நகருந்தில் போகப்போவதாகச் சொல்கிறாள். வழக்கமான வழக்கம் வழிமாறுகிறபோது யோசிக்கத் தோன்றுமா இல்லையா?

அவள் வீடுதிரும்பாத அன்றைக்குப் பகலில் எனக்கு ஒரு தொலைபேசி விளிப்பு வந்தது, ஒரு பெண்ணிடமிருந்து. எனக்கு வர்ணக்கலவையாகவும் தனக்கு அதைக் கருப்பு-வெள்ளையாகவும் எடுத்துக்கொண்டாளோ இவள்? தனக்கும் ஒரு வர்ண வாழ்க்கையைத் தேடுகிறாளோ? ஒரு வர்ணக்கலவையாக எனக்கு அது இருந்திருந்தால், ஓரோர் இரவிலும் இவளிடம் ஏன் படுக்கிறேன்?
எவனாவது ஒரு பொம்மை செய்கிறவனோ போஸ்ட்டர் ஒட்டுகிறவனோ வர்ணவிவரணை பேசலாம், ஆனால் அவன்கள் ‘அதில்’ சொதப்பவே வாய்ப்புகள் அதிகம். தன் காதலன், ரசனையில் ஒரு கலைஞனாக, உரையாடலில் ஒரு ஞானியாக, உடல்வேகத்தில் ஒரு போர்வீரனாக அமையவேண்டும் என்று ஒரு பெண் ஆசைப்படுவதாக வியாசர் எழுதியிருக்கிறாராமே? பொம்மைபிடிக்கிறவன் இவள் கையிலும் களிமண்ணைத் தருவானாகலாம். இப்படி ஆகிவிட்டதே என்று, நகருந்து ஏறி, ‘கன்டோன்மென்ட்’... வாய்க்கவில்லை என்றால் ‘தோபி-க்கானா’... அதாவது “மதராஸ பட்டணம்”?

அடச்சீ! என் புத்தி ஏன் இப்படிப் போகிறது? நம்மையும் கைப்பேசியில் ஒருத்தி காசுபிடுங்குவதற்கு அடிப்போடுகிறாள். நம் வாழ்க்கையோ கருப்பு வெள்ளை. பிள்ளையும் இருக்கிறது. வர்ணமெல்லாம் பொம்மைக்காரன் தொழில்.

“ஏய், லட்சுமி, பிள்ளைக்கு யூனிபார்ம் போட்டாச்சா?”
-------இது மூத்த எழுத்தாளர் திரு.ராஜசுந்தரராஜன் அவர்களின் விமர்சனம் --
\
இப்போது காணொளி விமர்சனம் ஒன்று


Comments