கண்டேன் புதையலை

kanden puthyalai, priyasaki
கண்டேன் புதையலை, பிரியசகி 
கண்டேன் புதையலை
பிரிய சகி
பாரதி புத்தகாலயம் 
பக்கங்கள் 207
விலை 160

பெருமதிப்பிற்குரிய தோழர் வெங்கடேஷ் சிவராமகிருஷ்ணன் 30/04/2018 அன்று திருச்சி புத்தகத் திருவிழாவில் எனக்குப் பரிசளித்த நூல்.

அன்றே படிக்கத் துவங்கினாலும் இந்த கொரோனா விடுமுறைதான் நூலை முழுதாகப் படிக்க உதவியது.


ஏன் இவ்வளவு தாமதமாகப் படித்தோம் என்று வருத்த வைத்தது. நல்ல கற்றல் அடைவுகளோடு இருக்கும் பள்ளி ஒன்று சிதிலமடைந்து தாழ்ந்து கொண்டே வரும் நிலையில் அங்கு வரும் அறிவொளி எனும் தலைமையாசிரியர் ஆசிரியர்களோடு பேசி மாற்றத்தை கொணர்கிறார்.

அறிவொளி மாணவர்களோடு பேசுவதுதான் அதிகம்.

பல்முனை நுண்ணறிவுக் கோட்பாடு
நியூரோ லிங்குவிஸ்ட்டிக் ப்ரோக்ராமிங்
மிட் பிரைன் ஆக்டிவிட்டி

என்று பல ஆயிரங்களை கட்டணமாக செலுத்தினால் மட்டுமே கற்றுக்கொள்ள இயலும் கோட்பாடுகளை ஜஸ்ட் லைக்தட் வள்ளன்மையோடு வழங்கியிருக்கிறார்.

நூலாசிரியர் பல்வேறு விருதுகளைப் பெற்ற மாணவ மனநலப் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்முனை நுண்ணறிவுக் கோட்பாட்டின் கூறுகளை எப்படி வகுப்பறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான கையேடு இது.

மொழித்திறன், கணிதத்திறன், இடம் சார்ந்த காட்சித்திறன், உடல் இயக்கத்திறன், இசைத்திறன், பிறருடன் கலந்து பழகும் திறன், தன்னைத்தானே அறியும் திறன் மற்றும் இயற்கையோடு ஒன்றிக்கும் திறன் எனும் அதி அவசியமான திறன்களை மாணவர் மத்தியில் ஏற்படுத்துவது குறித்த அற்புதமான வழிகாட்டி நூல் இது.

குறிப்பாக ஐந்தாம் அத்தியாயத்தில் என் பலம் என்ன, பலவீனம் என்ன? என்கிற பகுதியை ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் பயன்படுத்தும் அளவிற்கு நேர்த்தியாக இருக்கிறது. 100 கேள்விகள் அதற்கான மதிப்பெண்கள் -இறுதியில் கூட்டினால் அந்த மாணவரின் திறனை எம்.ஆர்.ஐ ஸ்கேன் போல அறிந்து கொள்ளலாம்.

36 அத்தியாயங்கள், வாசிக்க வழுக்கிக் கொண்டு ஓடுகின்றன. நேர்த்தியான எழுத்து, வாசகனுக்கு தோழமையாக, அவனை இழுத்துக் கொண்டு ஓடும் எழுத்து.

இருபத்தி ஐந்து வருட அனுபவம் இந்த நூலில் விரவி நூலினை ஆசிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்களில் ஒன்றாக வைத்திருக்கின்றது.

வாரம் ஒருமுறை படித்து, ஒரு பாடவேளையில் ஒரு அரைமணி நிறம் மட்டும் இந்த நூலில் உள்ள கருத்துக்களை மாணவர்களோடு பகிர்ந்தால் அற்புதமான கற்றல் அனுபவம் உறுதி.

ஆசிரியர்கள் அவசியம் கையில் வைத்திருக்க வேண்டிய நூல் இது.


தொடர்வோம்

அன்பன்
மது 

Comments

  1. இருபத்தி ஐந்து வருட அனுபவம் இந்த நூலில் விரவி நூலினை ஆசிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்களில் ஒன்றாக வைத்திருக்கின்றது.

    அவசியம் வாங்கிப் படிக்கிறேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. நல்லதொரு நூல் அறிமுகம்...

    ReplyDelete
  3. நல்லதொரு அறிமுகம். நன்றி கஸ்தூரி.

    ReplyDelete
  4. சிறப்பு அவசியம் படிக்க வேண்டும்

    ReplyDelete
  5. அருமையான புத்தகமாக இருக்கிறது. அறிவொளி என்கிற பெயரை பார்த்தவுடன், 27,28 ஆண்டுகளுக்கு முன்பு நம் தமிழ்நாட்டில் இருந்த அறிவொளி இயக்கம் தான் நியாபகத்துக்கு வந்தது.

    ReplyDelete
  6. பேரன்பும் பெருமகிழ்ச்சியும் தோழர். பயனுள்ள நூல் என தன் நூலைப் பலரும் பாராட்டுவதைக் கேட்பதை விட வேறென்ன பெரிய மகிழ்ச்சி ஒரு எழுத்தாளருக்குக் கிடைத்திட முடியும்.
    -பிரியசகி

    ReplyDelete
  7. ஐயா! ஆசிரியர்கள் மட்டும்தான் படிக்க முடியுமா? அல்லது பெற்றோர்களும் படிக்க உகந்ததா?

    ReplyDelete
  8. Anonymous19/4/20

    நல்ல தொரு நூல் அறிமுகம்

    கீதா

    ReplyDelete

Post a Comment

வருக வருக