கொஞ்சம் புதிய அறிவியல்(7)

அறிவியல் உலகில் விவாதிக்கப்படும் சில தகவல்கள் (7)


நுட்பத்தில் நீயா நானா?.

வைமாக்ஸ் மற்றும் யு.எம்.டி.எஸ் நுட்பங்களுக்கு இடையே நடக்கும் போட்டி


நேற்றுவரை ஒரு தொலைபேசி இருந்தால் மட்டுமே இணையச்சேவை கிடைக்கும் என்ற நிலை மாறி இன்று கம்பியில்லா தொலைதொடர்பு சர்வசாதரனமாகிவிட்டது. உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் செல்பேசி வழி இணையம் இந்தியாவில்தான் பயன்படுத்தப்படுகிறது என்பது ஒரு இனிய ஆச்சர்யம்.

தற்போதைய மேம்பட்ட கம்பியில்லா தகவல்தொடர்பு நுட்பம் வைமாக்ஸ் எனப்படுகிறது. வேர்ல்ட் வைட் இன்ட்ரோபெராபிலிட்டி பார் மைக்ரோவேவ் அக்செஸ் என்பதைத்தான் செல்லமாக வைமாக்ஸ் என சொல்கிறோம். இந்த நுட்பத்தின் மூலம் நொடிக்கு 30 இருந்து 40 மெகா பிட்களை அனுப்ப முடியும். வைமாக்ஸ் தனது சில பண்புகளை இதேபோன்ற கொரிய நுட்பமான வைப்ரோவிடம் இருந்து பெற்றது. வைமாக்ஸ் தனது போட்டியாளராக யு.எம். டி.எஸ் (யுனிவர்சல் மொபைல் டெலிகம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ்) கருதலாம். இதைதான் நாம் 3ஜி மோடங்களில் பார்க்கிறோம். போர்ஜி வந்தால் இந்த இரு நுட்பங்களும் பனால்.



இந்த வைமாக்ஸ்நுட்பம் வழக்கம்போல் ஐம்பது கி.மீ வரை தொடர்புதரும். தொடர்பைத்தரும் அமைப்பிற்கு அருகே இருந்தால் 4o Mbps வரை இயங்கலாம். தூரம் செல்ல செல்ல பயன்பாட்டிற்கு வரும் பிட் ரேட் குறையும். டவருக்கு பக்கம் எனில் ஒரு படம் 5 நிமிடத்தில் பதிவிறக்கம் ஆனால் தொலைவில் 20 நிமிடங்கள் ஆகலாம். தொலைவு கூடக் கூட பதிவிறக்க நேரமும் கூடும். விரைவில் ஒரு நல்ல அரசியல் தலைமை நமது தொலைதொடர்பு துறைக்கு கிடைக்கட்டும் நாமெல்லாம் 4ஜிக்கு போலாம்.

Comments