சொன்னாங்க

கூட்டத்தினர் கவனத்தை கவர்வது ஒரு கலை இங்கே ஒரு வித்தை

மா போ சி யின் மீசை நரைத்தது எவ்வாறு?

தமிழ் விளையாடிய நாட்கள்


ஒரு கூட்டத்தில் ம.போ.சி. கண்ணகியை பற்றி அற்புதமாக பேசிவிட்டு அமர்ந்ததும், கூட்டம் முழுவதும் அந்த அற்புதப் பேச்சில் மயங்கியிருந்தது. அடுத்துப் பேச வந்த திருமதி.சௌந்தரா கைலாசம் அவர்கள் கூட்டத்தினரின் கவனத்தை திருப்ப வேண்டுமே! என்ற என்னத்தை மனதில் கொண்டு பேசத் தொடங்கினார். ம.போ.சி.யின் மீசை ஏன் நரைத்திருக்கிறது என்பதை இன்றுதான் கண்டுபிடித்தேன் எனப் பேச்சைத் தொடங்கியதும், கூட்டத்தினர் ஆவலுடன் காரணத்தை அறிய காத்திருந்தனர். இப்படித் தேன் ஒழுகப் பேசினால், தமிழ்த் தேன் பட்டு மீசை நரைக்காமல் என்ன செய்யும்? என்றார். கூட்டத்தினரின் கைதட்டல் விண்ணைப் பிளந்தது!

எடுத்த எடுப்பிலேயே கூட்டத்தின் கவனத்தை பேச்சாளர் வெற்றிகொள்ளவிட்டால் பேச்சு அசத்தும் விதமாக இருக்காது. இத்போன்ற உத்திகள் பேச்சாளருக்கு அவசியம்.

Comments