சொன்னாங்க

புதுகை சில பழைய செய்திகள்

பண்டிட் மீனாட்சி சுந்தரம்பிள்ளை

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பண்டிட் மீனாட்சி சுந்தரம்பிள்ளை என்ற தமிழ் பேராசிரியர் புதுகை மன்னர் கல்லூரியில் பணியாற்றி வந்தார். மாஸ்கோவில் பணியாற்றும் தமிழ்ப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க தமிழாசிரியர் ஒருவர் தேவைப் பட்டார்.கடும் குளிர் பிரதேசமான ரஷ்யத் தலைநகருக்கு செல்ல யாரும் முன் வரவில்லை. இறுதியாக நமது தமிழாசிரியர் மாஸ்கா செல்ல தன விருப்பத்தை தெரிவித்தார். அதன்படி அவர் மாஸ்கோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மாஸ்கோ சென்ற அவருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பான வரவேற்பு, வாழ்த்துக்கள் குவிந்தன. பனி முடிந்து தாயகம் திரும்பும்போது அவருக்கு பெரிய அளவில் மாஸ்கா நகரவாசிகள் உள்பட அனைவரும் வழியனுப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது கூட்டத்திலிருந்த மாஸ்கா நகரவாசி ஒருவர் நம் ஆசிரியரை விளித்து, தாங்கள் எப்படி பண்டிட் ஜவர்ஹலால் அவர்களுக்கு உறவு எனக்கேட்டவுடன் தமிழாசிரியருக்கு ஆம் அல்லது இல்லை என சொல்ல முடியாத ஒரு இக்கட்டான நிலை தோன்றியதுடன், இத்தனை வரவேற்புகளும் தனது பெயரில் பாரதப் பிரதமரின் பெயருக்கு முன்னாலுள்ள பண்டிட் என்பதை கருத்தில் கொண்டுதான் பாரதப் பிரதமருக்கு என்ன உறவு எனக் கேட்டுள்ளார்கள் என்பதைப் புரிந்துகொண்ட பேராசிரியர் மேற்கண்ட கேள்விக்கு ஒரு புன்சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு தப்பியுள்ளார்.

Comments