எனக்குரிய இடம் எங்கே?

வாசிப்பு அனுபவப்பகிர்வு

எனக்குரிய இடம் எங்கே?

மாடசாமி


கல்லூரி மாணவர்களை நண்பர்களாகவும், நியாயமாகவும் நடத்தும் வகுப்பறைகளே இளம் மனங்களில் கருத்துகளை அல்ல, கேள்விகளை விதைக்கும் அக்கேள்விகளுக்கான விடைகளை ஒரு ஆசிரியரின் வகுப்பறை அனுபவங்களை விளக்குகிறது இந்நூல்.

ஒரு தமிழாசிரியர் எப்படி இருந்தால் தமிழுக்கு நல்லது. அப்படி இருப்பவர் ஐயப்பராஜ்.

மாணவர்களை தோழமையுடன் அணுக ஒரு ஆசிரியருக்கு ஆயிரம் தயக்கங்கள் இருக்கலாம். அந்த தயக்கங்கள் தகர்ந்தால் ஏற்படும் நேர்மறையான வகுப்பறை நிகழ்வுகள் இந்நூல்.

அகில இந்திய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது இந்நூல்.மிக நுட்பமான ஆழமான கல்விக்கூட சிந்தனைகள் கூட ஆசிரியர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். சில எளிய மொழி விளையாட்டுகளை அறிமுகம் செய்கிறது இந்நூல்.

கூட்டு வாசிப்பு
ஒரு செய்யுளின் பல வரிகளையோ வார்த்தைகளையோ ஒரு விளையாட்டின் ஆர்வத்தோடு வகுப்பே வாசிப்பது கூட்டு வாசிப்பாகும்.
இரும்பும் காந்தமும் விளையாட்டு
ஐந்து திணைகளும் காந்தம் என்றால் தினைகளுக்குள்ள பொருட்கள் இரும்பாகும். நெய்தல் என்ற காந்த மாணவர் வருணன் என்கிற இரும்பு மாணவரை ஈர்ப்பர். இரும்பு ஓடிப்போய் காந்தத்தின் அருகில் நிற்க வேண்டும். பல்வேறு முறையில் இந்த விளையாட்டை விளையாடலாம்.

கவியரங்கத்தை ஏற்பாடு செய்தல், கதை சொல்லக் கூறுதல் போன்றவை மாணவரின் மொழித்திறன் மேம்பாட்டின் நேரடி தொடர்புடையது என்பது ஆசிரியரின் கருத்து. அதுவே இப்போது உலகெங்கும் கல்வியாளர்களால் பரிந்துரைக்கப்படுகிறது ..

இப்புத்தகம் பல்வேறு வினாக்களை வாசகனின் மனத்தில் எழுப்புகிறது. விடைக்கான்போர் வித்தக ஆசிரியர்கள் பயிற்சி செய்வோர் மேன்மையான ஆசிரியர்கள்

நூல் தலைப்பு : எனக்குரிய இடம் எங்கே?
ஆசிரியர் :சா.மாடசாமி
பதிப்பகம் : அருவிமாலை
விலை : ரூபாய் 70/-

Comments