புற்றுநோயை குணப்படுத்த ஹெச்.ஐ.வி வைரஸ்!

சிந்தனை புதிது செய்தி புதிது
புதிய மருத்துவ ஆய்வுஹெச்.ஐ.வி வைரஸ் பெருக்கத்திற்கு மனித செல்பொருட்களை பயன்படுத்துகிறது. இடைவிடாது திடீர் மாற்றத்திற்கு உட்படுவதால் தொடர்ந்து திடீர் மாற்ற புரதங்களை உருவாகிக்கொண்டே இருக்கிறது இந்த வைரஸ். இதன் காரணமாகவே இந்த வைரஸ் மாறும் சூழல்களை தாக்குப்பிடிக்கிறது. மேலும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளில் இருந்தும் பாதுகாக்கப்படுகிறது. IBMC (Institut de Biologie Moléculaire et Cellulaire)இல் ஹெச்.ஐ.வி வைரசின் இந்த பண்பினை மடைமாற்றம் செய்து புற்றுநோயை குணப்படுத்த முயற்சிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்தால் தற்போதைய மருந்துகளில் முன்னூறில் ஒரு பங்கு மருந்தில் புற்றுநோயை குணமாக இயலும். இது ஆய்வகத்தில் நிரூபிக்கப்பட்டுவிட்டது! மேலும் அதிக அளவில் மருந்துகளை விழுங்கி அதன் மூலம் பல்வேறு பக்கவிளைவுகளை அடைய நேரிடும் துன்பத்திலிருந்து புற்றுநோயாளிகள் காக்கப்படுவார்கள்.

என்னைச்சட்டிக்கு பயந்து அடுப்பில் குதித்த கதையாய் புற்றுக்கு பதில் ஏப்பு வராமலிருந்தால் சரி.

Comments