மைக்கல் காலின்ஸ்

malartharu michael collins film 1996 IRA kasthuri rengan
உலகையே தனது காலனியாக வைத்திருந்த இங்கிலாந்தில் அரியணையில் அதிர்வேட்டு வைத்த ஐரிஷ் புரட்சியாளரின் வாழ்வு மைக்கல் காலின்ஸ்.  பொதுவாக புரட்சியாளர்களை திரையில் கொண்டுவருவது கனத்த சவால். அவர்களை இயக்கும் பெருநெருப்பு திரையில் வரவேண்டும். இந்த சவாலை அனாயாசமாக சமாளித்து தனது முத்திரையை பதித்திருக்கிறார் இயக்குனர்.

திரைக் கதையில் புகுந்து விளயாடி ஆரம்பத்தில் இருக்கும் விறுவிறுப்பை கடைசிவரை குறையாமல் காப்பாற்றியிருக்கிறார். இதற்காக இயக்குனருக்கு ஒரு பெரிய மலர்சென்டையே தரலாம். திரையில் படம் விரியும்  போது  பாரவையாளர்கள் மைக்கலின் சக போராளியாக உணர்வார்கள். 

malartharu michael collins film 1995 IRA kasthuri rengan
மிகச்சாதரனமாய் இரண்டு சைக்கிள்களில்  சென்று பிரிட்டிஷ் அரசின் கட்டிடத்தில் ஒரு பாமை தூக்கி போட்டுவிட்டு சைக்கிளிலேயே விரைந்து மறைவதும் அதை காட்சிப்படுத்திய விதமும் அடடா அடடா. 

பிரேம் நிறைய நகரும் இரண்டு சைக்கிள்களை தொடரும் விசில் ஒலிகளும் மெல்ல டிசால்வ் ஆகும் திரையும் காட்சிக்கு ஒரு தனித்த அழகை தருகின்றது.
குண்டுவெடிப்பதை அழகென்று சொல்கிறேன் என்று யாரும் சண்டைக்கு வரவேண்டாம். ஒரு தபா பார்த்துட்டு அப்புறம் சொல்லுங்க. 

malartharu michael collins film 1996 IRA kasthuri rengan
உண்மையான மைக்கல் காலின்ஸ் 
சொல்லாற்றல் மிக்க பேச்சாளர், செயல்திறம் மிக்க போராளி எப்படி சக போராளிகளின் சுயநலமிக்க சதிவலையில் மாட்டி பலியாகிறார் என்கிற போது மனம் கணக்கும். 

ஈழம் உங்கள் நினைவில் வந்தால் நான் பொறுப்பில்லை. வனவாசமும் நினைவுக்கு வரலாம் சிலருக்கு. 

malartharu michael collins film 1995 IRA kasthuri rengan
ஆயுதப் போராளியாய் வாழ்க்கையை துவங்கி அதனை கைவிட சொல்லும் தருணத்தில் காலின்ஸ் பலியாவது நிறய நாட்களுக்கு என்நினைவில் நின்றது. நல்லவன் வாழ்வான் என்று சொல்வது அவர்கள் மரணத்திற்கு பிறகு வாழும் புகழ்வாழ்வை தானோ? சமூக நலனுக்காக உயிர் துறக்கும் சாமானியன் அமரருள் வைக்கப் படுவதை உணர்ந்த தருணம் அது.


காத்திருக்கும் காதலியை மணம்முடிக்க தேவாலயத்திற்கு விரையும் காலின்ஸ் நெற்றி பொட்டை தூரத்தில் இருக்கும் ஒரு மலையுச்சியிலிருந்து குறிவைத்து அடிக்கிறான் ஒரு விடலை போராளி. 

malartharu michael collins film 1996 IRA kasthuri rengan
சமூக சிந்தனையாளர்கள் மாணவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். 

படக்குழு

இயக்குனர்                 நீல் ஜோர்டான் 
கதை                            நீல் ஜோர்டான்
இசை                           எலியட் கோல்டன்தாள் 
ஒளிப்பதிவு               க்றிஸ் மென்ஜஸ் 
கதாநாயகன்             லியாம் நீசன் 
நாயகி                          ஜூலியா ராபர்ட்ஸ் 
வில்லன்                    ஆலன் ரிக்மேன் 
(காலின்ஸின் அரசியல் பகைவன்,துரோகியாக)
malartharu michael collins film 1996 IRA kasthuri rengan

Comments